Home>>செய்திகள்>>கொரோனா அறிகுறி இருந்தால் மட்டுமே இனி பரிசோதனை மற்றும் புதிய வழிகாட்டு முறைகள் வெளியீடு
செய்திகள்தமிழ்நாடு

கொரோனா அறிகுறி இருந்தால் மட்டுமே இனி பரிசோதனை மற்றும் புதிய வழிகாட்டு முறைகள் வெளியீடு

கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டோருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு அறிகுறி இருந்தால் மட்டுமே பரிசோதனை செய்ய வேண்டும்’ என புதிய வழிகாட்டு நெறிமுறைகளை சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை:

கொரோனா பரிசோதனை முடிவுகள் இல்லாமல் தமிழகம் வரும் அனைத்து வெளிநாட்டு பயணியருக்கும் கொரோனா சோதனை கட்டாயம் செய்யப்பட வேண்டும்

தொற்று உறுதி செய்யப்பட்டோருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு அறிகுறி இருந்தால் சோதனை செய்யலாம். அறிகுறி உள்ள முன்கள பணியாளர்கள் அனைவருக்கும் சோதனை கட்டாயம்

அதி தீவிர அறிகுறி உள்ளவர்கள் அதிக பாதிப்பு உள்ளவர்கள் கட்டுப்பாட்டு பகுதியில் வசிக்கும் அறிகுறி உள்ளவர்கள் மருத்துவமனையில் அறிகுறியுடன் சிகிச்சை பெறுவோருக்கு பரிசோதனை கட்டாயம் செய்யப்படும்

வெளிமாநிலங்களில் இருந்து வருவோர் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும்.

Leave a Reply