Home>>இந்தியா>>இனம் ஒன்றாவோம் – எல்லை ஒழிப்பு
இந்தியாஈழம்செய்திகள்தமிழ்நாடுவரலாறு

இனம் ஒன்றாவோம் – எல்லை ஒழிப்பு

இங்கர்சால் நார்வே
இங்கர்சால் நார்வே

தமிழ்நாடு மற்றும் ஈழத்திற்கும் இடையே எப்படி உறவை மேம்படுத்துவது மற்றும் வலுப்படுத்துவது என்ற கேள்விகளுடன் நார்வேவில் உள்ள இங்கர்சால் அவர்கள், தன்னுடைய சமூக ஊடக பதிவில் இதையொட்டி நடந்த சிறப்பான கலந்துரையாடலை கட்டுரையை பதிவு செய்துள்ளார். அதை இங்கு தங்கள் பார்வைக்கு பகிர்கிறோம்.


“தமிழ்நாடு ஈழம் பெண் கொடுத்து பெண் எடுப்போமா” என்ற தலைப்பில் (TAMIL SOVEREIGNTY) தமிழர் இறையாண்மை என்ற கிளப்பவுசில் நேற்று (23/06/2021) ஒரு சிறந்த கலந்துரையாடலை நிகழ்த்தினோம். உலகத் தமிழர்களால் ஒன்றிணைவோம், எல்லைகள் தாண்டி திருமணம் செய்வோம், என்ற தலைப்பில் தான் முதலில் தொடங்க நினைத்து, பிறகு மிக அருகாமையில் இருக்கும் ஈழத்திற்கும் தமிழ் நாட்டிற்கும் இடையே இன்றளவும் பெரிய அளவில் திருமண உறவுகள் நடக்கவில்லை என்பதனால், முதலில் அதனை விவாதிப்போம் என்று தொடங்கினோம். விவாதம் தொடங்கும் முன் பெரும் முரண் இருக்கும் என்ற அச்சம் இருந்தது. ஆனால் 50 பேர் கூடிய இடத்தில் 10 பேர் பேசினார்கள். முரண் இல்லை என்பது பெரும் மகிழ்ச்சி.’

தமிழ்நாடு ஈழம் இடையே திருமணம் சாத்தியமா?

இந்திய கடவு சீட்டு உள்ளவர்கள் எந்த நாட்டு மக்களையும் திருமணம் செய்துகொள்ளலாம். அதில் ஒன்றுதான் இலங்கை கடவுச்சீட்டு. அதேபோல் இலங்கைக்கும் அதே வரையறை தான். ஆக நாடுகடந்த திருமணம் என்பது எல்லா நாட்டுக்கும் பொதுவானது. அமெரிக்காவில் சென்று குடியுரிமை வாங்கிய தமிழன் தமிழகத்து பெண்ணை திருமணம் செய்து கொள்வது எப்படியோ அதே வகைதான் இதுவும். மிகவும் சுலபம் இரு தரப்பினரும் விரும்பினால் இதனை மேற்கொள்ளலாம்.

ஈழத்தில் வாழும் உறவுகளை திருமணம் செய்தால் அவர்களுக்கு திருமணத்திற்குப் பின் இந்திய குடியுரிமை வழங்கப்படுமா?

ஆம் வழங்கப்படும். இரு நாட்டிலும் அதில் எந்த சட்ட சிக்கலும் இல்லை.

ஈழத்தில் வரன் தேடுவது எப்படி?

கிட்டத்தட்ட அனைத்து மேட்ரிமோனி இணையதளத்திலும் இலங்கை தமிழர்கள் என்ற வரையறையில் வரன்கள் பட்டியலிடப்பட்டுள்ளது அதன்மூலம் இப்போதுகூட அணுகலாம்.

தமிழக முகாம்களில் இருப்பவர்களை திருமணம் செய்து கொள்ள இயலுமா?

100% இயலும், அதில் எந்த சிக்கலும் இல்லை, அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப, ஏற்றார்கள் என்றால் திருமணத்திற்கு எந்த தடையும் இல்லை.

அகதிகளை திருமணம் செய்தால் இந்திய குடியுரிமை வழங்கப்படுமா?

மன்னிக்கவும், இந்தியாவில் அகதிகள் என்ற வரையறை இல்லை, சட்டப்புறம்பான குடியேறிகள் என்று தான் வரையறை செய்துள்ளார்கள். அவர்களுக்கு இந்திய ஒன்றிய அரசு குடியுரிமை வழங்க வேண்டுமென்றால், திருமணம் செய்தபின் தமிழகத்தில் இருக்கும் இலங்கை தூதரகத்தில், ஒரு வழி கடவுச்சீட்டை வாங்கி, ஈழம் சென்று, மூன்று மாதம் தங்கி, இலங்கை கடவுச்சீட்டை வாங்கி, தமிழ்நாடு வந்தால், இந்திய குடியுரிமை வழங்கப்படும்.

அவ்வாறு இலங்கை செல்வது அவர்களுக்கு சிக்கல் இல்லையா?

தமிழகத்தில் இருக்கும், கிட்டத்தட்ட ஒரு லட்சம் ஈழத்து உறவுகளில் 60 சதவீதமான உறவுகள் தமிழகத்தில் பிறந்தவர்கள், அவர்களுக்கு எந்த சிக்கலும் இருக்க வாய்ப்பில்லை. மீதம் இருப்பவர்களும் கிட்டத்தட்ட பொதுமக்கள்தான், ஆக எங்கள் கணிப்பில் சிக்கல் இருக்க வாய்ப்பில்லை, தைரியமாக முன்னெடுக்கலாம்.

முகாம்களுக்கு செல்வது சுலபமா?

முகாம்களை பொருத்தவரை தனிமனிதர்களாக செல்வதில் பெரும் சிக்கல் இல்லை, இயக்கம் சார்பாக, அரசியல் கட்சி சார்பாக, ஆவணப்படம் எடுப்பது சார்பாக போன்றவற்றில் மட்டுமே அனுமதி போன்ற இடையூறுகள் இருக்கக்கூடும். மற்றபடி திருமணம் தொடர்பான விடயத்தில் தடைகள் நடைமுறையில் இல்லை என்று கூறுகிறார். அதுமட்டுமல்லாமல் கிட்டத்தட்ட 40 சதவீத மக்கள் முகாம்களுக்கு வெளியே தான் வாழ்கிறார்கள். ஆகையால் பெரும் சிக்கல் இல்லை. விரும்பி முயன்றால் அனைத்தும் சுலபமாக சாத்தியப்படும்.

போரில் பாதிக்கப்பட்ட இளம் விதவைகளுக்கு வாழ்வு கொடுக்கலாமா?

”வாழ்வு கொடுத்தல்” போன்ற சொல்லாடல்கள் தவிர்க்கப்பட வேண்டும். உலகெங்கும் அப்படி ஒரு சொல்லாடல் இல்லை அடுத்த திருமணம் என்ற தான் இருக்கிறது நாமும் அப்படியே சிந்திப்போம். திருமணம் செய்து கொள்வது அவரவர் விருப்பம், அப்படி ஒருவருக்கு ஒருவர் விரும்பினால், யார் யாரை வேண்டுமென்றாலும் திருமணம் செய்து கொள்ளலாம், அதை விடுத்து தியாகம் செய்வது போன்ற எண்ணத்தில் முயல வேண்டாம். அது தவறு.

பெண் கேட்டால் கொடுப்பதில்லை?

எந்த ஒரு விடயமும் பெரிதாக நடக்காமல், வெற்றியை சுவைக்காமல், தடையில்லாமல் தொடங்க முடியாது. இவைபோன்ற முன்னெடுப்புகள் தொடக்க காலத்தில் நிறைய முட்டுக்கட்டைகளை சந்திக்கும். ஆனால் காலப்போக்கில் மாறிவிடும். நடிகர் விஜய் போன்ற பலர் திருமணம் செய்து இருக்கிறார்கள். இவை போன்ற தலைப்புகள் பேசப்பட்டால். இவை போன்ற நிகழ்வுகள் கொண்டாடப்பட்டால். தடைகள் நீங்கும்.

பழக்கவழக்கங்கள் மாறுப்படாதா?

தமிழகத்தில் ஒவ்வொரு பகுதிகளுக்கும் பழக்கவழக்கங்கள் மாறுபடும். ஏன் ஒரே சாதியில் கூட வடசென்னையில் ஒரு பழக்கம் கன்னியாகுமரியில் ஒரு பழக்கம் இருக்கும். பழக்கவழக்க வித்தியாசம் போன்ற சொல்லாடல்கள் திருமணத்திற்கு தடைக்கல்லாய் பேசப்படுகிறது. ஆனால் சிரிய சமரசங்கள் அதனை நீக்கும். எல்லா சடங்குகளுக்கும் பிராமணர்களை கேட்கும் இதே சமுதாயம் தான். பழக்கவழக்க பூச்சாண்டி காட்டுகிறது. அதற்காக தேங்கி நிற்க வேண்டாம். இங்கு பலர் எந்த சிக்கலும் இல்லாமல் வாழ்ந்து வருகிறார்கள். ஒருசிலரின் அழுகுரலில் பயந்து விட வேண்டாம்.

பெண் கேட்டால் கொடுப்பார்களா?

கொடுப்பதும் கொடுக்காததும் அவரவர் விருப்பம். ஒரே ஒருவரை கேட்டு அவர் கொடுக்கவில்லை என்று திரும்பி விடுதல் கூடாது. எப்படி தமிழகத்திற்குள் மீண்டும் மீண்டும் முயற்சி செய்கிறீர்களோ. அவ்வாறே எல்லை கடந்த இடத்திலும் நிகழும் முயன்றால். முடியாதது எதுவுமில்லை.

இவைகளை எளிமைப்படுத்த என்ன வழி?

முதலில் இதற்கான ஒரு மேட்ரிமோனி இணையதளத்தை தொடங்கலாம். தமிழகத்தில் இருக்கும் சில அமைப்புகளையும் ஈழத்தில் இருக்கும் சில அமைப்புகளையும் இணைத்து. இவ்வாறான நிகழ்வுகளுக்கு வலு சேர்க்கும் வகையில். பெண் வீட்டு சார்பாக மாப்பிள்ளை வீட்டை ஆய்வு செய்து சான்றிதழ் வழங்குவது போன்றவற்றை இணைத்து இயங்கினாள் இது மேலும் வளரும். முகாம்களில் இருப்பவர்களை அணுக, இவ்வாறான நிகழ்வு எளிமைப்படுத்த, எடுத்துரைக்க முகாம் நலசங்கம் உருவாக்கலாம். இதுபோன்ற பல வழிகள் இருக்கிறது.

திருமண முறை மாறுப்படாதா?

நடைமுறை திருமணங்களை உற்றுப்பார்த்தால், சில மாற்றங்கள் இருக்கிறது, இவைகளும் இடத்திற்கு ஏற்றார் போல் மாறும், எல்லா முறைகளும், நாடு கடந்து, ஐரோப்பாவில், அமெரிக்காவில் வாழும்போது சமரசம் செய்து கொள்ளப்படுகிறது. ஏன் அயல்நாட்டு முறையின் மீது மோகம் கொண்டு அதே முறையில் தமிழர் திருமணம் நடக்கிறது வட இந்திய பாணியில் ஆட்டம் பாட்டம் ஆடை என்று ஆயிரம் சமரசங்கள் நடைமுறையில் இருக்கிறது அவற்றிற்கும் இது எதுவும் இல்லை முரண்களை பேசாமல் முயற்சிப்போம்.

சைவ முறையில் பெரிய வித்தியாசமில்லை, கிறித்துவ, இசுலாம் முறை ஒரே மாதிரிதான் இருக்கிறது. பொது தமிழ் திருமண முறை தற்போது நடைமுறையில் பிரபலமடைந்து கொண்டிருக்கிறது நாளடைவில் தமிழர்களின் திருமண முறை ஓரளவுக்கு பொதுமைப் படுத்தப்பட்டு விடும். இவை போன்ற மாற்றங்கள் எல்லா காலத்திலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. நாம் அதனை ஏற்று முன்னேறுவோம்.

அத்தனை தூரம் சென்று திருமணம் செய்தல் சரியா?

மும்பையில் இருப்பவர்களை திருமணம் செய்வது, டெல்லியில் இருப்பவர்களை திருமணம் செய்வது, போன்றவைகளுக்கு இவ்வாறான கேள்விகள் பெரிதும் எழுவதில்லை. இன்று விமானங்கள் மூலம் தூரங்கள் குறைந்துவிட்டது. பொருளாதார சிக்கல் இல்லை என்பவர்களுக்கு இவைகளெல்லாம் கேள்விகளே இல்லை.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடலோரப் பகுதிகளில் போருக்கு முன்பு வரை, ஈழம் திருமணம் திருவிழா சடங்கு இருந்துள்ளதாக சிலர் கூறுகிறார்கள்.

இவ்வாறு பல்வேறு நல்ல விடயங்கள் கலந்துரையாடப்பட்டது. நிகழ்வில் அனைவரும் மிக சிறப்பாக பேசினார்கள் தம்பி கார்த்திக் கணேஷ் ஈழத்து பெண்ணை திருமணம் செய்து மகிழ்வோடு வாழ்ந்து வருபவர். அவர் தனது வாழ்வியல் அனுபவத்தை பகிர்ந்தது, மொத்த நிகழ்வையும் உயிர் உயிர் பெற வைத்தது.

சகோதரர் அதியமான், அறிவன், கார்த்திகைச்செல்வன் ஈழத்தில் இருந்து சில உறவுகள் மிக சிறப்பாக எந்த ஒரு வேறுபாடும் என்று பேசினார்கள். இந்த முன்னெடுப்பதில் பெரும் மகிழ்ச்சி எங்களுக்கு. தமிழகத் தமிழர்களுக்கு இடையே இருக்கும் பூலோக எல்லைகளை தகர்த்து எறிவோம். உலகெங்கும் வாழும் தமிழர்கள், ஒரு தாய் பிள்ளைகள் பிள்ளைகளாக உறவாடி மகிழ்வோம்.

தமிழ்நாடு, ஈழம், இலங்கை, இந்தியா, மலேசியா, மியான்மர், அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா, சிங்கப்பூர், கனடா, ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ், ரியூனியன், பிஜி, ஆஸ்திரேலியா, மொரீசியசு, செர்மனி, இந்தோனேசியா, சுவிட்சர்லாந்து, குவாதலூப், இத்தாலி, நெதர்லாந்து, நோர்வே, தாய்லாந்து, ஐக்கிய அரபு நாடுகள், பகாமாசு, டென்மார்க், சீனா, கத்தார், சீஷெல்ஸ், நியூசிலாந்து, வியட்நாம், மார்டினிக், காங்காங், சுவீடன், கம்போடியா, பாகிசுத்தான், கயானா, பப்புவா நியூ கினி போன்ற உலகெங்கும் பரவி வாழும் தமிழர்களை ஒன்றிணைப்போம்.


இவன்
இங்கர்சால் மற்றும் நண்பர்கள்.
உலகத் தமிழர்களாய் ஒன்றிணைவோம்.

சமூக ஊடக பதிவின் முகவரி: https://www.facebook.com/ingersol.selvaraj/posts/4184533558251302

Leave a Reply