ஸ்ரீபெரும்புதூர் அருகே தமிழன் தொலைக்காட்சியின் செய்தியாளர் திரு.மோசஸ், கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டதை கண்டித்து தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளார்கள்.
இதில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்து தண்டனை பெற்றுத்தருவதிலாவது காவல்துறை போதிய கவனம் செலுத்தவேண்டும். கொல்லப்பட்ட செய்தியாளர் குடும்பத்திற்கு தமிழக அரசு உரிய இழப்பீட்டை வழங்கிடவேண்டும். திரு.மோசஸ் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்(2/2)
— TTV Dhinakaran (@TTVDhinakaran) November 9, 2020
சென்னை, குன்றத்தூர் அருகே புழக்கத்திலுள்ள போதைப்பொருள் வியாபாரம் குறித்த செய்தி வெளியிட்டதால் தமிழன் தொலைக்காட்சி செய்தியாளர் தம்பி மோசஸ் அவர்கள் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.
படுகொலை செய்த சமூகவிரோதக் கும்பலை உடனடியாக கைது செய்ய வேண்டும். pic.twitter.com/TjmwuPBCY0
— சீமான் (@SeemanOfficial) November 9, 2020
சட்ட விரோதச் செயல்களை வெளிக் கொண்டு வந்ததால் மிரட்டப்பட்ட செய்தியாளர் மோசஸ் காவல்நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இன்றி நேற்று வெட்டிக் கொல்லப்பட்டிருக்கிறார்.
சமூக விரோதக் கும்பல்களை @CMOTamilNadu அரசு காப்பாற்றுகிறதா?
பத்திரிகைச் சுதந்திரத்திற்கு திமுக துணை நிற்கும்! pic.twitter.com/pzatF5RKzA
— M.K.Stalin (@mkstalin) November 9, 2020