Home>>இந்தியா>>மீனவர் ராஜ்கிரண் கொலையில் நீதி வேண்டி அவரின் மனைவி சட்டம் போராட்டத்தை துவங்கியுள்ளார்.
இந்தியாஉலகம்சிறிலங்காசெய்திகள்தமிழ்நாடுமீன்பிடி

மீனவர் ராஜ்கிரண் கொலையில் நீதி வேண்டி அவரின் மனைவி சட்டம் போராட்டத்தை துவங்கியுள்ளார்.

#Justice for fisherman Rajkiran

இலங்கை கடற்படையினரால் அநியாயமாக கொல்லப்பட்ட கோட்டைப்பட்டினம் மீனவர் ராஜ்கிரண் கொலையில் நீதி வேண்டி மீனவம் காப்போம் & மக்கள் கண்காணிப்பகம் உதவியுடன் அவரின் மனைவி பிருந்தா நடத்திய சட்ட போராட்டத்தின் தீர்ப்பாக FIR பதிவு செய்யப்பட்டதோடு, மறு உடற்கூராய்வு நாளை 18.11.2021 அன்று நடைபெற உள்ளது.

மீனவர்களை உதாசினப்படுத்தி நம்மவர்களின் உயிரிழப்பை கொச்சைப்படுத்தும் விதமாக எந்தவித வழக்குபதிவும் செய்யப்படாமல் புதைத்த அதிகாரிகளுக்கு சட்டத்தில் சாட்டை அடி.

பாமர மீனவன், அதிகாரமற்ற அனாதை, நீதிமன்றத்தை நாட நாதியற்றவன் என்று எண்ணிய அத்துணை அதிகாரவர்க்கத்திற்கும் சட்டத்தால் சாட்டை அடி.

தமிழக மீனவனை கொன்றால் எவன் கேட்பான் என எண்ணிய அனைவருக்கும் மதுரை உயர்நீதிமன்றத்தின் சார்பில் சட்டத்தால் சாட்டை அடி.

அப்பாவி மீனவனை அநியாயமாக கொன்று குவிக்கும் இலங்கை அரசுக்கும் அதை வாய்பொத்தி மௌனித்து வேடிக்கை பார்க்கும் இந்திய அரசுக்கும் நீதியரசர்களின் சட்டத்தால் சாட்டை அடி.

அப்பாவி மக்கள் கொடுக்கும் கோரிக்கை மனுக்களை குப்பைத்தொட்டியில் வீசி எரியும் உயர் அரசு இயந்திரங்களுக்கு சட்டத்தால் சாட்டை அடி.

நாளை காலை ஒன்றிணைவீர் மீனவர்களே, கட்சி மதம் சாதி இயக்கம் சங்கம் கழகம் பாகுபாடு இல்லாமல் அனைத்து மீனவர்களும் அணிதிரள வேண்டுகிறோம்.

கோட்டைப்பட்டினம் நோக்கி பயணப்படுங்கள் உறவுகளே, சட்டத்தின் சாட்டை அடியை நேரில் காண, நம் தம்பி ராஜ்கிரண் உடலை உடற்கீராய்விற்கு பின் மரியாதையுடன் மண்ணில் புதைப்போம்.


திரு. இ.தர்மராஜ்,
மீனவம் காப்போம் மக்கள் இயக்கம்.


செய்தி சேகரிப்பு:
திரு. கார்த்திகேயன் சந்தானகிருஷ்ணன்.

Leave a Reply