01-09-2020ம் தேதியில் இருந்து தமிழகத்தில் உள்ள பொது நூலகங்களைத் திறக்க மாநில அரசு அனுமதியளித்துள்ளது.
சென்னையில் உள்ள கன்னிமரா, அண்ணா நூற்றாண்டு நூலகம் மற்றும் மாவட்ட மைய நூலகங்கள் என சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூலகங்கள் கடந்த மார்ச் மாதம் ஒன்றியம் தழுவிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டதில் இருந்து மூடப்பட்டுள்ளன.
நூலகங்களைத் திறப்பது குறித்து பொதுமக்களின் கோரிக்கையை அடுத்து பொது நூலகங்கள் இயக்குனர் அரசுக்கு பரிந்துரை செய்தார். அதன்படி அனைத்து பொது நூலகங்களையும் செப்டம்பர் முதல் தேதியில் இருந்து திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அனைத்து நூலகங்களும் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செயல்படும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 65 வயதுக்கு மேற்பட்டோர், குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்களுக்கு நூலகங்களில் அனுமதியில்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.