ஏழை மாணாக்கர்கள் பள்ளிக்கு வரும் பொழுது மதிய உணவு வழங்கப்பட்டு வந்தது, அனால் கொரோனா பேரிடர் காலம் என்பதால் அரசு பள்ளிகளில் விடுமுறைகள் அளிக்கப்பட்டு நிலையில் உள்ளது. ஆகையால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அந்த ஏழை மாணாக்கர்களுக்கு உதவ வேண்டி பள்ளி வேலை நாட்களுக்கான அரிசி, பருப்பு உள்ளிட்ட உலர் உணவுப் பொருட்கள் வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளிகள் திறக்கப்படும் நாள் வரை மாணவர்களுக்கு, பள்ளி வேலை நாட்களுக்கான அரிசி, பருப்பு உள்ளிட்ட உலர் உணவுப் பொருட்கள் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) August 20, 2020