Home>>உலகம்>>கால்பந்து அரசன் மாரடோனா காலமானார்.
உலகம்விளையாட்டு

கால்பந்து அரசன் மாரடோனா காலமானார்.

அர்சென்டினாவை சேர்ந்த பிரபலமான முன்னாள் கால் பந்தாட்ட வீரர் மாரடோனா மாரடைப்பால் காலமானார். இவருக்கு வயது 60. ஏற்கனவே இந்த மாதம் மூளையில் ரத்த உறைதலை அகற்ற ஒரு அறுவை சிகிச்சையை மேற்கொண்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அர்சென்டினா கால்பந்து அணியின் கேப்டனாக செயலாற்றிய டீகோ மாரடோனா 1986ஆம் ஆண்டு அந்த அணியை உலகக்கோப்பை வெற்றிக்கு இட்டுச்சென்றார்.

1990இல் நடந்த கால்பந்து உலகக்கோப்பையில் அர்சென்டினா அணி கோப்பையை வெல்லாவிட்டாலும், இறுதிப்போட்டி வரை சென்றது. இந்தத் தொடரிலும் மமாரடோனாதான் அர்ஜென்டினா அணியின் கேப்டன்.

ஊக்கமருந்து பயன்படுத்தியதால் விளையாட விதிக்கப்பட்ட தடை, காற்றழுத்தத் துப்பாக்கியால் ஊடக நிருபர் ஒருவரைச் சுட்டதால் விதிக்கப்பட்ட, இடைநிறுத்தம் செய்யப்பட்ட சிறை தண்டனை ஆகிய அனைத்துக்கும் பிறகு, அமெரிக்காவில் 1994ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை கால்பந்துத் தொடரில் கலந்துகொண்டார் மாரடோனா.

Hand of god கடவுளின் கை என்று அழைக்கப்பட்ட டீகோ மாரடோனா 490 கிளப் ஆட்டங்களில் ஆடி 259 கோல்களும், சர்வதேச போட்டிகளில் அர்சென்டினாவிற்காக 91 போட்டிகள் ஆடி 34 கோல்களும் அடித்து உள்ளார்.


செய்தி சேகரிப்பு:
செந்தில் பக்கிரிசாமி,
மன்னார்குடி.

Leave a Reply