Home>>தமிழ்நாடு>>அரசின் வழிமுறைகளை பின்பற்றாத மன்னார்குடி மருத்துவமனை
தமிழ்நாடுமருத்துவம்

அரசின் வழிமுறைகளை பின்பற்றாத மன்னார்குடி மருத்துவமனை

மன்னார்குடி: மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் கடந்த 18-8-20 அன்று சேர்க்கப்பட்டு கோபலசமுத்திரம் கீழவீதியை சேர்ந்த உயிரிழந்த 55 வயது மதிக்கதக்க பெண்மணியை கொரானா என்று கூறி நகராட்சி ஊழியர்களை வைத்து உடனடியாக எரியூட்டியுள்ளனர்.

இன்று நகராட்சி அதிகாரிகள் அவருக்கு கொரானா தொற்று இல்லை என்று அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

18-8-20 அன்று அவர் கொரானா வால்தான் இறந்தார் என்று எப்படி முடிவு செய்தனர்?
கொரானா என்பதற்கான பரிசோதனை முடிவு எதுவும் வந்ததா?
அப்படி என்றால் இன்று இறந்தவருக்கு கொரானா இல்லை என்று எப்படி கூறுகின்றனர்?
அதற்கு காரணம் என்ன?
கொரானாவால் இறந்தார் என்று எதை வைத்து உறுதி செய்து கொண்டு நகராட்சி நிர்வாகம் அந்த உடலை எரியூட்ட ஒத்து கொண்டது?
நகராட்சிக்கு கொரானா வால்தான் இறந்தார் என்று உறுதி செய்து கூறியது யார்?
எந்த வித ஆதாரமும் இல்லாமல் ஒரு உடலை பெற்று எரியூட்டினால், யாரோ சில தவறானவர்கள் இதை தவறாக பயன்படுத்த மாட்டார்களா?
இதனால் சில சட்ட சிக்கல்கள் எழாதா?

இதனால் அந்த பெண்மனியின் உறவினர்கள் எந்த அளவுக்கு துன்பபட்டிருப்பார்கள், அவரின் இறுதி அஞ்சலியை கூட அவர்களால் முழுமையாக முறையாக செய்ய முடியாமல் போய் விட்டதே.

அவரது இறப்பில் கொரானா என்று சந்தேகம் இருந்தால், பரிசோதனை முடிவு வரும் வரை
பிணவறையில் உரிய பாதுகாப்புடன் வைத்திருக்கலாமே?

இந்த தவறுகளுக்கு யார் பொறுப்பேற்பது?

மேலும் இறுதி சடங்கிற்கு அரசு விதித்துள்ள விதிமுறைகளை மக்களும் பின்பற்றுவதில்லை. அரசு துறைகளும் அதை முறையாக கண்காணிப்பதில்லை, இதனால் ஏற்படும் அச்சத்தினாலும் இது போன்ற குழப்பமான சூழ்நிலையை பலர் உருவாக்குகிறார்கள்.

மரணத்தில் சந்தேகம் என்றால், பரிசோதனை முடிவு வரும் வரை உரிய பாதுகாப்புடன் பிணவறையில் வைத்திருப்பது தான் நல்லது. இதை கவனமாக கையாளவில்லை என்றால் சிலர் இதை தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளது.

என மன்னார்குடி முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் திரு.ஆனந்தராஜ் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்.


அருள்பாண்டியன், பூவனூர்,
மன்னார்குடி

Leave a Reply