கடந்த வாரத்தில் காவிரிப்படுகையில் பெய்த தொடர் கனமழையால் பொங்கல் நேரத்தில் அறுவடைக்கான நிலையை எட்டிய அனைத்து பயிர்களும் நீரில் மூழ்கி ஒட்டுமொத்த உழவர்களுக்கும் மிக பொருளாதார நெருக்கடியை கொடுத்துள்ளது. இதுவரை உரிய நேரத்தில் பெய்யாமல் கெடுத்த மழை, இந்த ஆண்டில் காலம் தவறி பெய்து கெடுத்துள்ளது என்றே கூற வேண்டும்.
அது தொடர்பாக கூடுதல் விவரங்களை தமிழக காவிரிப்படுகை பகுதியில் வானிலையை கணித்து கூறிவரும் ஹேமச்சந்தர் அவர்கள் தனது முகநூல் பக்கத்தில் கட்டுரையாக வெளியிட்டுள்ளார், அதை இங்கு பகிர்கிறோம்…
உழவர்களின் வேதனை குரல்!
- சனவரி மாதத்தில் வரலாறு காணாத அளவிற்கு பருவம் தப்பி பெய்த பெருமழை, நிறைவடைந்திருந்தாலும், உழவர்களின் வேதனை குரல் வெளிவராமலே உள்ளது.
- 1923 ஆம் ஆண்டு ஜனவரியில் தமிழகத்தின் சராசரி 14 செ.மீ மழை பதிவாகியுள்ளது. அதன் பின் 2021ஆம் ஆண்டு ஜனவரி 17 இன்று வரை தமிழகத்தில் 13.7 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இது ஏறத்தாழ 14 செ.மீ என்றே எடுத்துக்கொள்ளலாம்.
- இம்மழை அதிகபட்சமாக திருவாரூர் மாவட்டத்தில் மாவட்ட சராசரியாக 38 செ.மீ மழையும்,, திருநெல்வேலில் மாவட்டத்தில் மாவட்ட சராசரியாக 37 செ.மீ மழையும், நாகப்பட்டினத்தில் 30 செ.மீ மழையும், கடலூர் மாவட்டத்தில் 28.5 செ.மீ மழையும், காரைக்காலில் 28 செ.மீ மழையும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 27.5 செ.மீ மழையும் மாவட்ட சாராசரியாக பதிவாகியுள்ளது. இவை அனைத்துமே புள்ளியல் ஈரிதியாக 1923 ஆம் ஆண்டிற்கு பின் பெய்த பெருமழை ஆகும்.
- இதேபோல காவிரிப்படுகைவின் கடலோர பகுதிகளின் பல இடங்களில் கடந்த 15 நாட்களில் 35 முதல் 50 செ.மீ வரை மழை பெய்துள்ளது.
- இந்த பெருமழை விவசாயிகளை பல விதத்தில் பாதித்துள்ளது.
- அறுவடைக்கு தயாரான பயிர்கள் அனைத்தும் நீரில் முழ்கி அழுகிய நிலையில் உள்ளது.
- மண்ணிலும், காற்றிலும் ஈரப்பதம் அதிகமிருப்பதாலும், சரியான வடிகால் வசதி இல்லாததாலும் மழை குறைந்தும் மழை நீர் வடியவில்லை.
- மொத்தமாக நெற்மணிகள் நீரில் மூழ்கியிருப்பாதால் பெரும்பாலான இடங்களில் நெற்மணிகள் வேர்விட்டு, தளிர்விட தொடங்கியுள்ளது.
- CR சப் என்ற ரக நெல் விதைத்தோர் பெரும்பாலானோரது நெற்கதிர்கள் முழுதாக சாய்ந்துபடுத்த நிலையில், தண்ணீர் முழ்கி நாசமாகியுள்ளது.
- பிபிடி விதைத்தோர்க்கும் பெரும்பாலான பயிர்கள் சாய்ந்தும், பல இடங்களில் நெற்கதிர்கள் சாயமலே வளரத்துவங்கியுள்ளது.
பிபிடி சாயமால் தளிர் விட காரணம்:
- கடந்த 15 நாட்களில் காவிரிப்படுகையில் பெரும்பாலான நாட்கள் வெப்பநிலை 29.5° செல்சியஸ் க்கு குறைவாகவே இருந்தது.
- காற்றில் ஈரப்பதம் 85% மேல் தொடர்ந்து வந்தது.
- தொடர் கனமழையாக் நெற்மணிகள் மூழ்கிய நிலையில் தண்ணிரிலேயே ஊர் இருப்பதால்.
- இதுபோன்ற காரணிகளாலும், சூழலும் முற்றாத கதிர்கள், சாயாத கதிர்கள் கூட வேர்விட்டு முளைக்க துவங்கியுள்ளது, இன்று அடிக்கும் வெயிலில் நாளை அதிகமாக முளைப்பு திறன் என்ற அபாய நிலையில் உள்ளது.
6. காவிரிப்படுகையில் கிட்டத்தட்ட 95% சதவீகித விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.
மழை குறைந்துவிட்டதே? அறுவடை தொடங்கலாமா?
மழை இன்றுடன் விலகியிருக்கிறதே அறுவடையை தொடங்கினால் என்ன என்ற கேள்வி பலரது மனதில் எழும்…
- அப்படி செய்ய இயலாது அனைத்து வயல்களிலும் தண்ணீர் முழுமையாக வடியவைத்து, காயவைக்க வேண்டும்.
- இதில் காயவைக்கம் தருணத்தில் அதிகமான நாற்றுகள் மீண்டும் தளிர் விடும் நிலை வரலாம்.
- சனவரி 20 அல்லது 21ம் தேதி அதிகாலை/காலை நேரங்களில் டெல்டவில் மழை வாய்ப்பு உள்ளது. அம்மழை சிறு மழையாகவும் சிறு இடத்தில் இருந்தாலும் மீண்டும் பழைய பாதிப்பு நிலைக்கு வரலாம்.
- அறுவடை இயந்திரங்கள் டெல்டாவில் பெரும் தட்டுபாடு ஏற்படலாம், அதனால் அறுவடை இயந்திரத்தின் வாடகை அதிகரிக்கப்படலாம்.
- அறுவடை இயந்திரங்கள் வந்தாலும், தற்போது வயலில் இறங்க முடியாத சூழல். டிராக்டர் வயலில் இறங்க வேண்டுமெனில் குறைந்தது மூன்று/நான்கு நாட்கள் வயல்கள் நன்கு காய்தல் வேண்டும்.
- நெல் கொள்முதல் செய்யும் நிலையங்களை உடனடியாக அரசு திறக்க வேண்டும்.
- நேரடியாக ஆட்களை விட்டு அறுவடை செய்வதும் தற்போதைய நிலையில் சாத்தியமில்லை.
அறுவடை சிரமங்கள்!
- என்ன தான் நிலம் பாலாகிபோயிருந்தாலும், ஒவ்வொரு விவசாயின் மனநிலை என்னவோ முடிந்தவரை அறுவடை செய்து தேறுவதை பார்க்கலாம் என்று தான் இருக்கிறது.
- அப்படி பட்ட விவசாயி தற்போது அறுவடை இயந்திரம் இல்லாமல் கை அறுவடை செய்தாலும் நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் எடுத்துக்கொள்ள வாய்ப்பு குறைவு, நெல்லில் ஈரப்பதம் 20% மேல் இருந்தாலும், நெற்மணிகள் முளைத்திருந்தாலும் கொள்முதல் செய்துக்கொள்கிறோம் என அரசு உடனடியாக அறிவித்தாக வேண்டும்.
- நேரடி கை அறுவடையில் செலவும், உழைப்பும் அதிகம் செலுத்த வேண்டும். அப்படியும் விவசாயிகளின் முதல் கூட தேறுவதற்கு வாய்ப்பு இல்லை.
அனைத்து மாவட்ட விவசாயிகளின் இன்னல்கள்!
காவிரிப்படுகை உழவர்களின் நிலை!
- காவிரிப்படுகையில் கடலூர், காரைக்கால், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை பெரும்பாலான இடங்களில் கிட்டதட்ட 90% பயிர்கள் வீணாகியுள்ளது.
தென் மாவட்ட விவசாயிகள் நிலை! - காவிரிப்படுகை போல தென்மாவட்டங்களிலும் குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களிலும் பெய்த பெருமழையால் வெள்ளபாதிப்பும், உழவர்களும் பெரும் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.
கொங்கு மாவட்ட உழவர்கள் நிலை!
- கொங்கு பகுதியில் சனவரி 6ம் தேதி பெய்த பெருமழையும், அதனை தொடர்ந்து பெய்த தொடர் மிதமான மழையும் மக்காச்சோள பயிர்களை முளைக்க வைத்துள்ளது, பல இடங்களில் வெங்காய நாற்று விட்டு நடவு செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வடமாவட்ட உழவர்களின் நிலை! - செங்கல்பட்டு, விழுப்புரம் போன்ற மாவட்டங்களில் அறுவடை பெரிதாக பாதிக்கப்பட்டுள்ளது.
- திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், செங்கல்பட்டு போன்ற பகுதிகளில் விதைக்கப்பட்ட கோடைகால பயிர்களான எள், ஊளுந்து, பருத்தி, வேர்கடலை போன்றவை பெரிதாக பாதிக்கப்படுள்ளது.
மொத்தத்தில் அனைத்து மாவட்ட உழவர்களும் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர், காவிரிப்படுகையில் பேரழிவு நிகழ்ந்தேரியுள்ளது.
இதனை தமிழக அரசு உடனடியாக இயற்கை பேரிடராகவும், காவிரிப்படுகை பேரிடராகவும் அறிவிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
அன்பை விதைப்போம்
டெல்டாவெதர்மேன் ஹேமச்சந்தர்,
மற்றும் அலையாத்தி செந்தில்
முகநூல் பதிவின் முகவரி: https://www.facebook.com/DeltaHemachander/posts/272750700877939