ஐயா தமிழ்திரு. கிரா எனும் கி. ராசநாராயணன் அவர்களின் “கோப்பல கிராமம்” புதினம் வாசிப்பு அனுபவம்.
விசையநகர பேரரசு இறுதி காலத்திற்க்கும் ஆங்கிலேயர் வருகைக்கும் இடைபட்ட காலத்தையும் 1858ல் இங்கிலாந்து விக்டோரியா மாகராணி கும்பினி ஆட்சியை தான் ஏற்றுக்கொண்டு ஆட்சி அமைக்கும் காலம் வரை பேசுகிறது.
கதைக்களம் ஆந்திரவில் இருந்து தெழுங்கு பேசும் கம்மாவார்கள் அதாவது இப்ப உள்ள கம்மநாயிடு மக்கள் ஏன் அங்கிருந்து அரவதேசம் என அவர்கள் கூறும் தமிழகத்திற்க்கு வருகிறார்கள் என்பதே கதைக்களம்.
முதல் 10பக்கங்கள் ஒரு மாதிரியாக புரியாதபடி நகரும் அதை வைத்து முடிவு செய்துவிடாதீர்கள். அதன் பிறகுதான் கதையின் போக்கை உணர்ந்து அதில் லாயித்து சுவாரசியம் மிகுந்த பயணம் தொடங்கும்.
ஒரு பெண் தன் கணவனிடம் சண்டையிட்டு கோவித்துக்கொண்டு மங்கமா சாலையில் நடந்து வந்துகொண்டு இருக்கிறாள்தனியாக, வரும் வழியில் ஒரு ஊரணியை பார்கிறாள் கண்டதும் வரண்டு கிடந்த நாவை உடலையும் நனைத்துக்கொள்ள அதன் உள்ளே இறங்குகிறாள், அவள் தாகத்தை போக்கி கொண்டு இருக்க ஒருவன் அங்கு வருகிறான்.
அவள் காதில் கிடக்கும் பம்படம் அவன் கண்ணை பரிக்கிறது. அதை அவளிடமிருந்து பரிக்க முயல்கிறான், அவள் விடுவதாக இல்லை அவளை விடுவிக்க அவளை தன் காலால் தண்ணீருக்குள் அவள் முகத்தை அமுக்குகிறான், அவன் கால் கட்டவிரலை கடித்து கொண்டு விட மறுக்கிறாள் அவளை தண்ணியேலே அமிக்கி கொண்று விடுகிறான்( இங்கு இருந்து தான் அந்த முதல் மரியாதை காட்சி அச்சு பிசுக்காமல் சுடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 1976ல் எழுதப்பட்ட நூல் இது).
அப்போது ஒரு மாட்டு வண்டி அந்த ஊரணியை நேக்கி உள்ளே இறங்குகிறது மாடுகளின் தங்கம் போக்க, அதில் கிருடிணப்ப நாயக்கர் என்பவர் வருகிறார் அதன் பின் என்ன நடக்கிறது என்பதே கதை. புதினத்தின் பயணப்பாதை இந்த ஒரு புள்ளியை வைத்துக்கொண்டு ஆசிரியர் புனையத்தொடங்குகிறார்.
கதையின் ஒவ்வொரு நகர்விலும் அதற்கான காரணம் என்ன என்பதை பக்குவமாக கதையின் போக்குக்கு ஏற்ப கோத்து கதை காலத்துக்கு முன் இந்த கம்மாவார்கள் எப்படி இங்க வருகிறார்கள் என்பதை 137வயது மிகுந்த பூட்டி மங்கையதாயரு மூலமாக நமக்கு சொல்கிறார்.
பூட்டிக்கு 9வயது இருக்கும் போது சென்னதேவி என்ற அவளின் அக்காவின் பேரழகில் மயங்கி அவளை திருமணம் செய்துக்கொள்ள ஆசப்பட்டுகிறான் அங்கு விசயநகரத்தை ஆட்சி செய்துவந்த துலுக்க ராசா(முகமதிய மன்னன்) அவனிடம் இருந்து தப்பி அந்த ஊரைசேர்ந்த சொந்தபந்தங்களும் சென்னதேவி, மங்கயதாயறு என 67பேர் நடந்தே தெற்க்கு நோக்கி அதாவது தமிழகம் நோக்கி வருகிறாரகள். அவர்கள் படும் வேதனையும் வழிகளும் படமாக நகர்த்துகிறார்.
தமிழகம் வந்து காவிரியில் குளித்து ரங்கநாதரை தரிசித்து கரிசல் மண்ணான தற்போதைய ராமநாதபுரம், எட்டையபுரம், பாஞ்சாலங்குறிச்சி பகுதியை கோர்த்து இருந்த வனப்பகுதியில் ஒரு பக்கத்தில் தஞ்சம் அடைகிறார்கள்.
அந்த காட்டில் ஒரு பக்கத்தை அழித்து எப்படி வாழ்வை தொடங்குகிறார்கள். அந்த பகுதி ஏன் கரிசல் மண் ஆனாது, அவர்களின் மருத்துவம், விவசாயம், வாழ்வியல், கள்வர்களிடம் மிருந்து எப்படி தற்காத்துக் கொள்கிறார்கள், தொழுங்கு பேசும் மக்களாகிய அவர்கள் எப்படி தமிழ்மக்களிடமும், பிற தெழுங்கு பேசும் மக்களிடம் இணைகிறார்கள்(அதே காலக்கட்டத்தில் கம்மநாயிடு மக்கள் மட்டும் தமிழகம் நோக்கி வரவில்லை துலுக்க ராசவின் கொடுமை தாங்கமுடியாமல் ரெட்டியார், செட்டியார், சக்கிலியர், பிரமணர் என பல தெழுங்கு பேசும் இனமக்களும் கரிசல் பகுதிக்கு புலம்பெயர்கிறார்கள்).
அதன் பின் இரண்டு தலைமுறை கடந்து அவர்கள் வாழ்வும் வாழ்வியலும் எப்படி உள்ளது, என்பன என 200ஆண்டுகால வரலாற்றை இந்த புதினம் கூறுகிறது.
இதில் கோட்டையார் வீடு, மங்கையாதாயரு, கோவிந்தப்ப நாயக்கர், கிருடிணப்ப நாயக்கர், சீத்தவின் கனவன் ஆசாரி, கழுவில் ஏற்றபடும் கள்வன், சுந்தரப்ப நாயக்கர், எங்க்கச்சி, சீனி நாயக்கர், குறிப்பாக அக்கையா காதபாத்திரம் கதைக்குப் பலம்.
வாய்புள்ளவர்கள் வாசித்துப்பாருங்கள்,
வரலாற்று சிறப்பு மிக்க புதினம். நன்றி..
பேரன்புடன்,
மனோ குணசேகன்,
புள்ளவராயன்குடிக்காடு, மன்னார்குடி.
06/09/2020