தென் தமிழகத்தில் முதன் முறையாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் காது, மூக்கு, தொண்டை பிரிவில் தூக்கத்தில் ஏற்படும் சுவாசக் கோளாறு உள்ளிட்ட பிரச்சனைகளைக் கண்டறிவதற்காக ரூ.20 லட்சம் மதிப்பிலான கருவியுடன் தூக்க ஆய்வகம் தொடங்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்ட ஆட்சியரின் நமக்கு நாமே திட்ட நிதியில் 20,00,000 மதிப்பில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தூக்கத்தின் போது ஏற்படும் குறட்டை மற்றும் மூச்சு திணறல் ஆகியவற்றை கண்டறிந்து பரிசோதனை செய்து அதற்கான காரணங்களை துல்லியமாக கண்டறிய உதவும் புதிய சிகிச்சை பிரிவை மருத்துவமனை முதல்வர் சங்குமணி தொடங்கி வைத்தார்.
தூக்கத்தில் ஏற்படக்கூடிய மூச்சுத் திணறல், குறட்டை ஆகியவற்றுக்கான காரணங்களை துல்லியமாகக் கண்டறியும் பாலிசோம்னோகிராபி கருவி இந்த ஆய்வகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
தொடக்க நிகழ்ச்சியில் முதல்வர் சங்குமணி கலந்து கொண்டு, பாலிசோம்னோகிராஃபி (polysomnography) என்ற இந்த புதுக் கருவியை பார்வையிட்டார்.காது மூக்கு தொண்டைப்பிரிவு தலைவர் பேராசிரியர் தினகரன், மருத்துவக் கண்காணிப்பாளர் பேராசிரியர் எம்.பாலசுப்பிரமணியன், பேராசிரியர் அருள் சுந்தரேஸ்வரர், இணைப்பேராசிரியர் தங்கராஜ் ,உதவிப் பேராசிரியர் விஜய் பாபு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
சுவாசத்தின்போது எடுத்துக் கொள்ளப்படும் ஆக்ஸிஜன் அளவு, ரத்தத்தில் குறைவாக இருக்கக்கூடிய ஆக்ஸிஜன் அளவு, இதயம், நுரையீரல் கோளாறுகள், ரத்த அழுத்தம் ஆகியவற்றை இந்த கருவியின் மூலம் கண்டறியலாம். முக்கியமாக, குறட்டைக்கான காரணங்களைக் கண்டுபிடித்து அதற்கான சிகிச்சை அளிக்க உதவுகிறது. உடல் பருமன், மூக்கடைப்பு, உயர் ரத்த அழுத்தம், நுரையீரல் பாதிப்புகள், இதய கோளாறுகள் போன்ற பாதிப்பு இருப்பவர்கள் பாலிசோம்னோகிராபி கருவியில் பரிசோதனை செய்து மேல் சிகிச்சை பெறலாம்.
பாலிசோம்னோகிராபி கருவியில் பரிசோதனை செய்வதற்கு தனியார் மருத்துவமனைகளில் ரூ.2ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவச பரிசோதனை செய்யப்படும் மேலும் இதன் மூலம் ECG, EEG,ENG, EOG, SPO2 போன்ற பரிசோதனைகளும் செய்துகொள்ளலாம்.
பேராசிரியர் தினகரன் கூறுகையில், ‘‘தூக்கத்தின்போது ஏற்படும் மூச்சுத்திணறல் மற்றும் குறட்டை ஆகியவற்றைக் கண்டறிவதற்கான பரிசோதனை செய்யவும், அதற்கான காரணங்களையும் கண்டறிவதற்கும் இந்தக் கருவி பயன்படுகிறது.
உடல் பருமண் உள்ளவர்கள், மூக்கடைப்பு உள்ளவர்கள், உயர் ரத்த அழுத்தம், நுரையீரல் பாதிப்புகள், இதயக் கோளாறு உள்ளவர்களுக்கு இந்தக் கருவியைக் கொண்டு பரிசோதனை செய்து, அந்த தொந்தரவுகளையும் சரி செய்யலாம்.
குறிப்பாக இந்தக் கருவி, குறட்டைக்கான காரணங்களைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்க பெரிதும் உதவுகிறது. இதுவரை அதற்கான பரிசோதனை செய்யப்படவில்லை.
இக்கருவி மதுரைக்கு வந்துள்ளது ஏழை நோயாளிகளுகக்கு வரப்பிரசாதமாகும். இந்தப் பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனைகளில் ரூ.3 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் கட்டணம் பெறப்படுகிறது.
ஆனால், இனி அரசு ராஜாஜி மருத்துவமனையில் இலவசமாக இந்த கருவியை கொண்டு இந்த நோய்களுக்கு எளிதாக சிகிச்சை அளிக்கலாம். நோயாளிகள் பரிசோதனையை இலவசமாக முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தில் பெற்றுக் கொள்ளலாம், ’’ என்றார்.
இந்த இயந்திரம் மூலம் சுவாசத்தில் உள்ள ஆக்சிஜன் மற்றும் இரத்தத்தில் காணப்படும் குறைவாக செல்லகூடிய ஆக்சிஜன் குறைபாடு, இதயம், நுரையீரல் கோளாறுகள், மற்றும் ரத்த அழுத்தம் அனைத்தையும் கண்டறியலாம். இதில் முக்கியமாக குறட்டைக்கான காரணங்களை கண்டுபிடித்து அதற்கேற்றார் போல சிகிச்சை வழங்கப்படும்.
இதேபோன்று உடல்பருமன் உள்ளவர்கள், மூக்கடைப்பு உள்ளவர்கள், உயர் ரத்த அழுத்தம், நுரையீரல் பாதிப்பு, இருதய கோளாறுகள் உள்ளவர்கள் இந்த தூக்க ஆய்வக பரிசோதனை மூலமாக பயன்பெறலாம்.
அரசு ராஜாஜி மருத்துவமனை
பனகல் ரோடு, மதுரை – 625 020
மின்னஞ்சல் : deanmdu@gmail.com
தொலைபேசி : 04522533230