Home>>இந்தியா>>மக்களாட்சிக் குறியீடு பட்டியல்: இந்தியா 51 வது இடம்
இந்தியாஉலகம்செய்திகள்

மக்களாட்சிக் குறியீடு பட்டியல்: இந்தியா 51 வது இடம்

2020ம் ஆண்டுக்கான மக்களாட்சிக் குறியீட்டின் உலகளாவிய தரவரிசையில் இந்தியா பத்து இடங்கள் சரிந்து 51 வது இடத்திற்கு பின்தங்கி உள்ளதாக பொருளாதார புலனாய்வு பிரிவு (ஈஐயு) தெரிவித்துள்ளது. நாட்டின் தரவரிசை சரிந்ததற்கு மனித உரிமைகள் மீதான ஒடுக்குமுறைகளே முக்கிய காரணம் என கூறப்படுகிறது.

ஆண்டுதோறும் உலகம் முழுவதும் உள்ள நாடுகளின் அரசியல் அமைப்புகள் செயல்படும் விதம் குறித்து ஆய்வு மேற்கொண்டு இந்த பட்டியல் தயார் செய்யப்படுகிறது. இதில் இந்த ஆண்டுக்கான 167 நாடுகள் அடங்கிய தரவரிசை மற்றும் ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா 2018-ல் இந்தக் குறியீட்டில் 7.23 புள்ளிகளுடன் 41 ஆவது இடத்தில இருந்தது. இந்த சூழலில் 2019 ஆம் ஆண்டில் 6.90 புள்ளிகளுடன் 10 இடங்கள் சரிந்து 51 ஆவது இடத்தை பிடித்துள்ளது.

இந்த மக்களாட்சிக் குறியீட்டு பட்டியலில்,நாட்டு மக்களின் சுதந்திரம், உரிமைகள் மற்றும் அரசாங்கத்தின் செயல்பாடுகள்,மக்களின் உரிமை பறிப்பை மிகமுக்கிய காரணியாக எடுத்துக்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இந்திய அரசு மேற்கொண்ட ஜம்மு காஷ்மீர் விவகாரம் மற்றும் குடியுரிமை திருத்த சட்ட மசோதா உள்ளிட்ட பல அரசியல் ரீதியிலான முடிவுகள் மற்றும் போராட்டங்கள், போராட்டங்கள் மீதான அடக்குமுறைகள் போன்ற அதன் விளைவுகள் காரணமாக இந்தியா இந்த சரிவை சந்தித்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் நார்வே, ஐஸ்லாந்து, ஸ்வீடன் ஆகிய நாடுகள் முறையே முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன. வடகொரியா கடைசி இடத்திலும் உள்ளன.

அதில் 23 நாடுகளை முழு மக்களாட்சி நாடுகளாகவும், 52 குறைபாடுள்ள மக்களாட்சி நாடுகளாகவும், 35 கலப்பின ஆட்சிகளாகவும், 57 சர்வாதிகார ஆட்சிகளாகவும் வகைப்படுத்தப்பட்டு உள்ளன.

ஆசியாவில் சிங்கப்பூர், ஹாங்காங்கும் இந்த விஷயத்தில் பின்னடைவு கண்டுள்ளன. இந்த உலகளாவிய பட்டியலில் 165 நாடுகளிலும், இரண்டு பிராந்தியங்களும் இடம் பெற்றுள்ளது. ஒரு நாட்டில் நடைபெறும் தேர்தல் செயல்முறை மற்றும் பன்மைவாதம், அரசாங்கத்தின் செயல்பாடு, அரசியல் பங்கேற்பு, அரசியல் கலாச்சாரம் மற்றும் சிவில் உரிமைகள் ஆகிய ஐந்து பிரிவுகளை அடிப்படையாகக் கொண்டு, இந்த பட்டியல் வெளியிடப்படுகிறது.

2010-ம் ஆண்டு உலகப்பொருளாதார நெருக்கடி இருந்த போது கூட ஜனநாயக உரிமைக் குறியீடு இவ்வளவு பின்னடைவு காணவில்லை, ஆனால் 2019-ல் பின்னடைவு கண்டுள்ளது.

காஷ்மீரில் இணையதள முடக்கம், அங்கு அரசியல் தலைவர்கள் காவலில் வைக்கப்பட்டது உள்ளிட்ட விவகாரங்கள் இந்தப் பின்னடைவில் தாக்கம் செலுத்தியதாக இந்த அறிக்கை கூறுகிறது. இந்நிலையில் 2006-ல் பொருளாதார புலனாய்வு பிரிவு (இஐயு) இந்த ஆய்வைத் தொடங்கிய போது இருந்ததை விட 2019-ம் ஆண்டு இந்தியா இந்த விஷயத்தில் பின்னடைவு கண்டுள்ளது.

இதற்கு அளவீடாக ‘முழு மக்களாட்சி ’, குறைபடு மக்களாட்சி , கலந்த மக்களாட்சி , எதேச்சதிகாரம் என்று 4 பிரிவுகளின் கீழ் புள்ளிகள் வழங்கப்பட்டதில் இந்தியா குறைபாடு மக்களாட்சி என்ற பிரிவில் உள்ளது. சீனா 153வது இடத்தில் உள்ளது.

இந்திய ஒன்றியத்தில் தற்போது கையாளப்பட்டு வரும் அடக்கு முறைகளும் , உழவர்கள் மற்றும் மக்களை நசுக்கும் திட்டங்களும் , அரசு நிறுவனங்களை கையகப்படுத்தும் தனியார் நிறுவங்களின் தலையெடுப்பும் மேலும் நீடித்தால் மக்களாட்சியையும் , பன்முகத்தன்மையையும் இந்தியா இழந்து மேலும் கீழ் செல்லும் என்பது நிதர்சனமான உண்மை.

செய்தி சேகரிப்பு
இளவரசி இளங்கோவன் ,கனடா

Leave a Reply