Home>>உலகம்>>பூர்வீகத்தில் தமிழ்நாடாக இருந்தாலும் தமிழ் தெரியாத கமலா காரிசு
உலகம்தமிழ்நாடு

பூர்வீகத்தில் தமிழ்நாடாக இருந்தாலும் தமிழ் தெரியாத கமலா காரிசு

நடந்து முடிந்த அமெரிக்க தேர்தலில் வென்று துணை அதிபர் ஆன கமலா காரிசுக்கு வாழ்த்துகள் தமிழ் மண்ணிலிருந்து குவிகிறது.

குறிப்பாக நம் திருவாரூர் மாவட்டத்தில் கொண்டாட்டங்கள் களை கட்டுகிறது. உலகத்துல எந்த மூலையில எது நடந்தாலும் அதற்கான உணர்வுகளை முதலில் வெளிப்படுத்துவது தமிழன் தான் என்பதை நாம் அடிக்கடி காட்டுகிறோம். ஆனால் இது தான் நமக்கு பலவீனம் என்பதையும் மறந்து விடுகிறோம். குறிப்பாக சொல்லப்போனால் பலரின் நேரம் இதனால் வீணடிக்கப்படுகிறது என்பதே உண்மை.

மற்றொரு உண்மை என்னவென்றால் தமிழர்களே கொண்டாடும் கமலா காரிசுக்கு சில தமிழ் சொற்கள் மட்டுமே தெரியும் என்பது தான். நாம் உணர வேண்டியது பூர்வீகத்தில் தமிழ்நாடாக இருந்தாலும் அவர்களுக்கும், தமிழுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது தான்.

இதனால் நம் மண்ணிற்கு எந்த பலனும் இல்லாத இந்த கொண்டாட்டங்களை தவிர்த்து நம் மண்ணிற்கு தேவையானவற்றிற்கு குரல் எழுப்ப வேண்டும் என்பது தான்.

நாம் உணர்ச்சிவசத்தை கட்டுபடுத்த வேண்டும். தற்போதைய சூழலில் எதிர்கொள்ளும் நாம் சவால்கள் ஏராளம், ஆக அவைகளில் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக சொல்லப்போனால் தமிழகத்தில் அடுத்த வரவுள்ள சட்டமன்ற தேர்தலில் அமெரிக்கா போன்று வாக்கு இயந்திரத்தை தடைச்செய்து, வாக்குசீட்டு முறையை நடைமுறைக்கு கொண்டு வர ஒருமித்த குரலில் ஒலிக்க வேண்டும்.

இதற்கு மக்களை விழிப்படைய செய்து, தேர்தல் ஆணையத்திடம் முறையிட வேண்டும், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து வாக்குசீட்டு முறை நடைமுறைக்கு வர வழி வகுக்க வேண்டும்.

சிந்திப்போம், செயல்படுவோம்.


ஆனந்த் ரெய்னா,
முத்துப்பேட்டை

Leave a Reply