Home>>இந்தியா>>காவிரிப்படுகையைப் பாதுகாப்போம் பொதுக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது!
இந்தியாசுற்றுசூழல்செய்திகள்தமிழ்நாடுவேளாண்மை

காவிரிப்படுகையைப் பாதுகாப்போம் பொதுக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது!

நேற்று 27.08.2022 மாலை, மயிலாடுதுறை சின்னக்கடைத்தெருவில் மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் சார்பில் “நாசகார எண்ணை எரிவாயுத் திட்டங்களிலிருந்து காவிரிப்படுகையைப் பாதுகாப்போம்!” என்ற முழக்கத்தோடு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் பங்கேற்க அழைக்கப்பட்ட அனைத்து தலைவர்களும் வருகை தந்திருந்தனர்.

கூட்டத்தில் தலைமை பொறுப்பை திரு.க.செல்வ அரசன் ஏற்றார். திரு. அருள்தாஸ் அவர்களின் எழுச்சி இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த.செயராமன் நோக்க உரையாற்றினார். பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன் விளக்க உரையாற்றினார். தலைவர்கள் முன்னிலையில் மக்களின் வரவேற்புடன் 16 முக்கிய தீர்மானங்கள் இயற்றப்பட்டன.

ம.ம.க.பொதுச்செயலாளர் திரு.ப.அப்துல் சமது MLA மற்றும் வி. சி. க. துணைப் பொதுச்செயலாளர் திரு. இர.வன்னி அரசு ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

தொடர்ந்து, தி.வி.க. தலைவர் திரு. கொளத்தூர் த.செ.மணி, எஸ்.டி.பி.ஐ. மாநிலத்தலைவர் திரு.நெல்லை முபாரக், மீத்தேன் திட்ட எதிர்ப்புக்கூட்டமைப்பின் ஆலோசகர் வழக்கறிஞர் அ.நல்ல துரை, தமிழ் மீனவர் விடுதலை வேங்கைகள் தலைவர் திரு.இரா.மங்கையர் செல்வன் ஆகியோர் உரையாற்ற இருந்த நிலையில் பெருமழை பெய்து கூட்டத்தைத் தொடர முடியவில்லை.

ஆனாலும், பொதுக்கூட்டம் தன் இலக்கை எட்டியது என்ற கருத்தையும் மகிழ்ச்சியையும் தலைவர்கள் பகிர்ந்துகொண்டனர். பெருந்திரளாக மக்கள் பொதுக்கூட்டத்திற்கு வருகை தந்திருந்தனர். பெண்கள் பெருமளவில் பங்கேற்றனர். காவிரிப்படுகைப் பாதுகாப்பை உறுதி செய்யும் அடுத்த கட்ட செயல்பாடுகள் தொங்கியுள்ளன.


பேராசிரியர் த.செயராமன்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு.
28.08.2022.

Leave a Reply