Home>>அரசியல்>>தமிழ்நாடு எல்லை மீட்பு போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்த தடை
அரசியல்செய்திகள்தமிழ்நாடு

தமிழ்நாடு எல்லை மீட்பு போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்த தடை

தமிழ்நாடு நாளை தமிழக மக்கள் கொண்டாட வேண்டுமென்று தமிழக முதல்வர் வேண்டுகோள் விடுத்திருக்கும் நிலையில்  கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மன்னார்குடியில் தமிழர் தேசிய முன்னணி சார்பில் தமிழ்நாடு எல்லை மீட்பு போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் சுவரொட்டி ஒட்டப்பட்ட போது காவல்துறை ஒட்டக்கூடாது என்று தடுத்து நிறுத்தியதோடு கையிலிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட சுவரொட்டிகளை பறிமுதல் செய்து, சுவரொட்டி ஒட்டிய தமிழர் தேசிய முன்னணியின் திருவாரூர் மாவட்ட செயலாளர் அரிகரன் மற்றும் துணைத்தலைவர் தேவா இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து காவல்நிலைய பிணையில் விடுவிக்கப்பட்டார்கள்.

இதனை கண்டித்து தமிழர் தேசிய முன்னணி பொதுச்செயலாளர் மருத்துவர் இரா.பாரதிச்செல்வன் அவர்கள் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். மற்றும் அவர் வெளியிட்ட கடிதத்தில் கீழ்க்கண்ட கருத்தை குறிப்பிட்டுள்ளார்.

“தமிழர்களின் கருத்துரிமையைப் பறிக்கும், தமிழக அரசின் இந்த நடவடிக்கையை கண்டிக்கிறோம்.

எதிர்காலத்திலாவது தமிழினம் இழந்த உரிமைகளை மீட்பதற்கு சட்டத்திற்கு உட்பட்டு, எம்மை போன்ற அமைப்புகள் சுவரொட்டி துண்டறிக்கை பொதுக்கூட்டம் கருத்தரங்கம் மூலம் பரப்புரை நடத்த அனுமதிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.”


செய்தி சேகரிப்பு:
இராசசேகரன், மன்னார்குடி

Leave a Reply