Home>>அரசியல்>>தமிழ்நாடு சட்டப்பேரவையின் பொதுக்கணக்கு குழு காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆய்வு
திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் க.மாரிமுத்து
அரசியல்செய்திகள்தமிழ்நாடு

தமிழ்நாடு சட்டப்பேரவையின் பொதுக்கணக்கு குழு காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆய்வு

தமிழ்நாடு சட்டப்பேரவையின் பொதுக்கணக்கு குழு காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆய்வு: திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினர் திரு. க.மாரிமுத்து உள்ளிட்ட உறுப்பினர்கள் கள ஆய்வில் பங்கேற்றனர்.

தமிழ்நாடு சட்டப்பேரவையின் பொதுக்கணக்கு குழு தலைவர் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமாகிய திரு. கு.செல்வப்பெருந்தகை அவர்கள் தலைமையில் இன்று (09/12/2021) காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இக்குழுவின் உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களாக திருத்துறைப்பூண்டி திரு. க.மாரிமுத்து, பண்ருட்டி திரு. தி.வேல்முருகன், பாபநாசம் முனைவர் எம்எச்.ஜவாஹிருல்லா, காட்டுமன்னார் கோவில் திரு. சிந்தனைச்செல்வன், சங்கரன்கோவில் திரு. ஈ.ராஜா, திரு. பிரகாஷ் உள்ளிட்டோர் கள ஆய்வில் பங்கேற்றனர.

முதலாவதாக குன்றத்தூர் தாலுக்கா மாங்காடு பேரூராட்சி அலுவலகம், மாங்காடு பேரூராட்சி ஜனனி நகர், சக்திகணபதி நகர் உள்ளிட்ட மழை பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு அங்கு வசிக்கும் பொதுமக்களை சந்தித்து அவர்கள் குறைகளை கேட்டறிந்தனர். அதனை தொடர்ந்து புவனேஸ்வரி நகர் பகுதியில் அடையாறு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மேம்பாலம் மற்றும் நீர் வள ஆதார துறை சார்பில் வைக்கப்பட்ட புகைப்பட கண்காட்சி ஆகியவற்றை பார்வையிட்டனர்.

குன்றத்தூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி குழந்தைகளை சந்தித்து அவர்களுடன் உரையாடினார்.

சிறுமாத்தூர் ஊராட்சியில் உள்ள மிடாஸ் மதுபான தொழிற்சாலை, பிள்ளைபாக்கம் ஊராட்சியில் உள்ள தனியார் அலுமினிய தொழிற்சாலை ஆகியவற்றில் உபயோகப்படுத்தப்பட்ட நீர் சுழற்சி முறை குறித்து கேட்டறிந்தனர்.

படப்பை ஊராட்சியில் செயல்பட்டுவரும் கால்நடை மருத்துவமனை ஆய்வு மேற்கொண்டு அதற்கான புதிய கட்டிடம் கட்ட விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

திருபெரும்புதூர் அரசு பொது மருத்துவமனையில் நோயாளிகள் மற்றும் அப்பகுதி மக்களிடையே குறைகளை கேட்டறிந்தனர்.

வரதராசபுரம் ஊராட்சியில் மழையால் பாதிக்கபட்ட பகுதிகளை பார்வையிட்டு மக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தூய்மை பணியில் ஈடுபடும் பணியாளர்கள் உடைமாற்ற புதிதாக கட்டபட்ட கட்டிட வேலைபாடுகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின்போது, தமிழக சட்டப்பேரவை செயலாளர் கி.சீனிவாசன், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம்.ஆர்த்தி ஐஏஎஸ், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.பன்னீர்செல்வம், ஊரக முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதேவி, ஆகியோர் உடனிருந்தனர்.


செய்தி உதவி:
தோழர் கா.லெனின்பாபு,
திருத்துறைப்பூண்டி.

Leave a Reply