Home>>அரசியல்>>விவசாய நிலம் கார்ப்பொரேட்டுகளால் கைப்பற்றப்பட்டு, அந்தத் தன் நிலத்திலேயே விவசாயி கூலியாகும் நிலை!
அரசியல்இந்தியாசெய்திகள்தமிழ்நாடுவேளாண்மை

விவசாய நிலம் கார்ப்பொரேட்டுகளால் கைப்பற்றப்பட்டு, அந்தத் தன் நிலத்திலேயே விவசாயி கூலியாகும் நிலை!

விவசாயிகளையே ஒழித்துக்கட்டும் விவசாயச் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப்-அரியானா விவசாயிகளின் ‘டெல்லி சலோ’ பேரணி!

இந்தப் பேரணியை தடியடி, தண்ணீர் பீய்ச்சியடிப்பு, கண்ணீர்ப்புகைக் குண்டு வீச்சு எனக் கடுமையாகத் தாக்கிய போலீஸ் வன்முறையை வன்மையாகக் கண்டிப்பதுடன், விவசாயிகள் எதிர்க்கும் சட்டங்களை வாபஸ் வாங்குமாறு வலியுறுத்துகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!
அண்மையில் 3 விவசாய மசோதாக்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி, குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெற்று சட்டமாக்கியது ஆர்எஸ்எஸ்-பாஜக மோடி அரசு.

அந்தச் சட்டங்கள் :
அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020 (Essential Commodities (Amendment) Act 2020);
விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம் 2020 (Farming Produce Trade and Commerce (Promotion and Facilitation) Act 2020);
விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020 (The Farmers (Empowerment and Protection) Agreement on Price Assurance and Farm Services Act 2020).

விவசாய வர்த்தகத்தின் மீதான மாநில அரசின் கட்டுப்பாடு, இந்தச் சட்டத்தின் மூலம் இல்லாமல் போகிறது. வேறு மாநில வியாபாரிகள், எங்கு வேண்டுமானாலும் போய் பொருட்களை வாங்கிச் செல்லலாம் என்பதால், அந்த மாநிலத்தில் அந்தப் பொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டாலும், மாநில அரசால் ஏதும் செய்ய முடியாது.

விவசாயம் மாநிலப் பட்டியலில் உள்ளது. ஆகவே இந்த மூன்று சட்டங்களும் மாநில அரசின் உரிமைகளைப் பறிக்கின்றன. விதை நிறுவனங்கள், கான்ட்ராக்ட் விவசாய நிறுவனங்கள் மற்றும் மிகப் பெரிய சங்கிலித் தொடர் சூப்பர் மார்க்கெட்களுக்கு ஏதுவாக இச்சட்டங்கள் இயற்றப்பட்டிருக்கின்றன.

விவசாய ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கு வெளியிலும் விவசாயப் பொருட்களை விற்பனை செய்ய இந்தச் சட்டம் வகை செய்கிறது. இதனால் விவசாய ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் ஒழிக்கப்படும். அவை ஒழிக்கப்பட்ட பின் விவசாயிகளுக்கு போதிய, கட்டுப்படியான விலை கிடைக்காது. போதிய, கட்டுப்படியான விலை கிடைக்காது போகும்போது விவசாய உற்பத்திச் செலவுக்காக வாங்கிய கடன் கழுத்தை நெரிக்கும்போது, நிலத்தை அந்த நிறுவனத்துக்கே விற்றுவீட்டு, அந்தத் தன் நிலத்திலேயே தான் கூலியாக உழைப்பதற்கு தள்ளப்படுகிறான் விவசாயி.
இதனால்தான் இந்தச் சட்டங்களை விவசாயிகள் மட்டுமல்ல; ஆளும் பாஜக, அஇஅதிமுக தவிர அனைத்து எதிர்க்கட்சிகளும் பொதுமக்களும் எதிர்க்கின்றனர்.

இச்சட்டங்களை எதிர்த்துத்தான் இன்று நான்காவது நாளாக பஞ்சாப்-அரியானா விவசாயிகளின் ‘டெல்லி சலோ’ பேரணி டெல்லிக்கு வந்தடைந்திருக்கிறது. வழியெங்கும் வவசாயிகம் மீது தடியடி, தண்ணீர் பீய்ச்சியடிப்பு, கண்ணீர்ப்புகைக் குண்டு வீச்சு எனக் கடுமையான போலீஸ் தாக்குதல்கள். அத்தனையையும் மீறித்தாம் டெல்லியை அடைந்துள்ளனர் விவசாயிகள்.

காவல்துறையினருக்கும் விவசாயிகளுக்கும் இடையே மோதலும் வெடித்தது. கைது செய்யப்படும் விவசாயிகளை அடைத்து வைக்க, டெல்லியில் உள்ள 9 விளையாட்டு மைதானங்களை தற்காலிக சிறைகளாக பயன்படுத்திக்கொள்ள டெல்லி அரசிடம் காவல் துறையினர் கோரிக்கை விடுத்தனர். ஆனால் இந்தக் கோரிக்கையை அம்மாநில அரசு நிராகரித்து விட்டது.

ஆறு மாதங்களுக்குத் தேவையான உணவுப்பொருட்களுடன் பஞ்சாப் விவசாயிகள் டெல்லி கிளம்பியுள்ளதால், நிலைமையைக் கட்டுப்படுத்த போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர். குருகிராம்-டெல்லி எல்லையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. உள்ளூர் கல்லூரிகளின் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன.

விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்ததால் புராரியில் உள்ள நிரங்கரி சமகம் மைதானத்தில் விவசாயிகள் அமைதிப் போராட்டம் நடத்திக்கொள்ள டெல்லி போலீசார் அனுமதித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து திக்ரி எல்லை வழியாக விவசாயிகள் டெல்லிக்குள் நுழைந்தனர்.

அண்மைக் காலத்தில் இப்படிப்பட்ட மாபெரும் போராட்டத்தை இந்தியா கண்டதில்லை; அந்த அளவுக்குப் போராட்டக்காரர்களின் அபரிமிதமான எண்ணிக்கை. அதோடு போலீசின் மோசமான அடக்குமுறையை எதிர்கொண்டு முறியடித்து டெல்லிக்குள் நுழைந்த தீவிரம். மோடியின் இதயத் துடிப்பும் நாடித் துடிப்பும் எந்த அளவுக்கு எகிறியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

எந்தக் காலத்திலும் இல்லாத வகையில் நாட்டின் வளர்ச்சி விகிதம் —8.9 ஆக படுபாதாளத்தில் வீழ்ந்திருப்பதாலும் தான் கொண்டுவரும் விவகாரமான நடவடிக்கைகள், திட்டங்கள் யாவும் மக்களின் கடும் எதிர்ப்புக்கு உள்ளாவதாலும் அதிர்ந்துபோய், தனக்கு எதிர்காலமே இல்லை என்பதை உணர்ந்து கொண்டதால்தான் பிரதமர் மோடி அவர்கள் முகத்தில் இப்போதெல்லாம் ஒளியே இல்லை; தனக்கு தோல்வி நிச்சயம் என்கிற அச்சம்தான் அது.

தலைக்கு மேலே ஜாண் போனால் என்ன, முழம் போனால் என்ற விரக்திக்கு வந்து நெடுந்தாடி வளர்த்திருக்கும் பிரதமர் மோடி அவர்கள், அந்த நிலையிலும், தான்தோன்றித்தனமாக, “ஒரே நாடு, ஒரே தேர்தல், இது காலத்தின் கட்டாயம்” என்று பிதற்றியிருக்கிறார். இதற்கு வன்மையான கண்டனத்தைப் பதிவு செய்வதோடு, இந்த எண்ணத்தையே கைவிமாறு எச்சரிக்கிறோம்.
விவசாய நிலம் கார்ப்பொரேட்டுகளால் கைப்பற்றப்பட்டு, அந்தத் தன் நிலத்திலேயே விவசாயி கூலியாகும் நிலை!

விவசாயிகளையே ஒழித்துக்கட்டும் விவசாயச் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், அரியானா விவசாயிகளின் ‘டெல்லி சலோ’ பேரணி!

இந்தப் பேரணியை தடியடி, தண்ணீர் பீய்ச்சியடிப்பு, கண்ணீர்ப்புகைக் குண்டு வீச்சு எனக் கடுமையாகத் தாக்கிய போலீஸ் வன்முறையை வன்மையாகக் கண்டிப்பதுடன், விவசாயிகள் எதிர்க்கும் சட்டங்களை வாபஸ் வாங்குமாறு வலியுறுத்துகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!

முகநூல் பதிவு முகவரி: https://www.facebook.com/228584773834/posts/10160490709898835/


செய்தி சேகரிப்பு:
ஜெய பிரகாஷ், மன்னார்குடி.

Leave a Reply