Home>>அரசியல்>>மஞ்சள் படை என்கிற போலிக் கணக்கில் வன்னியர்களை முட்டாளாக சித்தரிக்கிறார்கள்.
அரசியல்செய்திகள்தமிழ்நாடுதிரைத்துறை

மஞ்சள் படை என்கிற போலிக் கணக்கில் வன்னியர்களை முட்டாளாக சித்தரிக்கிறார்கள்.

அரசியல் உரையாடலை சமூக ஊடகங்கள் வழியாக பெறுவது எவ்வளவு அபத்தமான ஒரு போக்கு என்பதற்கு ஜெய்பீம் ஒரு நல்ல உதாரணம். படம் வெளிவந்து நல்ல வரவேற்பைப் பெற்றது. இணைய உடன்பிறப்புக்கள் சந்துரு NEETக்கு ஆதரவாக உள்ளார் என்று பதிவு போட்டார்கள். அது அவர்களது வழக்கம். காந்தி, அப்துல் கலாம், நம்மாழ்வார் என்று யாருக்காவது நல்ல பெயர் வந்தால் பதறிக் குதறுவார்கள்.

சந்துரு அந்த வழக்கிற்கு பணம் வாங்கினார் என்று எழுதினார்கள். அந்தப் பணத்தை தான் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வாங்கவில்லை என்றும் நீதிமன்றம் ஐயாயிரம் ரூபாய் ஒதுக்கியது என்றும் அதையும் பெண்ணுரிமை அமைப்புக்கு வழங்கியதாக சந்துரு சொல்கிறார். திடீரென்று லேசாக வன்னியர் சங்கக் நாட்காட்டி பிரச்சினை வந்தது. அப்போதும் உ.பிக்களின் காலக் கோட்டில் உணர்வைப் புண்படுத்தும் விதமாக சூர்யா நடித்தார் என்று பதிவிட்டார்கள்.

தங்கள் அரசியல் இருப்புக்கே ஆபத்து என்று அன்புமணி இரண்டு நாட்களில் ஒன்பது கேள்விகள் அனுப்பினார். அடுத்து புரிதலுக்கு நன்றி Trending.

அடுத்து மஞ்சள் படை என்கிற போலிக் கணக்கில் வன்னியர்களை முட்டாளாக சித்தரிக்கிறார்கள். தமது இருப்பிடத்தை தக்கவைக்க நாளொரு பொய்யை trend செய்கிறதும் அதை மோதலாக கருதி இங்கே சண்டையிடுவதும் வழக்கம். மோதி கும்பல் தொழில்நுட்பத்தை எப்படிக் கையாள்கிறதோ அவ்வாறே தமிழ்நாட்டில் முக்கியமான பிரச்சினைகளில் இருந்து திசை திருப்ப தினம் ஒரு டிரென்டிங் மைய விசையில் இருந்து வருகிறது.

அந்தக் குறவர் பெண் அஸ்வினி பல காலமாக trendல் இருக்கிறார்.

வெள்ளை அறிக்கைக்குப் பின்னர் ஒரு பொருளாதார நகர்வையும் காணவில்லை. மிகப் பெரிய ஊடக சால்றா சத்தம். தலை வலிக்குது.


திரு. இளங்கோ கல்லானை,
எழுத்தாளர்.


செய்திசேகரிப்பு:
திரு. அருள்பாண்டியன்,
பூவனூர், மன்னார்குடி.

Leave a Reply