இன்று (11-09-2020) திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி தீயணைப்பு துறையினர் வடகிழக்கு பருவ மழை – பேரிடர் மீட்பு ஒத்திகை பயிற்சியை ஒருங்கிணைத்தனர்.
மழை, வெள்ளம் உள்ளிட்ட இயற்கை பேரிடர் காலங்களில் மீட்பு பணி குறித்த ஒத்திகை நிகழ்ச்சி திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி மேலப்பாலம் பாமணி ஆற்றில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் செய்து காட்டினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் RDO, வருவாய் கோட்டாட்சியர், (ம) உட்கோட்ட நிர்வாக நீதிபதி, மன்னார்குடி, பொது பணி துறை அலுவலர், மாவட்ட அலுவலர் – திருவாரூர் மாவட்ட தீயணைப்பு துறை கலந்து கொண்டவர்கள்.
இதில் கீழ்க்கண்ட மீட்பு பணிகள் பணிகளை பொதுமக்களுக்கு செய்து காட்டினார்கள்:
படகு மூலம் மீட்டு வருதல்,
கயிறு மூலம் மீட்டு வருதல்,
Lifebuoy, life jacket மூலம் மீட்டு வருதல்,
மற்றும் முதலுதவி செய்தல்,
தற்காலிக படகு மூலம் மீட்டு வருதல்,
தேங்காய் மூலம் மீட்டு வருதல்,
பிளாஸ்டிக் பாட்டில் மூலம் மீட்டு வருதல்,
குடங்கள் மூலம் மீட்டு வருதல்,
பேரிடர் காலங்களில் சாலையில் விழுந்த மரங்களை அப்புறபடுத்துதல் மற்றும் போக்குவரத்து சரி செய்தல்.
நிலைய அலுவலர் திரு. பால சுப்ரமணியன் அவர்கள், கோட்டூர் நிலைய அலுவலர், திருமக்கோட்டை நிலைய அலுவலர், மற்றும் மன்னார்குடி தீயணைப்பு வீரர்கள் இணைந்து வடகிழக்கு பருவமழை – பேரிடர் மீட்பு போலி ஒத்திகை பயிற்சியை சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளார்கள்.
தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணிகள் செய்து காட்டியதை பொது மக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.
செய்தி சேகரிப்பு:
ஜெய பிரகாஷ், மன்னார்குடி