கொரோனா காலம் என்றாலும் தமிழகத்தில் பல இடங்களில் தொடர் மழைப்பெய்து மேலும் வணிகர்களை சிரமத்திற்கு உள்ளாக்கியது இம்முறை. குறிப்பாக நடைபாதைகளில் கடைகளை வைத்து இருந்தவர்களுக்கு பெரும் நட்டம் என்றே சொல்லலாம்.
இருப்பினும் உலகெங்கும் உள்ள தமிழர்கள் இந்த தீபாவளியை சிறப்பாக கொண்டாடினார்கள். இந்திய ஒன்றிய அரசு பட்டாசு வெடிப்பதற்கு பல மாநிலங்களில் தடைகளை விதித்துள்ளதால் சிவகாசி போன்ற ஊர்களில் பட்டாசு தொழிலை நம்பி இருந்தவர்களுக்கு இந்த தீபாவளி கருப்பு தினமாகவே அமைந்தது.
தீபாவளியை ஆங்கிலத்தில் Deepavali என்று எழுத வேண்டும் என்று பலமுறை கூறினாலும் தமிழ் சொல்லான தீபாவளியை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து எழுதுவதாக நினைத்து தமிழகத்தில் பலர் கிந்தியர்கள் பயன்படுத்தும் சொல்லான Diwaliயை எழுதி மொழியை அழிக்கும் வகையில் தங்கள் சமூக ஊடக பதிவுகளில் இடம்பெற செய்தார்கள். இதையொட்டி மக்களுக்கு விழிப்புணர்வு தரும் வகையில் “தமிழோடு தீபாவளி” என்ற சொற்களுடன் தமிழகத்தில் உள்ள தொன்மையான நகரான மன்னார்குடியில் இன்று தனது வீட்டில் ஆசிரியை வி.நிர்மலா லூர்து மேரி அவர்கள் கோலமிட்டு குடும்பத்துடன் கொண்டாடினார்.
“நேபாளம், மியன்மார் மக்கள் ராமர் வனவாசம் முடித்து திரும்பிய நாளை தீபாவளியாக கொண்டாடுகின்றனர்” என்று மலேசியாவில் வேலைப்பார்க்கும், தமிழகத்தை சார்ந்த சகோதரர் ரமேஷ் அவர்கள் நமது திறவுகோல் இணையத்திற்கு கூறினார்.
மற்றும் தமிழர்களின் வரலாற்று தகவல்களை தொடர்ந்து சேகரித்து வரும் ஐரோப்பாவில் உள்ள சகோதரர் திரு. இங்கர்சால் அவர்கள் தீபாவளியை பற்றிய மேலும் சுவாரசியமாக தகவலை தனது முகநூல் கணக்கில் இன்று பதிவு செய்துள்ளார். அதை கீழே பகிர்ந்துள்ளோம்.
அனைவருக்கும் இனிய தீபாவளி பண்டிகை நல் வாழ்த்துக்கள், தமிழரின் தொன்மையான கார்த்திகை தீபத் திருவிழா தீபாவளியாக இந்தியா முழுவதும் பல்வேறு கதைகளுடன் பின்னப்பட்டு கொண்டாப்படுகிறது என்கின்றனர் தமிழ் ஆய்வாளர்கள்.
தெற்கே இன்று தீபாவளி நரகாசுரவதத்தைக் குறிக்கிறது அல்லவா?
குஜராத்திலே தீபாவளி புது வருசத்து வர்த்தகத்தைக் குறிக்கிறது!
பஞ்சாபிலே அப்படிக் கிடையாது. நளச் சக்கரவர்த்தி, சூதாடி அரசு இழந்த இரவே தீபாவளி!
மகாராஷ்டிர தேசத்தில், மகாவிஷ்ணு வாமன அவதாரம் எடுத்து மகாபலியின் முடியிலே அடியை வைத்த நாளே தீபாவளி!
வங்காள தேசத்தில் காளிதேவியை இலட்சுமியாகப் பூஜை செய்யும் நாளே தீபாவளி!
சிலர், ராமன் மகுடம் சூட்டிக் கொண்ட தினமே தீபாவளி என்று கொண்டாடுகின்றனர்
சிலர், உஜ்ஜைனி நகர அரசன் விக்கிரமாதித்தன் பட்டம் சூடிய தினமே தீபாவளி என்று கொண்டாடுகின்றனர்.
சரி இது இந்து மத பண்டிகையையா என்றால் கிடையாது இது ஜைன மதத்திலும் இருக்கிறது. பலர் இதை மஹாவீரர் காலத்தின் பிறகே தொடங்கப்பட்டது என்கின்றனர். இன்றும் ஜைன மதத்தினர் தீபாவளி கொண்டாடுகின்றனர்.. மகாவீரவின் ஆன்மாவின் விடுதலை நாளை குறிக்கிறது. தீபாவளி ஜைன ஆண்டின் முடிவை குறிக்கிறது.
ஆராய்ச்சியை விடுவோம்..
இது ஒரு பண்டிகை…
தீபங்களின் பண்டிகை..
இதில் எந்த மத சாயமும் பூசாமல் பண்டிகையாக கொண்டாடினால் சரி.
தீபங்களின் பண்டிகை.. இதை நான் சுவைக்கவே விரும்புகிறேன்…
நான் ஐரோப்பாவில் கிறிஸ்துமசை கொண்டாடுகிறேன் வழியில்லாமல்.
மத்திய ஆசியாவில் இருந்திருந்தால் ரம்ஜானை கொண்டாடி இருப்பேன்.
மக்களின் கொண்டதை கொண்டாடுவேன்.
கடவுளுக்கும், காரண பண்டிகைகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
பண்டிகைகளை மதத்திடம் இருந்து மனிதன் பறிக்க வேண்டும்.
பண்டிகை இல்லாத வாழ்க்கை பாறைக்கு சமம்.
பண்டிகைகளில் இனிப்பு விற்று பணம் சேர்க்கும் சில கிருஸ்துவரும்.
துணி விற்று பணம் சேர்க்கும் சில இஸ்லாமியரும்
கொண்டாடுவோரை வாழ்த்த கடமை பட்டிருக்கின்றனர்.
மதம் கடந்து மனிதர்களாக இணைவோம்
இல்லத்தில் விளக்கேற்றி தீபத்திருநாளை கொண்டாடி மகிழுங்கள்.
இவண்
தமிழன் திரு இங்கர்சால்
முகநூல் பதிவு: https://www.facebook.com/ingersol.norway.5/posts/1011298343034968