Home>>சுற்றுசூழல்>>தண்ணீர் போல் வெளியேறும் அனல்மின் நிலைய சாம்பல் கழிவு | திறவுகோல்
சுற்றுசூழல்செய்திகள்தமிழ்நாடு

தண்ணீர் போல் வெளியேறும் அனல்மின் நிலைய சாம்பல் கழிவு | திறவுகோல்

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே உள்ள அத்திப்பட்டு புதுநகரில் வடசென்னை அனல் மின்நிலையத்தில் 1,830 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த அனல் மின் நிலையத்தில் இருந்து வெளியேறும் சாம்பல் கழிவு, ராட்சத இரும்பு குழாய்கள் மூலம். 8 கி.மீ. தொலைவில் உள்ள ஊரணம்பேடு, செப்பாக்கம் உள்ளிட்டபகுதிகளில் 1,126 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ள சாம்பல் குளத்தில் கொண்டு சேர்க்கப்படுகிறது.

இந்த ராட்சத குழாய்களில் அவ்வப்போது கசிவு ஏற்படுவதால் அதிகளவில் சுடுநீர் சாம்பல் கழிவு வெளியேறி பொதுமக்களை சிரமத்துக்கு உள்ளாகுகிறது.

இந்நிலையில் உடைப்பு காரணமாக அந்த பகுதியில் சாம்பல் வெள்ளம் ஓடுகிறது. அதி வேகமாக குழாய் உடைப்பு ஏற்பட்டு, சுடுநீர் கலந்த சாம்பல் கழிவு வெளியேறி வருகிறது.

எனவே இப்பகுதியில் புதிய குழாய்களை அமைக்க வேண்டும் என, வடசென்னை அனல்மின் நிலைய நிர்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

https://youtu.be/IDeyE-94FNE

செய்தி சேகரிப்பு:
செந்தில்குமரன்,
மன்னார்குடி

Leave a Reply