தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் செ.ப. முத்தமிழ்மணி வேண்டுகோள்.
தமிழ்நாட்டில் உள்ள பெரிய கோயில்களில் ஒரு சில கோயில்களில் மட்டுமே தமிழில் வழிபாடு நடத்தப்படுகிறது.
ஏனைய கோயில்களில் சமற்கிருதத்தில்தான் வழிபாடு நடத்தப்படுகிறது.
கடந்த 2020ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தஞ்சைப் பெருவுடையார் கோயிலின் குடமுழுக்குத் தொடர்பாக வழங்கப்பட்ட தீர்ப்பிலும், கரூர் பசுபதீசுவரர் கோயில் குடமுழுக்கு வழக்குத் தொடர்பாக வழங்கப்பட்ட தீர்ப்பிலும், கருவறை, வேள்விச்சாலை, கோபுர கலசம் ஆகிய மூன்று நிலைகளிலும் தமிழ்மொழி மந்திரத்தைப் பயன்படுத்த வேண்டுமென ஆணையிட்டுள்ளது.
எனவே, பழனி முருகன் கோயில் உள்பட இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துக் கோயில்களிலும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வழங்கிய தீர்ப்பினை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு, #அதனையே நடைமுறைப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசை வற்புறுத்துகிறேன்.
இல்லையேல் அன்னைத் தமிழில் அர்ச்சனை என்று தமிழ்நாடு அரசு அறிவித்தத் திட்டம் தமிழர்களை ஏமாற்றவே அறிவிக்கப்பட்ட திட்டம் என்றாகிவிடும். ஆகவே எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்! என முழங்கிவரும் தமிழ்நாடு முதல்வர் இறைவழிபாட்டினையும், திருக்குடமுழுக்கையும் தமிழிலேயே நடத்திட முன்வரவேண்டுமென வேண்டிக்கொள்கிறேன்.
—
திரு. செ.ப. முத்தமிழ்மணி,
தலைவர்,
தமிழர் தேசிய முன்னணி.
—
செய்தி உதவி:
திரு. சண்முகம் கலைச்செல்வம்,
திருவாரூர்.