Home>>செய்திகள்>>ஐயா நம்மாழ்வார் அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு
செய்திகள்தமிழ்நாடுவேளாண்மை

ஐயா நம்மாழ்வார் அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

ஐயா டாக்டர் கோ. நம்மாழ்வார் அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே டாக்டர் கோ.நம்மாழ்வார் விவசாயிகள் கூட்டமைப்பால் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.

30/12/2020 அன்று மாலை 4:00 மணிக்கு அனைத்து தரப்பு மக்களும் கொட்டும் மழையிலும் திரண்டு வந்திருந்து சிறப்பித்தனர். அனைத்து அழைப்பாளர்களும் ஐயாவின் கருத்துகளையும், மத்திய அரசின் கருப்பு சட்டங்களில் உள்ள ஆபத்துகளையும் குறித்து பேசினார்கள்.

விதைகளே பேராயுதம் என்ற அய்யாவின் வாக்கிற்கு ஏற்ப நாட்டு விதைகளை பரவலாக்கும் பணி செய்து வரும் திரு வானவன் அவர்கள் அய்யாவின் புகைப்படத்திற்கு நாட்டு விதைகளை சமர்ப்பணம் செய்து விநியோகம் செய்தார், மேலும் அவர்களின் புதல்வி மாலதி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக பாடல் பாடி மேலும் சிறப்பு செய்தார்கள்.

நமது பாரம்பரிய வாழ்க்கை முறையை தொடர்ந்து மக்களிடம் பரப்பி வரும் திருமதி சீதாலட்சுமி அவர்களின் புதல்வி இராகவி 50 வகையான அரிசி பெயர்களை சொல்லி அசத்தினார். டெல்லி வரை சென்று விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்ட திரு சுபாசு அவர்களின் புதல்வர் செந்தமிழ் மொழி அரசன் இயற்கை குறித்து சிறப்பாக உரையாற்றினார்.

இயற்கைக்காக தொடர்ந்து பயணித்து வரும் கடற்கரை மைந்தன் அவர்களின் புதல்வர் தீக்சித் சிறப்புரை ஆற்றினார். வளர்ந்து வரும் பாடகி செல்வி ஜோதி அவர்கள் சிறப்பாக பாடல் பாடி ஆர்பாட்டத்திற்கு ஆதரவு கோரினார்.

நேரம் சூழல் காரணமாக சில சிறப்பு பேச்சாளர்கள் நேரம் குறைவாகவும், இயலாமலும் அமைந்தது. கொட்டும் மழையிலும் இறுதி வரை நின்று அய்யாவுக்கு அஞ்சலி செலுத்திய அனைத்து உறவுகளும் நெஞ்சில் ஐயாவின் நினைவை உறுதிப்படுத்தினர்.

மேலும் ஊடக நண்பர்களுக்கும், காவல்துறை நண்பர்களுக்கும் சிறப்பாகஒத்துழைப்பு நல்கினர்.

சிறப்புறை ஆற்றிய விருந்தினர்கள்..

திரு. வெற்றிச்செல்வன், வழக்கறிஞர், சென்னை உயர்நீதிமன்றம், பூவுலகின் நண்பர்கள் அமைப்பு.
தோழர் சிவகாமி, அறங்காவலர், வானகம்.
திரு சிவ இளங்கோ, தலைவர், சட்டப்பஞ்சாயத்து இயக்கம்.
திருமதி ஜோதிலட்சுமி சுந்தரேசன், ஒருங்கிணைப்பாளர், மக்களின் குரல்
திரு. மணிகண்டன், தலைவர், காக்கை அறக்கட்டளை,
திரு ஜெகதீஸ்வரன், சமூக செயற்பாட்டாளர்,
தோழர். க. இந்துமதி, வழக்கறிஞர், சென்னை உயர்நீதிமன்றம், ஒருங்கிணைப்பாளர், டாக்டர் கோ.நம்மாழ்வார் விவசாயிகளுக்கான கூட்டமைப்பு,
திரு. அறிவரசன், துணைத்தலைவர், நல்ல உணவு அறக்கட்டளை,
திரு.விஜய் ஆனந்த், அன்பு பாலம்,
திரு. டேவின், டிசம்பர் 3 சென்னை டீம்,
திரு சதீஷ், வனத்துக்குள் வாணியம்பாடி,
திரு. வானவன், அத்திக்குழு..
தோழர். பிரேமா, ஹோமியோபதி மருத்துவர்..
திரு. சாவித்திரி கண்ணன்,
தோழர் வெற்றிச்செல்வி, மக்கள் பாதை,
திரு. இலயோலா மணி, இளையோர் கூட்டமைப்பு
திரு.இனமுள் ஹசன், சமூக நல்லிணக்க முன்னனி,

தோழர். ஹரீஷ் சுல்தான், நீர்நிலைகள் பாதுகாவலர் மற்றும் வந்திருந்து சிறப்பித்த அனைத்து அழைப்பாளர்களும் அய்யாவின் கருத்துகளையும், மத்திய அரசின் கருப்பு சட்டங்களில் உள்ள ஆபத்துகளையும் குறித்து பேசினார்கள்.


-தோழமையுடன்
பேரளம் பிரகாஷ்

Leave a Reply