மன்னார்குடி நகராட்சிஆணையருக்கு, மன்னார்குடி நகர மக்களின் சார்பாக வேண்டுகோள்:
நிவர் புயல் மற்றும் பலத்த மழை நமது பகுதியை தாக்க வாய்ப்புள்ளதாக பல்வேறு வானிலை நிபுணர்கள் அறிவித்துள்ளனர்.
ஆகையால் நமது பகுதியில் எந்நேரமும் மின்சாரம் முழுமையாக தடைபட வாய்ப்புள்ளது. இதனால் குடிநீர் தட்டுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது.
கடந்த கஜாபுயலின் போது மன்னார்குடி பகுதி பொதுமக்கள் குடிநீர் தட்டுபாட்டால் பெரிதும் அவதிபட்டனர். அதற்கு முக்கிய காரணம் மன்னார்குடியில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளில் (water tank) நீரேற்ற சில இடங்களில் மட்டுமே ஜெனரேட்டர்கள் உள்ளது.
அவையும் தற்போது உபயோகத்தில் இருக்கிறதா என்று தெரியவில்லை, எனவே நகராட்சி நிர்வாகம் அனைத்து வாட்டர்டேங்கிலும் (குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி) நீரேற்ற உடனடியாக வாடகைக்கு ஜெனரேட்டர் ஏற்பாடு செய்து மின்சார தடை ஏற்பட்டாலும் பொதுமக்களுக்கு தடைபடாமல் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
இந்த பேரிடர் நேரத்தில் இது மிக அத்திவாசிய தேவை என்பதால், உடனடியாக இதில் கவனம் செலுத்தி ஜெனரேட்டர்கள் ஏற்பாடு செய்து குடிநீர் தட்டுபாடு ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
மன்னார்குடி நகராட்சி ஆணையரின் மேலான கவனத்திற்கு …
மன்னார்குடி நகரின் கிழக்கு பகுதியில் வார்டு எண்கள் (பழைய) 9, 10, 14, 15 மற்றும் 33 (சில பகுதிகள்) ஆகிய வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டம் பயன்பாட்டில் உள்ளது.
மழை அதிகமானால் சில இடங்களில் மழை நீர் பாதாள சாக்கடை குழாய்களில் சென்று விடும்
இதனால் 33 வது வார்டில் உள்ள பாதாள சாக்கடையில் இருந்து கழிவு நீரை வெளியேற்றும் நிலையத்தில் இருந்து தொடர்ந்து கழிவு நீரை வெளியேற்ற வேண்டும்.
மின்சாரம் தடைபட்டால் மேற்கண்ட நீரை வெளியேற்றுவதில் தடை ஏற்படும் இதனால் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு வீட்டினுள் கழிவு நீர் புகுந்து விடும். மேலும் பாதாள சாக்கடையில் இருந்து சில ஆபத்தான பூச்சிகளும் வீட்டிற்குள் புகுந்து விடும் அபாயம் உள்ளது.
எனவே மேற்கண்ட கழிவு நீரை வெளியேற்றுவதில் மின்சாரம் தடைபட்டாலும் தொய்வு ஏற்படாமல் இருக்க நகராட்சி நிர்வாகம் கூடுதல் Engine மற்றும் Generator ஏற்பாடு செய்ய வேண்டும். இதனால் கழிவு நீர் வீட்டினுள் புகுந்து பொது மக்களுக்கு ஏற்படும் ஆபத்தை தவிர்க்கலாம். எனவே நகராட்சி நிர்வாகம் இதில் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்.
மேற்கண்டவாறு மன்னார்குடி முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் மற்றும் அமமுக நகர செயலாளர் Ar.ஆனந்த ராஜ் அவர்கள் தன்னுடைய முகநூல் பக்கத்தில் ஆக்கபூர்வமாக கருத்துக்களை பதிவு செய்துள்ளார்.
முகநூல் பதிவு முகவரி: https://www.facebook.com/mannai.exmc/posts/406959470714826