Home>>இந்தியா>>மன்னார்குடியில் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்திய பேரணியில் 100க்கும் மேற்பட்டவர்கள் கைது
இந்தியாசெய்திகள்தமிழ்நாடுமன்னார்குடிவேளாண்மை

மன்னார்குடியில் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்திய பேரணியில் 100க்கும் மேற்பட்டவர்கள் கைது

இன்று (19/12/2020) திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி தேரடியில்… சமீபத்தில் மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து மன்னார்குடி, சுற்றுவட்டாரத்தை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் மன்னை இணையதள நண்பர்கள் ஒருங்கிணைந்து நடத்திய பேரணியில் 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்துக்கொண்டார்கள்.

இந்திய ஒன்றிய தலைநகர் டெல்கியில் பஞ்சாப், கரியானா மாநில உழவர்கள் லட்சக்கணக்கானோர் 20 நாட்களுக்கு மேலாக பனியிலும் போராடி வரும் நிலையில் அவர்களுக்கு மேலும் வலுசேர்க்கவும், வேளாண் சட்டங்களின் தீமைகளை உள்ளூர் மக்களுக்கு உணர்த்தும் வண்ணம் இந்த பேரணியை ஏற்பாடு செய்து இருந்தார்கள்.

பேரணிக்கு உள்ளூர் காவல்துறையிடம் அனுமதி பெற்று மன்னார்குடி தேரடியில் இருந்து கோட்டாட்சியர் அலுவலகம் வரை செல்ல இருந்தவர்களை காவல்துறை இடைமறித்து 100க்கும் மேற்பட்டோரை கைது செய்து AKS மண்டபத்தில் அடைத்தனர்!!

பேரணியில் கலந்துகொண்டவர்கள் 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெற கூறி தொடர் முழக்கங்களை எழுப்பினர்.

இரவு 8 மணி அளவில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்துள்ளார்கள்.


செய்தி சேகரிப்பு:
நிரஞ்சன், மன்னார்குடி.

Leave a Reply