Home>>அரசியல்>>தமிழ்நாட்டின் மது வரலாறு ஒரு பார்வை
அரசியல்கட்டுரைகள்தமிழ்நாடுவணிகம்

தமிழ்நாட்டின் மது வரலாறு ஒரு பார்வை

வரலாற்று காலத்திலும், இதிகாச காலங்களிலும் மது பலவகை பானங்களாக இருந்து வந்திருக்கிறது. ஒரு காலத்தில் மனிதன் மகிழ்ச்சிக்காக அருந்திய மது, பின்னர் அரசுகள் தோன்றிய பின் அதற்கான வருவாய் ஊற்றாக மாறியது.

ஆங்கிலேய அரசின் கீழ் இருந்த மெட்ராசு மாகாணம் காங்கிரஸ் கட்சி ராசகோபாலாச்சாரியின் ஆளுகையில் வந்தபோது 1937ல் சேலம் மாவட்டத்தில் மட்டும் மது விலக்கு அறிவிக்கப்பட்டது. பின்னர் 1948ல் இருந்து தமிழ்நாடு முழுதும் மதுவிலக்கு பின்பற்றப்பட்டது. இது தொடர்ந்து தி.மு.க ஆட்சியை கைப்பற்றிய காலம் வரை தமிழ்நாடு முழுவதும் மது விலக்கு அமலில் இருந்தது.

1967 ல் ஆட்சியை திமுக ஆட்சியை பிடித்த போது நாட்டின் நிதி வசூலை பெருக்க அப்போதைய முதல்வர் அண்ணாதுரை தேர்ந்தெடுத்த பாதை சூது மதுவை புறக்கணித்தார். ஆனால், அண்ணாவின் மறைவிற்கு பிறகு கருணாநிதி முதல்வரான பின் 1971 ல் மது விலக்கை ரத்து செய்ய முன்வந்த போது, ராசகோபாலாச்சாரி அதனை தடுக்க முயன்றபோது தான், கருணாநிதி சொன்னார்,” இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களில் சாராயக்கடைகள் நடக்கின்றன.

நான் கையில் கற்பூரம் வைத்திருக்கிறேன், சுற்றிலும் நெருப்பு எரிகிறது. எப்படி காப்பது.இந்தியா முழுவதும் விலக்கு வரும்பொழுது நாமும் அனுசரிப்போம்” என்றுகூறி சாராயக்கடை, கள்ளுக்கடைகளை திறந்து விட்டார்.

இதில் மது ஆலைக்கு உரிமம் கொடுத்த விஷயத்தில் பல ஊழல்கள் நடந்த காரணத்தால் பெரும் பிரச்சினை யாகி மீண்டும் 1974ல் மது விலக்கு கொண்டு வரப்பட்டது. இது 1980 வரை தொடர்ந்தது.

பின்னர் எம்.ஜி.ஆர்.அரசியலுக்கு வந்த போது மது விலக்கை கொண்டு வருவேன் என பிரச்சாரங்களில் வாக்குறுதி கொடுத்தார். அதன் படி அவர் 1977 ல் ஆட்சியை பிடித்த முதல் நான்கு வருடங்கள் அதை கடைப்பிடித்தார். ஆனால் கள்ளசாராயம் பெருகி விடுவதை தவிர்க்க 1981ல் அதிகாரப்பூர்வமாக சாராயக்கடை, கள்ளுக்கடைகளை திறக்க அனுமதி வழங்கினார்.

கள்ளுக் கடைகளும் சாராயக் கடைகளும் ஏலம் விடப்பட்டன. சாராய உற்பத்தியில் தனியார் ஈடுபடுத்தப்பட்டனர். மது தங்குதடையின்றி ஓடிக்கொண்டிருந்த காலத்தில், 1982 – 83 காலகட்டத்தில் IMFL என்ற (Indian Made Foreign Liquors) பெயரில் மது உற்பத்தி செய்யும் உரிமையை தனியாருக்கு வழங்கினார்.

பின் 1983 ல் தான் TASMAC (Tamilnadu State Marketing corporation) உருவானது. அதாவது மாநிலத்தின் மொத்த மது விற்பனையையும் அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. அதாவது மது தனியார் ஆலையில் தயாரிக்கப்படும். அரசு அனைத்தையும் கொள்முதல் செய்யும்.பின் மீண்டும் அதை தனியார் கடைகளுக்கு ஏலம் முறையில் விற்கும். இந்த முறை எம்ஜிஆர் ஆட்சி வரை இருந்தது.

அவர் இறந்த பின்னர் 1989 ல் கருணாநிதி தலைமையில் ஆட்சியை பிடித்த திமுக இதில் மேலும் சில மாற்றங்கள் கொண்டு வந்தது.

TASMAC ஐ கலைத்து விட்டு, TASCO (tamilnadu sprit corporation)என்று அமைப்பை ஏற்படுத்தி IMFL (Indian Made Foreign Liquors) சரக்குகளை அரசே உற்பத்தி செய்து தனியார் கடைகளுக்கு விற்பனை செய்தது. ஆனால் கலப்பட சாராயத்தால் பெரிய எண்ணிக்கையில் உயிர்பலி ஏற்பட்டதால்.1990 ல tascoவை இதை அரசு கைவிட்டது.பின் மீண்டும் கள், சாராயம் போன்ற நாட்டு சரக்குகளை அனுமதித்தது. அப்போது தான் மலிவு விலை சாராயம் என்ற பாக்கெட் சாராயம் அப்போது தான் விற்பனை செய்யப்பட்டன.

மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி ஜெ.ஜெ. தலைமையில் 1991 ல் அமைந்தவுடன் அவர் தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டது போலவே பாக்கெட் சாராயத்தை தடை செய்தார். IMFL சரக்குகள் மட்டும் தனியார் கடைகள் மூலம் விற்பனை செய்யப்பட்டன. அரசு மதுவை தயாரிப்பதும் இல்லை. கொள்முதல் செய்யவும் இல்லை. கடைகளை நடத்த அனுமதி மட்டும் ஏலம் அடிப்படையில் வழங்கியது. இதற்கு மதுக்கடைகளை நடத்த ஏலம் எடுக்க தனியார் முதலாளிகள் மத்தியில் கடும் போட்டி நடந்தது. இதில் கட்சி காரர்களே பெரும்பாலும் பலன் அடைந்தார்கள். இது 12 வருடங்கள் தொடர்ந்தது.

பின் ஒரு வழியாக 2003 ல் அதிமுக ஆட்சியில் TASMAC மீண்டும் தொடங்கப்பட்டு, தமிழ்நாடு முழுவதிலும் விடப்பட்டிருந்த தனியார் உரிமம் ரத்து செய்யபட்டு, முதன் முதலாக அரசே மதுவை கொள்முதல் செய்து நேரடியாக விற்பனை செய்தது. எம்ஜிஆர் காலத்தில் இருந்த முறையில் கொள்முதலுக்கும் நேரடி விற்பனைக்கும் இடையில் உள்ள லாப வேறுபாட்டை நீக்கி அரசிற்கு லாபத்தை பெருக்க, TASMAC க்கின் கீழ் 7000 கடைகள் திறக்கப்பட்டு அரசே மது விற்பனையை இன்று வரை செய்து வருகிறது. ஆளும் கட்சிக்கு ஆதரவான ஆலைகளில் இருந்து TASMACக்கிற்கு சரக்கு கொள்முதல் செய்யப்பட்டது. அரசின் வருமானம் பாதிக்கப்பட கூடாது என்ற நோக்கில் அதுவரை கிராமங்களில் விற்பனை ஆகிக்கொண்டு இருந்த கள் விற்பனை யை முழுமையாக அரசு தடை செய்தது.

அப்போதைய எதிர்கட்சி திமுக இந்த டாஸ்மாக் மது விற்பனையையும், அதற்கு சரக்குகள் வழங்கும் அதிமுக ஆதரவு மிடாஸ் ஆலையையும் கடுமையாக எதிர்த்தது. அரசே மது விற்பனை செய்வதா என தேர்தலின் போது கடுமையாக விமர்சித்தது. ஆனால் ஆட்சிக்கு வந்த உடன் அதில் உள்ள வருமானத்தை பார்த்து வியந்து அதை அப்படியே திமுக தொடர்ந்தது.

அதே நேரத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு சரக்கு கொள்முதல் செய்ய தாங்களே தங்கள் கட்சிக்காரர்கள் தயவோடு சில ஆலைகளை நிறுவ அனுமதி கொடுத்தார்கள். இது இன்று வரை மாறி மாறி தொடர்கிறது.

ஆனால் இன்று இந்த இரண்டு கட்சிகளும் மது விற்பனை விஷயத்தில் ஒருவரையொருவர் கடிந்து கொள்வது போல பாசாங்கு செய்கின்றனர்.

தமிழ்நாட்டில் TASMAC கடைகளின் மூலம் விற்பனை செய்யப்படும் மதுவில் அதிமுக, திமுக வினருக்கு நேரடியாகவும், மறைமுகமாவும் சொந்தமான சாராய உற்பத்தி ஆலைகளில் இருந்தே வாங்கப்படுகிறது.
பல ஆயிரக்கணக்கான கோடிகளை அந்த உற்பத்தியாளர்கள் ஆண்டுதோறும் சம்பாதித்து வருகின்றனர்.

தமிழக அரசின் வருமானம் மது விற்பனை மூலம் கடந்த ஆண்டு சுமார் ரூ31750 கோடி. கொரனா நிவாரணத்திற்கு மத்திய அரசு போதிய நிதி வழங்கவில்லை எனவே கடைகளை திறக்கிறோம் என்கிறார் எடப்பாடி. மத்திய அரசை வலியுறுத்தி நிதியை வாங்க முடியாத அரசு , தன்மக்களை காவு வாங்குகிறது.

இப்படியாக இந்த மது விற்பனை நிதியால் நம் அரசு என்ன சாதித்து விட்டது??

தமிழக மொத்த கடன் 3.5 லட்சம் கோடிக்கும் மேல்.

பேரிடர் சமயத்தில் மக்களுக்கு போதுமான நிதியை வழங்க முடியவில்லை.

சரியான உள் கட்டமைப்பு, நீர் மேலாண்மை, குப்பை மேலாண்மை, கழிவு மேலாண்மை, வடி கால் வசதி, தரமான கல்வி, மருத்துவம், சுகாதாரம், போக்குவரத்து, சரியான மின் கட்டமைப்பு என அனைத்திலும் பின் தங்கியே உள்ளோம்.

அப்படி என்னதான் சாதித்து விட்டீர்கள்.

எந்த பொருளாதார மேம்பாடும் தெரியாமல் அதை தெரிந்து கொள்ளும் எண்ணமும் இல்லாமல் வெறும் சாராய விற்பனையை மட்டுமே நம்பி ஒரு அரசாங்கம் செயல்படுவது சமூகத்திற்கு பெரும் ஆபத்து.

மது விற்பனைக்கு மாற்றாக பொருளாதார மேம்பாட்டை ஏற்படுத்த பொருளாதார நிபுணர்கள் பல யோசனைகளை சொல்லி வருகிறார்கள். அவற்றில் சிலவற்றை பார்ப்போம்.

1. பால் விற்பனை முழுதும் அரசே எடுத்து நிர்வகிப்பது, தனியார் பால் நிறுவனங்களுக்கு அனுமதியை வழங்காமல் பால் விற்பனையை முழுக்க முழுக்க அரசே எடுத்து நடத்தலாம்..

2. கனிம வளம் – இன்று மணல் தேவை ,விற்பனை என்பது பெரிய அளவில் உள்ளது. மணல் விலையும் மிக அதிகமாக உள்ளது.இதுல மணல் கொள்ளை வேறு.

ஒரு ஆற்றில் இருந்து ஒரு யூனிட் மண் எடுக்க அரசு உதாரணமாக 1300 ரூ வரை நிதி வசூலிக்கிறது என்று வைத்து கொள்வோம். அந்த ஒரு யூனிட் மண் கரைக்கு வந்தால் அதன் விலை 3000ரூ ஆகும். அதுவே வீட்டுக்கு வந்தால் 7000ரூ என்று வைத்து கொள்வோம். மக்கள் ஒரு யூனிட் மண்ணுக்கு செலவு செய்வது 7000ரூ ஆனால் அரசுக்கு வருவாய் வெறும் 1300ரூ. மீதி 6000ரூ யாருக்கு செல்கிறது?? யார் யாரோ மணலை வைத்து பெரும் கோடீஸ்வரர்கள் ஆகின்றனர். ஆனால் அரசு அதை செய்ய கூடாதா? அரசே மணலை நேரடி விற்பனையில் இறங்கலாம். Onlineல பணம் கட்டி பதிவு செய்தவர்களுக்கு நியாயமான விலையில் வீடுகளுக்கு மணலை கொடுக்கலாம். இதன் மூலம் வருவாய் முழுதும் அரசிற்கே செல்லும்.இது போல மற்ற கனிம வளங்களை யும் அரசே நேரடி விற்பனை செய்ய வேண்டும்.எப்படி மதுவை நேரடி விற்பனை செய்கிறார்களோ அப்படி.

3.பதிவு அலுவலகங்களில் முத்திரைத் தாள்களை முறையாக விற்பனை செய்வதும், ஆவண எழுத்தாளர்கள் என்ற பெயரில் உள்ள உள்ள உள்ள தரகர்கள் ஆவண உருவாக்கத்திற்கு கமிஷன் என்ற பெயரில் பெயரில் பல ஆயிரம் வசூலிப்பத்தையும் தடுத்து நிறுத்தி, அரசே அந்த வேலையை செய்யும் பொழுது பொழுது செய்யும் பொழுது பொழுது மிக நியாயமான விலையில் மக்களுக்கு கொடுக்க முடியும் அதே நேரத்தில் அரசுக்கும் வருமானம் அரசுக்கும் வருமானம் வருமானம் பெருகும். இதேபோல பல அரசு அலுவலகங்களில் இடைத்தரகர்கள் செய்யும் வேலையை முறையாக அரசே செய்து அதன் லாபத்தை பெற முடியும் குறிப்பாக சாலை போக்குவரத்து அலுவலகத்தில் உரிமம் பெறுவது.

4. நாடு முழுவதும் ஓடும் ola, uber போன்ற போக்குவரத்துக் களை அரசே எடுத்து நடத்த வேண்டும். அரசு இணையதளங்களில் மட்டுமே பதிவு செய்து நாம் போகும்படி வைக்க வேண்டும் வைக்க வேண்டும் இப்படி செய்வதால் அரசருக்கு நல்ல ஒரு ஒரு கமிஷன் நல்ல ஒரு கமிஷன் கிடைக்கும்.

5. மக்கள் திரைப்படங்களைப் பார்ப்பதற்கு இணையதளங்களில் பதிவு செய்கின்றார்கள். அதில் just tickets, book my show போன்ற இடைத்தரகர்கள் பெருமளவு சம்பாதிக்கிறார்கள். அதற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளையும் அரசின் இணையதளத்தில் வைத்து மட்டுமே பதிவு செய்ய முடியும் முடியும் என்ற நிலைக்கு கொண்டு வந்து அதில் பதிவு கட்டணம் மற்றும் மாநில மத்திய அரசு வரியையும் எடுத்துக்கொள்ளலாம் கொள்ளலாம். இதில் கூட கணிசமான லாபம் கிடைக்கும்.

இன்னும் எண்ணற்ற வழிகள் உள்ளன. அவற்றை பற்றி தனியாக வேறு ஒரு கட்டுரையில் பார்ப்போம்.

ஆனால் இவற்றை எல்லாம் பரிசோதித்து பார்க்கும் எண்ணம் கூட இல்லாமல் முழுக்க முழுக்க தன் சுய நலத்திற்காக மட்டுமே பண வெறி கொண்டு மக்களிடம் குடி வெறியை திணிக்கிறது அரசுகள்.
“குடி உயர கோன் உயரும்”என்பார்கள்.

அதன் அர்த்தத்தை தவறாக புரிந்து கொண்டார்கள் போல…


கட்டுரை:
மன்னை செந்தில் பக்கிரிசாமி.

பட உதவி:
CHUTTERSNAP on Unsplash

Leave a Reply