Home>>அரசியல்>>திருமாவளவன் தமிழின் நிலை தமிழரின் நிலை தமிழ்த்தேசியத்தின் இன்றியமையாமை குறித்து பேசியிருக்க வேண்டும்!
அரசியல்உலகம்செய்திகள்தமிழர்கள்தமிழ்நாடுமலேசியாவரலாறு

திருமாவளவன் தமிழின் நிலை தமிழரின் நிலை தமிழ்த்தேசியத்தின் இன்றியமையாமை குறித்து பேசியிருக்க வேண்டும்!

தமிழ்த்தேசியம் குறித்தான பொருளில் மலேசியாவின் உலகத் தமிழ்மாநாட்டில் உரையாற்றியபோது
நண்பர் திருமாவளவன் – தமிழின் நிலை தமிழரின் நிலை தமிழ்த்தேசியத்தின் இன்றியமையாமை குறித்து பேசியிருக்க வேண்டும்!

மாறாக தமிழ் இனவாதம் தமிழ்த்தேசியமாகாது, மதவாதம் மததேசியமாகாது என்று தனது உரையில் குறிப்பிட்டிருக்கிறார்! தமிழர்களின் இனவாதத்தால் தாக்கப்பட்ட இனத்தை அவரால் குறிப்பிட முடியுமா? ஈழத்தில் ஒடுக்கப்பட்ட இனமாக தமிழரினம்! இந்தியாவில் வஞ்சிக் கப்படும் இனம் தமிழினம்.!

உலகெங்கும் உழைப்பாளிகளாக – கூலிகளாக – இருக்கும் ஒரு இனத்தை இனவாதநோய் பீடித்த இனம்போல சித்தரிக்க உலகத்தமிழ் மாநாட்டு மேடையை பயன்படுத்தி – நச்சுக் கருத்துக்களை பரப்புவதை வன்மையாக கண்டிக்கிறேன்!

தமிழ்ச்சமூகத்தில் பரவியுள்ள பாசிச பாஜகவின் மதவாதத்தையும்- தமிழ்த்தேசிய இன உரிமை விடுதலை கோரிக்கையையும் ஒன்றாகப் போட்டுக் குழப்பிக் கொள்ளும் உங்கள் உரை
உங்களுக்குள் இருக்கிற குழப்பத்தை – தமிழினத்தின் தமிழ்த்தேசிய அரசியலின் மீதான தாக்குதலாக தொடுத்திருப்பது தேவையற்றது! பயனற்றது! கண்டிக்கத்தக்கது!

மகாராட்டிரத்திலிருந்து, கேரளாவிலிருந்து, கர்நாடகத்திலிருந்து, ஆந்திராவிலிருந்து – தமிழர்கள் விரட்டியடிக்கப்பட்டதற்கும் கொலை செய்யப்பட்டதற்கும் மட்டுமே சாட்சியங்கள் இருக்கிறது நண்பர் திருமாவளவன் அவர்களே! தமிழர்கள் இனவாதிகளாகி மாறி யாரை அடித்து விரட்டினார்கள்?
யாரை கொலை செய்தார்கள்?

யாருடைய தொழிலை வணிகத்தைப் பறித்தார்கள்? யாருடைய குடியுரிமைக்கு எதிராக எங்கே எப்போது கலகம் செய்தார்கள்? தற்காப்பு நிலையில் உள்ள ஒரு இனத்தை தாக்குதல் பண்பு கொண்ட இனமாகச் சித்தரிக்க வேண்டிய தேவை உங்களுக்கு எங்கிருந்து எதனால் வருகிறது?


ஐயா. அரங்க குணசேகரன்,
தலைவர்,
தமிழக மக்கள் புரட்சிக் கழகம்.
+91 90475 21117

Leave a Reply