Home>>அரசியல்>>கள்ளகுறிச்சி மாணவி மர்ம மரணத்தில் முதலில் காவல்துறைக்கு தகவல் கொடுத்தது யார்?
அரசியல்இந்தியாகல்விகாவல்துறைசெய்திகள்தமிழ்நாடுபெண்கள் பகுதி

கள்ளகுறிச்சி மாணவி மர்ம மரணத்தில் முதலில் காவல்துறைக்கு தகவல் கொடுத்தது யார்?

கள்ளகுறிச்சி மாணவி மர்ம மரணத்தில் இதுவரை CBCID யாரை விசாரணை செய்தது என்று வெளியுலகுக்கு தெரியவில்லை.

பள்ளி தாளாளர் மகன் மற்றும் தம்பியை விசாரணை செய்தததாக தெரியவில்லை. மாணவியின் உடலை முதலில் பார்த்ததாக கூறும் பள்ளி காவலாளியை விசாரித்ததாக தெரியவில்லை. மாணவியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றவர்கள் யார், யார்? வாகனம் ஒட்டியவர் யார் என யாரையும் விசாரித்ததாக தெரியவில்லை. மாணவியை மருத்துவமனை கொண்டு சென்றபோது பணியில் இருந்த மருத்துவர் மற்றும் மருத்துவமனை ஊழியர்களை விசாரித்ததாக வெளியில் தெரியவில்லை.

முதலில் காவல்துறைக்கு தகவல் கொடுத்தது யார்? தகவல் பெற்ற காவல்துறை அதிகாரி யார்? அவர்களிடம் விசாரணை நடைபெற்றதா தெரியவில்லை.

பள்ளியின் பிற ஆசிரியர்களிடம் விசாரனை நடைபெற்றதாக தெரியவில்லை, ஆனால் அவருடன் படித்த சக மாணவன் ஒருவரை விசாரிக்கிறதாம் இன்று CBCID. இந்த செய்தி மட்டும் அனைத்து ஊடகங்களுக்கும் தெரியபடுத்தபட்டுள்ளது அது ஏன்? நீங்கள் இந்த வழக்கை ஒரு கோணத்தில் கொண்டு சென்று முடிக்கலாம் என முடிவு செய்துவிட்டு அதற்கு துணையாக ஊடகங்களை பயன்படுத்துகிறீர்களா?

மாணவியின் மர்ம மரணத்தை வெளிகொண்டு வருவதை விட அவரை களங்கப்படுத்த வேண்டும். பிரச்சனையை திசைதிருப்பி பள்ளி நிர்வாகத்தை காப்பாற்ற வேண்டும் என்பதே பிரதான நோக்கமாக தெரிகிறது.


திரு.ஆனந்தராஜ்,
மன்னார்குடி அமமுக நகர செயலாளர்,
மன்னார்குடி முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்.

Leave a Reply