Home>>அரசியல்>>திராவிட சாதி ஒழிப்பில் பல கட்டங்கள் உண்டு – மன்னர் மன்னன்

முதல் கட்டம் படிநிலையற்ற குடி முறையை சாதி என்று கூறும், விஜயநகர் காலத்தில்தான் வர்ணாசிரமம் இங்கு நுழைந்தது என்பதை மறைக்கும், அதற்கு முழு அரசியல் அங்கீகாரம் கிடைத்தது ஆங்கிலேயர் காலத்தில்தான் என்பதை தவிர்க்கும். 2 ஆயிரம் ஆண்டுகளாகத் தமிழகத்தில் சாதிய ஏற்றத்தாழ்வுகள் இருப்பதாகப் புளுகும். மறந்தும் தமிழக சாதிச் சண்டைகளும், ஆணவப் படுகொலைகளும் விஜயநகர் காலத்தில்தான் தோன்றின என்பதைப் பேசாது.
அடுத்து தெலுங்கு சாதிகளின் சாதிப் பற்றைப் போற்றும். அவர்களின் சாதிக் கூட்டங்களுக்கு வரிசையில் போய் ஆதரவு தெரிவிக்கும். தமிழ்ச் சாதிகளை மட்டும் கேலி செய்யும். அதன் மூலம் செம்மான் பறையருக்கு அருந்ததியர் என்றும், குயவருக்கு குலாலர் என்றும், கோனாருக்கு யாதவர் என்றும் திராவிட சாயம் பூசும். இவர்களைக் கொண்டு தமிழ்நாட்டில் தமிழர் அல்லாதவர்களே அதிகம் என்று கணக்கு காட்டும்.

தமிழரின் பெருமிதங்களை திராவிடம் என்றும், அயல் மாநிலத்தில் இருந்து வந்த அவலங்களை தமிழர் பண்பாடு என்றும் மாற்றிச் சொல்லி தமிழர்களை தாழ்வு மனப்பான்மையில் தள்ளும்.

நான் இந்த மண்ணின் உரிமையாளன் – எனச் சொல்லத் தயங்குபவர்களை மாடுகளாகப் பூட்டி திராவிடம் வண்டியோட்டும். அதற்காக இல்லாத வரலாற்றையும் பொல்லாத குற்றச்சாட்டுகளையும் அடுக்கும்.

திராவிடத்தின் சாதி ஒழிப்பு என்பது தமிழர் ஒழிப்பைத் தவிர ஏதுமில்லை. அவர்களுக்கு தெலுங்கு சாதிகளை ஒழிக்க திட்டமே இருந்ததில்லை.


திரு. மன்னர் மன்னன்,
தமிழ் வரலாற்று ஆய்வாளர்.

Leave a Reply