Home>>செய்திகள்>>கோபாலகிருஷ்ணன் நாயுடுவால் குடிசையில் வைத்து 44 பேர் எரித்துக் கொல்லப்பட்ட தினம்
செய்திகள்தமிழ்நாடுவேளாண்மை

கோபாலகிருஷ்ணன் நாயுடுவால் குடிசையில் வைத்து 44 பேர் எரித்துக் கொல்லப்பட்ட தினம்

நாகபட்டினம் மாவட்டத்தில் உள்ள கீழ்வெண்மணி கிராமத்தில் 1968ல் சம்பள உயர்வு கேட்டு போராடிய உழவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தில் இருந்த பெண்கள், குழந்தைகள் என்று கூட பார்க்காமல் குடிசையில் வைத்து 44 பேர் கோபாலகிருஷ்ணன் நாயுடுவால் (இரிஞ்சூர் பண்ணை) உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர்.

எரிக்கப்பட்ட தமிழர்களுக்கு நினைவு செலுத்தும் வண்ணம் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் நினைவேந்தல் ஏற்பாடு செய்யப்பட்டது. மற்றும் அகில இந்தியா விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் இருசக்கர வாகன பேரணியும் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி பல ஊர்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் நேரில் வந்து கலந்துக் கொண்டு நினைவஞ்சலி செலுத்தினார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவேந்தலுக்கு மதுரை செல்லும் திமுக, அதிமுக தலைமைகள் இன்றைய தினம் வரை இந்த படுகொலை நடந்த தினத்திற்கு கீழ்வெண்மணி வந்து நினைவேந்தலில் கலந்துக்கொள்ளவில்லை என்பதே இவர்கள் நிலைப்பாட்டை மக்களுக்கு உணர்த்தும்.


செய்தி சேகரிப்பு:
திரு. ராஜ்குமார், திருத்துறைப்பூண்டி.

Leave a Reply