Home>>இந்தியா>>உலக ஆணழகன் போட்டியில் 100 கிலோ எடை பிரிவில் ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற சென்னையைச் சேர்ந்த தமிழர் இராஜேந்திரன் மணி
இந்தியாஉடல்நலம்உலகம்செய்திகள்விளையாட்டு

உலக ஆணழகன் போட்டியில் 100 கிலோ எடை பிரிவில் ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற சென்னையைச் சேர்ந்த தமிழர் இராஜேந்திரன் மணி

தாய்லாந்தில் நடைபெற்ற உலக ஆணழகன் பட்டத்திற்கான போட்டியில் 100 கிலோ எடை தூக்கும் பிரிவில் கலந்து கொண்டு முதல் பரிசை ஐந்தாவது முறையாக வென்றெடுத்து இருக்கும் ராஜேந்திரன் மணியை பற்றிய எந்த ஒரு செய்தியையும் எந்த ஒரு ஊடகத்திலும்  தேடினால் கிடைக்கவே இல்லை. இது மிகுந்த வேதனையை அளித்தது. மேலும் இதைப் பற்றிய கூடுதலாக தெரிந்து கொள்ள இந்த அமைப்பு பற்றி தேடும் போது அதில் ஒரு சில இணையத்தில் மட்டுமே இதற்கான விடயங்கள் கிடைத்தது. அதிலும் குறிப்பாக இந்த 100 கிலோ எடை பிரிவில் பற்றியோ, அதில் வெற்றி பெற்ற ராஜேந்திரன் மணியை பற்றிய எந்த ஒரு செய்தியும் குறிப்பிடாதது மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிப்பதோடு மட்டுமல்லாமல் இது வேண்டுமென்றே செய்யப்படுவது போலவே தோன்றுகிறது. வெற்றி பெற்றால் இந்தியன் என்றும் தோல்வியுற்றால் தமிழன் என்றும் சொல்வது ஒன்றும் புதிதல்ல.

தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற உலக ஆணழகன் போட்டியில் ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டம் என்று சென்னை சேர்ந்த தமிழர் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.

சென்னை அடுத்த தாம்பரத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மணி. இவர் மாடம்பாக்கத்தில் சொந்தமாக ஜிம் வைத்து நடத்தி வருகிறார். தாய்லாந்து நாட்டில் உள்ள புகேட் நகரில் நேற்று உலக ஆணழகன் போட்டி நடைபெற்றது. உலகம் முழுவதிலும் இருந்து 44 நாடுகள் இந்த போட்டியில் கலந்து கொண்டன. இந்த போட்டியில் ‘ஹெவி வெயிட்’ பிரிவில் 100 கிலோ எடை கொண்ட போட்டியாளர்களுக்கான பிரிவில் ராஜேந்திரன் மணி கலந்து கொண்டார்.

தொடர்ந்து போட்டியில் கலந்து கொண்டவர்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் ராஜேந்திரன் மணி ஐந்தாவது முறையாக உலக சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார். ஏற்கனவே இந்தியாவுக்காக இவர் நான்கு முறை உலக ஆணழகன் பட்டம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது ஐந்தாவது முறையாக ஆணழகன் பட்டம் வென்றுள்ள ராஜேந்திரன் மணியை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

மேலும் இவர் இதுவரை பெற்ற பட்டங்கள்

Mr World x 5 முறை
Mr Asia x 3 முறை
Mr India x 14 முறை
Mr Services x 12 முறை

மேற்கண்ட இத்தனை பட்டத்தையும் பெற்றெடுத்த இவரைப் பற்றிய எந்த ஒரு செய்தியும் இணையத்தில் ஊடகத்திலும் பார்க்க முடியாதது மிகுந்த அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் அளிக்கிறது.

செய்தி சேகரிப்பு

இளவரசி இளங்கோவன்

மொன்றியல், கனடா

 

Leave a Reply