Home>>செய்திகள்>>தகுதி பெற்றும் பெண் என்பதால் போட்டியில் பங்கேற்க விடாமல் தடுப்பதா? 
செய்திகள்விளையாட்டு

தகுதி பெற்றும் பெண் என்பதால் போட்டியில் பங்கேற்க விடாமல் தடுப்பதா? 

வீராங்கனை சமீஹா பர்வீன் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம்  இந்திய ஒன்றிய அரசுக்கு எச்சரிக்கை…!

திறமையுள்ள விளையாட்டு வீராங்கனைகளை ஊக்கப்படுத்த வக்கற்ற ஒன்றிய அரசையும் வக்கணையாக அறிக்கை விடும் தமிழ்நாடு அரசையும் செமத்தியாக செவுளில் அரைந்திருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்.
கன்னியாகுமரி மாவட்டம்,கடையாலுமூடு கிராமத்தில் இருந்து
பதினோரு தங்கம் உள்ளிட்ட ஏராளமான பதக்கங்களையும் பட்டயங்களையும் பெற்று ஜொலித்துக் கொண்டிருக்கும் செவித்திறன் மற்றும் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி வீராங்கனை சமீஹா பர்வீன் தொடுத்த வழக்கில் மத்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் பதிலளிக்காவிட்டால் நீதிமன்றம் நேரடியாக உத்தரவிட நேரிடும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை.

போலந்து நாட்டில் நடைபெறும் சர்வதேச தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய ஒன்றிய விளையாட்டுத் துறை அதிகாரிகளால் ஏற்படுத்தப்பட்ட சூழ்ச்சியை தமிழ்நாடு அரசாலும் நாடாளுமன்ற உறுப்பினர்களாளும் முடியாததை சட்டத்தின் துணைகொண்டு உறுதியாக நின்ற சாதித்து காட்டியிருக்கிறார் வீராங்கனை சமீஹா பர்வீன் அனைத்து திறமையும் உள்ள வீராங்கனையை இனவெறியோடு புறக்கணிக்கப் படுவதை அறிந்து கொண்டு அவருக்காக வழக்காட தானாக முன்வந்த உச்சநீதிமன்ற வழக்கறிஞர் அன்புக்குரிய திரு. பிரபாகரன் அவர்களுக்கும் நமது நெஞ்சார்ந்த நன்றிகளும்… வாழ்த்துக்களும்… பாராட்டுக்களும்…
Source: Mohammed Ghouse ,Mrp-Act
நன்றி!!!

செய்தி சேகரிப்பு:
இரா.செந்தில்குமரன்,
மன்னார்குடி

Leave a Reply