Home>>அரசியல்>>திமுக கூட்டணி வேட்பாளர்கள் அறிவிப்பில் இடஒதுக்கீடு, பெண்களுக்கு சமமாக வாய்ப்பு கிடைக்குமா?
அரசியல்செய்திகள்தமிழ்நாடுதேர்தல்

திமுக கூட்டணி வேட்பாளர்கள் அறிவிப்பில் இடஒதுக்கீடு, பெண்களுக்கு சமமாக வாய்ப்பு கிடைக்குமா?

ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி (06/04/2021) நடைப்பெறவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு பல கட்சிகள் தங்களின் கூட்டணியில் தொகுதி பங்கீட்டை நிறைவு செய்து வேட்பாளர்களை அறிவித்து வரும் நிலையில், திமுக கூட்டணி வேட்பாளர்கள் அறிவிப்பு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை மக்களிடம் உருவாக்கியுள்ளது.

குறிப்பாக கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றில் உரிய இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கூறும் திமுகவினர், இந்த தேர்தலில் அதில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கும் உரிய இடஒதுக்கீட்டை வழங்குவார்களா?, மற்றும் பெண்ணுரிமை, பெண் சுதந்திரம் பேசுபவர்கள், பெண்களும் இந்த தேர்தலில் போட்டியிட சமமாக வாய்ப்பு வழங்குவார்களா? என்ற கேள்விகளை பலரும் முன்வைத்து வருகிறார்கள்.

காரணம் திராவிடர் கழக நிறுவனர் ஐயா. இராமசாமி அவர்களின் கனவை மெய்ப்பிக்கும் வண்ணம் திமுக இம்முறையாவது செயல்படுமா அல்லது கட்சியின் விளம்பரத்திற்கும், தேர்தலில் வாக்கு சேகரிக்க மட்டும் அவரின் படத்தை பயன்படுத்துமா என்று கேள்விகளும் எழ துவங்கியுள்ளன. இதற்கான விடை திமுக கட்சியின் வேட்பாளர்களின் பெயர்களை அறிவிக்கும் பொழுதே நமக்கு தெரிய வரும்.

ஆனால் தமிழ் தேசிய கருத்தியலை முன்வைத்து தேர்தலை சந்திக்கும் நாம் தமிழர் கட்சி இந்த சட்டமன்ற தேர்தலுக்கு கடந்த ஞாயிறு (07/04/2021) அன்று நடைப்பெற்ற வேட்பாளர்கள் அறிமுக விழாவில் பெண்களுக்கு சமமாக போட்டியிட வாய்ப்பை வழங்கி பெண்கள் தரப்பு வாக்காளர்களை அதிகம் கவர்ந்து வருகின்றனர்.

இந்த அறிவிப்பு தேர்தலில் களத்தில் நடைப்பெற்றுள்ள மிக முக்கியமாக நிகழ்வாக பார்க்கப்படுகிறது. காரணம் இதை இத்தனை ஆண்டுகள் அரசியல் செய்யும் எந்த கட்சியும் இன்று வரை இதை செய்யவில்லை என்பது தான் உண்மை.

திமுகவின் பெண் சுதந்திரம், பெண்கள் முன்னேற்றம் குறித்த பேச்சு எத்தனை சதவீதம் செயல்வடிவம் பெறுகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Leave a Reply