Home>>தமிழ்நாடு>>மன்னார்குடி என்.சி.சி. மாணவர்களின் தூய்மை பணி
தமிழ்நாடுமன்னார்குடி

மன்னார்குடி என்.சி.சி. மாணவர்களின் தூய்மை பணி

மன்னார்குடி தேசிய மேல் நிலை பள்ளி மற்றும் பின்லே மேல் நிலை பள்ளி தேசிய மாணவர் படை சார்பாக தூய்மை இந்தியா இருவார விழாவினை முன்னிட்டு கும்பகோணம் எட்டாவது பட்டாலியன் பிரிவின் கமாண்டிங் அலுவலர் கர்னல் வினோத் செளகார் ஆணையின் படி மன்னார்குடி புகைவண்டி நிலையத்தில் தூய்மை பணி மேற்கொண்டனர்.

தேசிய மேல் நிலை பள்ளி தலைமை ஆசிரியர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். பின்லே பள்ளி என்.சி.சி. அலுவலர் டேனியல் ராஜாஜி வரவேற்றுப் பேசினார்.

திருவாரூர் மாவட்ட நாட்டுநலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் இராஜப்பா தலமையில் என்.சி.சி. மாணவர்கள் 50 பேர் புகைவண்டி நிலையத்தின் முன்புறமுள்ள பகுதி மற்றும் 1 மற்றும் 2 ஆம் எண் நடைமேடைகள் ஆகிய இடங்களில் உள்ள குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தனர்.

தேசிய பள்ளி என்.சி.சி. அலுவலர் திவாகர் நன்றி கூறினார்.


செய்தி சேகரிப்பு:
பிரசன்னா, மன்னார்குடி.

Leave a Reply