தமிழ்நாட்டிற்கு குமரி எல்லையை மீட்டுத்தந்த திரு.மார்சல் நேசமணி அவர்களின் நினைவைப் போற்றுவோம்.
எல்லை மீட்பு போராளி என்பதை தாண்டி சாதிய தீண்டாமைக்கு எதிராக சாட்டையை சுழற்றிய மாபெரும் ஆளுமை இவர். முகத்தை பார்ப்பது கூட தீட்டு என்று ஒதுக்கி வைக்கப்பட்ட ஒரு சமூகத்தில் இருந்து படித்து வழக்கறிஞர் ஆகி நீதிமன்றத்தில் நிலவிய குறிப்பிட்ட சமூகத்திற்கு மட்டுமே வழங்கப்பட்ட நாற்காலி இருக்கை தீண்டாமையை அடித்து நொறுக்கியர். ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காக பாடுபட்டவர்.
இவரின் ஆளுமை எத்தகையது என்பதை தெரிந்துகொள்ள ஜெயமோகன் அவர்கள் எழுதிய அறம் புத்தகத்தில் வரும் “வணங்கான் என்ற கதையை படித்தால் தெரியும்.
தமிழர்கள் அனைவரும் நினைவில் கொள்ளவேண்டிய ஒரு தனிப்பெரும் ஆளுமை நம் நேசத்திற்குரிய “நேசமணி”அவர்கள்.
—
கட்டுரை:
மன்னை செந்தில் பக்கிரிசாமி