Home>>கல்வி>>தெப்பக்குளம் தூயவளனார் நடுநிலைப் பள்ளி வளாகத்தின் அவலநிலை
கல்விசெய்திகள்தமிழ்நாடு

தெப்பக்குளம் தூயவளனார் நடுநிலைப் பள்ளி வளாகத்தின் அவலநிலை

திருவாருர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள தெப்பக்குளம் தூயவளனார் நடுநிலைப் பள்ளி (சின்ன கான்வென்ட்) வளாகத்தின் மிக அருகிலேயே குப்பைகளை கொட்டி வருகிறார்கள்.

ஊரெங்கும் கிருமி தொற்று அபாயம் உள்ள இக்கட்டான இந்நிலையில், ஒரு தொடக்கப்பள்ளி வளாகமே குப்பை கிடங்காக மாறிவருகிறது.

தற்போது பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை தொடங்கி மக்கள் நடமாடும் பகுதியாகவும், குழந்தைகள் விளையாடும் இடம் குப்பை கிடங்காவது சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கும்.

மன்னார்குடி நகராட்சி நிர்வாகம் இதுபோன்று அலட்சியமாக செயல்படுவதாகவும் அதுபோல இரவு நேரங்களில் அப்பகுதி இளைஞர்கள் பள்ளி வளாகத்தில் அமர்ந்து மது அருந்துவதும் வேதனையை ஏற்படுத்துகிறது. காவல்துறையினர் இதுபோன்று செயல்படுகிறவர்களை எச்சரிப்பது அனைவருக்கும் நலம். இந்த சிக்கலெல்லாம் முளையிலேயே கிள்ளி எறிய வேண்டிய தொல்லைகள், இவைகள் வளர்ந்து வேரானால் பிறகு கோடாரியை தேடும் நிலைவரும் என்று மக்கள் கோரிக்கை வைத்தனர்.


இராசசேகரன்,
மன்னார்குடி.

Leave a Reply