Home>>அரசியல்>>தொடங்கியது விவசாயப்போர்

பண்டைய காலத்தில் மன்னர்கள் வேறொரு நாட்டைக் கைப்பற்ற லட்சக்கணக்கான போர் வீரர்கள், குதிரைகள், யானைகளோடு பல மாதங்கள் பயணித்து போர் தொடுத்தார்கள் என்ற செய்தியை படிக்கும்போது நம்ப முடியாமல்தான் இருந்தது. அது எப்படி சாத்தியம் என்ற கேள்வி பலர் மனதில் எழும்.ஆனால் இன்று அதை பஞ்சாப் விவசாயிகள் சாத்தியப்படுத்தி உள்ளனர். இன்னும் சொல்லப்போனால் வரலாறு காணாத கூட்டத்தோடு மத்திய அரசிற்கு எதிராக விவசாயத்தை காக்க ஒரு மாபெரும் உரிமைப்போரை நிகழ்த்தியுள்ளனர்.

அன்றைய போர்கள் மண்ணாசையால் வந்தது!!

ஆனால் இன்று இவர்கள் நடத்திக்கொண்டு இருக்கும் போரோ மண் மீது உள்ள பக்தியால் வந்துள்ளது!

ஆம்! மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண்சட்ட திருத்த மசோதா, விவசாயத்தை கார்ப்பரேட் கையில் தாரை வார்க்கும்படி இருப்பதால், விவசாய மண்ணைக்காக்க இதோ திரண்டது ஒரு “விவசாயப்போர்”!!

நீண்டகாலப் போராட்ட திட்டத்தோடும் அதற்கான முன்னேற்பாடுகளுடனும் பல லட்சக்கணக்கான பஞ்சாப் ஹரியானா இன்னும் பல மாநில விவசாயிகள் டெல்லியில் நுழைந்த வண்ணம் இருக்கிறார்கள் என்றால் எந்த அளவிற்கு மோடியின் புதிய விவசாய சட்டம் அவர்களின் வாழ்வாதாரத்தை பாதித்துள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒருநாட்டின் முதுகெலும்பு விவசாயி என்பதை கருத்தில் கொண்டு,

செங்கொடி ஏந்தி… 96,000 ட்ராக்ட்டர்கள், 22,000 லாரிகள். 6 மாதத்திற்கான உணவு பொருட்கள், குளிரை தாங்கும் போர்வைகள், கைப்பேசி சார்ஜர்கள் உள்ளிட்ட அனைத்து விதமான பொருட்களுடன், ஏறத்தாழ 80km நீளத்தில் 1 கோடிக்கும் மேல் விவசாயிகள் பெண்கள், குழந்தைகளோடு தலைநகர் டில்லியில் கூடியுள்ளனர். சராசரியாக ஒரு கிலோமீட்டருக்கு 1.25 லட்சம் பேர் கூடியுள்ளனர்.

இறுதியாக விவசாயிகள் டெல்லிக்குள் நுழைந்துவிட்டனர். பஞ்சாப், ஹரியானா உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயத்தோழர்கள் டெல்லி வருகிறார்கள். விவசாய விரோத மசோதாக்களை திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என தெரிவிக்கிறார்கள்.

உலகிலேயே மக்கள் அதிகமாக கூடிமுன்னெடுத்தப் போராட்டம் இதுதான் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கார்ப்பரேட் ஊடகங்கள் இந்த வரலாற்று செய்தியை மூடி மறைக்க முயல்கின்றன.

அதனால் என்ன??

நம் கைகளில் தவழும் ஒவ்வொரு கைபேசியும் ஒரு ஊடகம்தான். இந்த வரலாற்று சிறப்புமிக்க முற்றுகைச் செய்தியை உலகம் முழுக்கக் கொண்டு செல்வதில் அடுத்த வேளை சாப்பாட்டில் கைவைக்கும் நம் ஒவ்வொருவருக்கும் பொறுப்புண்டு..!!

விவசாயப்பேரணிஎனவே விவசாயிகள் போராட்டத்திற்கு பொதுமக்கள் நாம் ,நாடு தழுவிய ஆதரவை கொடுப்போம்.இந்த செய்தியை அனைவரும் அறிந்து கொள்ளும்படி

FarmersProtest
#DelhiChalo என்ற hastagகளை பயன்படுத்தி தொடர் பரப்புரையில் ஈடுபடுவோம்.
அரசு அடி பணியட்டும் அந்த எளியவர்கள் வெல்லட்டும்.

விவசாயிகள் வெற்றி நமது வெற்றி!
அவர்கள் தோல்வி! நமது அழிவின் ஆரம்பம்!!


மன்னை செந்தில் பக்கிரிசாமி

 

Leave a Reply