Home>>அரசியல்>>தமிழக சட்டமன்ற தேர்தலில் பாமக போட்டியிடும் இடங்கள் வெளியீடு
அரசியல்செய்திகள்தமிழ்நாடுதேர்தல்

தமிழக சட்டமன்ற தேர்தலில் பாமக போட்டியிடும் இடங்கள் வெளியீடு

ஏப்ரல் 6ஆம் தேதி நடைப்பெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 23 இடங்கள் ஒதுக்கிய நிலையில் இன்று (10/03/2021) அவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளின் பெயர்களையும் அஇஅதிமுக கட்சியின் இருந்து வெளியிட்டுள்ளார்கள்.

செஞ்சி, மைலம், ஜெயங்கொண்டம், திருப்போரூர், வந்தவாசி (தனி), நெய்வேலி, திருப்பத்தூர் (திருப்பத்தூர் மாவட்டம்), ஆற்காடு, கும்மிடிப்பூண்டி, மயிலாடுதுறை, பென்னாகரம், தருமபுரி, விருத்தாச்சலம், காஞ்சிபுரம், கீழ்பென்னாத்தூர், மேட்டூர், சேலம் (மேற்கு), சோளிங்கர், சங்கராபுரம், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, பூந்தமல்லி (தனி), கீழ்வேலூர் (தனி), ஆத்தூர் (திண்டுக்கல் மாவட்டம்) போன்ற தொகுதிகளை பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒதுக்கியுள்ளார்கள்.

வன்னியர் இன சமூகத்திற்கான உள் ஒதுக்கீட்டை சமீபத்தில் பாமக பெற்று தந்ததால் அவர்களுக்கு கடந்த தேர்தலைவிட இம்முறை பல தொகுதிகளில் கூடுதலாக வாக்குகள் பெற உதவும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இதன் தொடர்ச்சியாக பிற தமிழ் சமூகங்களும் தங்களுக்கான உரிய இட ஒதுக்கீட்டை வழங்கக்கோரியும் குரல்கள் எழுந்த வண்ணம் உள்ளது. ஆனால் இனி வழங்கப்படவுள்ள இட ஒதுக்கீடு என்பது தேர்தலுக்கு பின்னர் அமைய உள்ள ஆட்சியாளர்கள் கையில் உள்ளது என்பது தான் உண்மை.


செய்தி சேகரிப்பு:
இராசசேகரன், மன்னார்குடி.

Leave a Reply