Home>>இலக்கியம்>>மன்னார் பொழுதுகள் – புதினம் வாசிப்பு அனுபவம்
இலக்கியம்நூல்கள்மன்னார்குடி

மன்னார் பொழுதுகள் – புதினம் வாசிப்பு அனுபவம்

எழுத்தாளர் வடுவூர் “வேல்முருகன் இளங்கோவின் மன்னார் பொழுதுகள்” நூல் வாசிப்பு அனுபவம்…

16ம் நூற்றாண்டில் அரபி தேசத்தில் இருந்து படை எடுத்து வந்து பாண்டிய தேசத்து கடற்கரை பகுதிகளை தாக்குவது வாடிக்கையாக இருக்க அவர்களை எதிர்த்து போராட பரதவகுடி கையில் ஆயுதங்களை ஏந்தினர் இருப்பினும் மூர்க்கம் கொண்ட அரபியர்களை எதிர்க்க அவை போதவில்லை ஆகையால் வேறு வழியின்றி வெடிமருந்திற்க்காவும் போர் கருவிகளுக்காவும் போர்த்துகீசியர்களுடன் ஓர் உடன்படிக்கை செய்துக்கொண்டனர். எவ்வளவு பொருள் கொடுத்தும் போர்த்துகீசியர்களைக்கு போதவில்லை என்பதால் சங்கம் தொட்டு தரித்து வந்த சைவத்திருநீற்றை விடுத்து பேருதவிக்கு செய்நன்றியாய் சிலுவைகளை தோள்களில் அணிந்துக்கொண்டு கிருஸ்த்துவர்களாக மாறுகிறார்கள்.

வேதளை என்ற இடத்தில் வைத்து வஞ்சம் தீர்க்க செல்ல சேதுநிலத்து தேவமார்களும் பரதவர்களோடு துணைநின்று அரபியரை தமிழ்பெருங்கடலை விட்டு விரட்டி அடிக்க! அவர்கள் இலங்கைக்கு தப்பியோடி இரப்பாளி என்ற கடற்க்கொள்ளையனுக்கு வழித்தடங்களை காட்டிக்கொடுக்க அதற்கு அப்போது மதுரையை ஆண்டு வந்த நாயக்கர்ளும் துணைநிற்க அவன் வந்து கொள்ளையடிப்பதும் பிணைக்கைதிகளாக பிடித்துச்செல்வதும் வாட்டிக்கையாக இருந்தது.

முத்துநகர போரில் களம் கண்டவனும் நாயக்கர்களின் சூழ்ச்சியில் சிக்கி உயிர்துறந்த தேவராயரின் மகன் காத்தவராயனும் அப்படியான சூழ்ச்சியில் சிக்கி இரப்பாளியின் பிணையக்கைதியாக செல்கிறான். ஏழு முத்துக் குளித்துறைகளின் மன்னரான தெக்ரூஸ் பரதவர் பாண்டியரின் தளபதியும், தன் நண்பனுமான கொற்கைக்கோ வை காக்க தன் உயிரை தியாகம் செய்கிறான் காத்தவராயன். இந்த தியாகத்தை போற்ற அவன் வாரிசுக்கு அடுத்தாரை காத்தார் என்ற பெயரிடுகிறார் தளபதி கொற்கைக்கோ. என்ற சரித்திரக்குறிப்புகளுடன் நூல் ஆரம்பம் ஆகிறது.

இரண்டாம் உலகப்போரின் போது பர்மாவில் நேதாஜியின் ஐஎன்ஏ படையும் பங்கு கொண்டு போரிட்டது என்பது நாம் அறிந்தது. நேத்தாஜி வான்விபத்து ஒன்றில் இறந்ததாக செய்தி வரவும் ஜப்பானில் அணுகுண்டு வீசப்பட்டதும் அதை தொடர்ந்து ஆங்கிலேயர் கை ஓங்கவும், அங்கு நடந்த குழப்பத்தில் தந்தை ராமசாமி கங்காணியார் கொல்லப்படவே அண்ணனும் தம்பியும் பர்மாவில் உள்ள சொத்துக்களை விற்றுவிட்டு நாகப்பட்டினம் வந்து அடைகிறார்கள். பின் புதுக்கோட்டை பகுதியில் நிலங்கள் வாங்கிக்கொண்டும் வீடுகள் கட்டிக்கொண்டு வாழத்தொடங்குறிரார்கள்.

சுதந்திரம் பிறந்து விட்டது என்ற செய்தியைக்கூட பெரிதுப்படுத்திக்கொள்ளாமல் அம்பாசமுத்திரம் அருகில் உள்ள கிரமங்களில் பருவகால விவசாய வேலையில் மக்கள் தங்கள் வேலையில் மும்முரமாக இருக்கும் குடும்பங்களில் சுடலைமுத்து நாட்டார் குடும்பமும் ஒன்று. சுடலைமுத்து இரண்டு மகள் மூன்று மகன்கள் தன் மனைவி என வாழ்ந்து வருகிறார். அவரது மூத்த மகள் மங்கமாள் சில கயவர்களால் கற்ப்பழிக்கப் படுகிறாள். அதை அறிந்து அவமானத்தால் ஓர்நாள் இரவில் சுடலைமுத்தும் அவர் மகன்களும் மங்கமாவை மாட்டு கொட்டகையில் வைத்து உயிருடன் எரித்துக் கொன்று விடுகிறார்கள்.

இப்படி இரு குடும்பங்களின் கதையாக இருவேறு பாதையில் இந்த நூல் 60,70 ஆண்டுகால வாழ்க்கை பயணமாக பயணிக்கத் தொடங்குகிறது. இந்த காலக்கட்டங்களில் இப்பகுதியில் நடத்த பிரச்சனைகள் குறிப்பாக ஸ்டர்லைட் நிறுவனம் தொடங்கும் நிலையில், அதற்கா தாதுப்பொருட்கள் வரும் கப்பலை எப்படி பரதவக்குடி மக்கள் கடலில் தடுத்து நிறுத்துகிறார்கள். பின் அதை ஆரப்போட்டு அப்பகுதியில் சாதி கலவரங்கள் தூண்டப்பட்டு ஒன்றாக போராடிய மக்கள் சிதைந்து வேறு திசை திரும்பிய நிலையில் தரைவழியாக தாதுப்பொருட்களை கொண்டு வந்து நிறுவனத்தை செயல்பட வைத்தார்கள். அதன் பின் அங்கு நிகழும் சூழியல் வேறுபாடுகள் வாழ்கை மாற்றங்கள், தமிழீழத்தில் நடந்த பிரச்சனைகள், அதற்கு அப்பகுதி மக்களின் நிலைப்பாடு புலிகளுக்கு எவ்வாறான உதவிகளை எப்படி பட்ட சூழ்நிலையில் செய்கிறார்கள், பின் புலிகளில் தோல்வி அதன் பின் இலங்கை கடற்படை மீனவர்களை தாக்கும் சம்பவங்கள், கூடங்குலம் அணு உலையில் எப்படியான மனநிலையில் அம்மக்கள் உள்ளனர், அவர்களது ஆரம்பகால போரட்டங்கள்.

துத்துக்குடி, அதைசுற்றி வாழும் மக்களின் மனோநிலை அவர்களுக்குள் உள்ள போட்டிகள் சண்டை சச்சரவுகள், எதார்தங்கள், உணவு பழக்கங்கள், வழிபாடுகள் என அனைத்தையும் தன்னு நிலைறுத்தி சரியாக நம்மை அதனுள் லயிக்க வைக்கிறது.

கதையின் காலம்: 1947-2010
கதைகளம் அமைந்த பகுதிகள்: மன்னார் வளைகுடா கடல் பரப்பிலும் தூத்துகுடி நாகப்பட்டனம் புதுக்கோட்டை ராமயநாதபுரம் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களும். இப்பகுதியன் வட்டார வழக்கு மொழியில் ஆசிரியர் வெற்றிக்கொண்டுள்ளார்.

புதினத்தின் கதாநாயகனாக வரும் இருதையரா நூல் முதல் பகுதியில் தன் இருசக்கர வாகனத்தில் தூத்துக்குடியில் இருந்து புதுக்கோட்டை புறப்படுகிறான்.

சில காலம் புதுக்கோடையில் இருந்து தூத்துக்குடிக்கு புதினத்தின் இறுதியில் திரும்புகிறான் இதற்கிடையே தான் இக்கதையின் நிகழ்வுகள் முன்னும் பின்னும் கடந்து சுவாரசியத்தின் உச்சத்தில் நிறுத்தி காதல், நட்பு, பாசம் என சென்டிமெண்டும் ஆக்சன் காட்சியாக வெற்றிமாறன் பானியில் சும்மா பிருச்சி எடுத்து இருக்கிறார் நூல் ஆசிரியர், 150 பங்கங்களை கடந்தப்பின் உங்களால் புத்தகத்தை கீழே வைக்கமுடியாது என்பது என் அளவில் நிச்சயம்.

நஞ்சுண்டான் படிக்கும் போதே நமக்கு அவர்மீது தனி மரியாதை பிறந்து விடும் அந்த அளவு மிகச் சரியான கதாப்பாத்திரம், தன் தாத்தனும் தகப்பனும் பர்மாவில் அவர்களை நம்பிவந்த மக்களுக்கு செய்த தூரோகத்தை எண்ணி துடித்து அந்த பாவம் என்னோடு முடியட்டும் என சந்ததிகளுக்கு தொடரக்கூடாது என்பதால் தான் நான் இத்தனை பாடுபடுகிறேன் என்று இருதைய கிட்ட சொல்லும் இடங்களில், பால்ராஜ் இறந்த செய்தி கேட்ட நொடிகளில், இருதையாவை கொல்ல வருபவர்களிடம் துப்பாக்கியுடன் வரும் கம்பீரம், இது புலிகள் உலாவும் இடம் என்று இறுதியில் ஈழத்தாக்குதலுக்கு நீதிக் கேட்டு போராடி அலையும் காட்சிகள் என எல்லாம் இடங்களின் மனுசன் நின்னுட்டார்யா. இறந்து போனபோது எதோ நாம் கண்டு வியந்த மனிதன் இறந்து விட்டாரே என்று மனம் பதபதைக்கத்தான் செய்கிறது. நஞ்சுண்டான் வாண்டையார் இப்புதின கடலில் நிறுத்தி வைக்கப்பட்ட கப்பலின் நங்கூரம்.

இசக்கிமுத்து இந்த கப்பலில் மற்றுப்புறத்தில் போட்ட நங்கூரம். தாமசிடம் வந்து இனி அதுக்கு அவசியம் இருக்காது பெலிக்ஸ் மிரண்டா செத்துட்டான் என்றும் சொல்லுமிடம், அலெக்ஸை  கொன்றதுக்கு சேவியர் மிரண்டாவின் தலையை வெட்டி வந்து அலெக்ஸ் கல்லரையில் போடும் இடம் எல்லாம் ஏதோ படம் பார்ப்பது போல் காட்சிகள் விரியும் அங்கு இசக்கியின் தோற்க்கள் விவரிக்கமுடியாதவை. இருதையா என்ன போடபோறாங்கே அடுத்து உன்கிட்டதான் வருவாங்க நீ நஞ்சுண்டான் கிட்ட பொய்டு நான் ஃபோன் வைக்கிறேன் என்று சொல்வது நம்மை புதின இறுதி வரை துரத்திவரும். இசக்கிமுத்து நாடார் பலம்.

இப்படி இந்த புதனத்தில் பல கதைமாந்தர்களை விவரித்துக்கொண்டே போகலாம். அந்த அவளவு ஒவ்வொரு கதாப்பாத்திரமும் செதுக்கப்பட்டு உள்ளது. இருதயாவின் அண்ணனாக வரும் இன்பா சிறிது நேரம் வந்தாலும் நின்னுட்டான். இருதையாவின் காதலி மெர்லின் வரும் காட்சிகள் நம்மை பயணத்தில் சிறு ஆசுவாசப்படுத்திக்க வரும் ரம்மியமான கதாநாயகி, அவள் வெகுளிப்ப பேச்சும் விளையாட்டும் அழகு. நஞ்சுண்டான் பணியாட்களாக வரும் சந்திரன் திப்பு சுல்த்தான், ராணி, கணேசன் வரும் காட்சிகள் கலகலப்பாக இருக்கும். மகள் அனிதா பாசத்தின் உச்சம், மகன் தமிழரசன், ஈஸ்வரன் நம்பூதிரி, ஈஸ்வரப்பாண்டியன். மரியா டிசோசா இசக்கியின் காதலி அவளுக்கு நடந்த கொடுரம் வேதனை, ஜோஸ்லின் விக்டோரியா, மங்கம்மாள், சீதாலட்சுமி, அம்புஜம், சூசைராஜ் முத்தம்மாள், தாமஸ்பர்னாந்து, ஜான் சேவியர், ரூஸ்வெல்ட், ஜார்விஸ், சார்லஸ், வல்லத்தரசு, வல்தாரீஸ், மெக்கானிக் ராஜேந்திரன், பெலிக்ஸ் மிராண்டா, சேவியர் , ராஜசேகர், ஜெரோம் கடலின் காதலன், நஞ்சுண்டான் தோட்டத்து நாய் இருளன் என அடிக்கிக்கொண்டே போகலாம் அத்தனை கதாபாத்திரங்கள்.

அத்தனைபேரையும் புதினத்தில் தெளிவாக அவர்களுக்கு ஊரிய இடங்களை சரியாக நிரப்பி கையாளும் மன பக்குவமும் தெளிவும் இந்த இளம் வயதில் அதும் இரண்டாது நூலிலே என்பது ஆகப்பெரும் வியப்பு. அவரின் முதல் புதினம் “ஊடறப்பு” முக்கால பயணசுவாரசிம் கொடுக்கும் அதை தாண்டி 32 அடி பாய்ந்து நிறக்கிறது “மன்னார் பொழுதுகள்” சிறப்பான படைப்பு நேரம் கிடைப்பின் வாசித்துப்பாருங்கள் நன்றி.


பேரன்புடன்,
மனோ குணசேகரன்,
புள்ளவராயன்குடிகாடு.
12/03/2021

Leave a Reply