Home>>அரசியல்>>இஸ்லாமிய பெண்கள் கூட்டமைப்பு – பேரணி மற்றும் ஆர்பாட்டம்
அரசியல்தமிழ்நாடுமன்னார்குடி

இஸ்லாமிய பெண்கள் கூட்டமைப்பு – பேரணி மற்றும் ஆர்பாட்டம்

நம் உயிரிலும் மேலான முஹம்மது நபி ஸல்லல்லாஹூ அலைஹிவஸ்ஸலாம் அவர்களை பற்றி இழிவாக பேசிய பாசக உறுப்பினர் “கல்யாண ராமனை” அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி, இஸ்லாமிய பெண்கள் கூட்டமைப்பு சார்பாக இன்று 04.02.2021 மாலை 4.30 மணியளவில் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் பகுதியில் பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

இதில் நாம் தமிழர் கட்சியின் திருவாரூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் R. வினோதினி அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

மேலும் அமைதியாக மற்றும் சகோதரத்துவத்துடன் உள்ள நம் தமிழகத்தில் இதுப்போன்று வெறுப்புணர்வுகளை மக்களிடம் விதைக்கும் ஆட்களை சட்டப்படி தண்டித்து எதிர்காலத்தில் இதுப்போன்று நடைபெறாமல் இருக்கவும், சட்டங்கள் மேலும் கடுமையாக்கப்பட வேண்டும் என்று போராட்டத்தில் கலந்துக்கொண்டவர்கள் கூறினார்கள்.


செய்தி உதவி:
ரியாஜ், அத்திக்கடை.

Leave a Reply