கர்நாடகாவில் கணிசமான அளவில் தமிழர்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் மொழிவாரி பிரிப்பில் கர்நாடக அரசின் கீழ் இருக்க வேண்டிய நிலை வந்தாலும் இன்று தமிழர்களாக வசிக்கின்றனர். அதே நேரத்தில் அவர்கள் அரசியலில் ஆதிக்கம் செலுத்துவது தமிழர்கள் அதிகமாக இருக்கும் பகுதியில் கன்னடர்களுக்கு எதிராக நடந்து கொள்வது என்று அறம் தவறிய எந்த செயலிலும் இதுவரை தமிழர்கள் ஈடுப்பட்டதில்லை.
ஆனால் கன்னடர்கள் தொடர்ந்து தமிழை அழிக்கும் நடவடிக்கையிலும் தமிழர்களை ஒடுக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
காவிரி பிரச்சினை எழும்போதெல்லாம் கன்னடர்களின் வெறியாட்டம் கட்டுக்கடங்காமல் செல்வதை நாம் அனைவரும் பலமுறை பார்த்துள்ளோம்.
1991 காவிரி மன்றத்தை எதிர்த்து கன்னடர்கள் கலவரத்தில் இறங்கினர். தமிழர்கள் கடைகள் நீ வைத்து கொளுத்தப்பட்டன. தமிழ்நாடு கர்நாடகா பேருந்துகள் எரிக்கப்பட்டன தமிழர்கள் பெண்கள் குழந்தைகள் என்று பாரபட்சம் பார்க்காமல் நூற்றுக்கணக்கில் கொல்லப்பட்டனர். பல்லாயிரம் தமிழர்கள் தமிழ்நாட்டிற்கு விரட்டியடிக்கப்பட்டனர்.
இந்த அச்சுறுத்தலை கூறிகூறியே தமிழ்நாட்டில் காவிரி உரிமையை பற்றிய பேசவிடாமல் அதை மழுங்கடித்து மாற்று வழியாக ஆறுகள் இணைப்பு, மழைநீர் சேகரிப்பு என்று பேசி பேசியே காவிரி உரிமையை இழந்தோம்.
இதனால் ஆழ்துளை கிணற்றின் பயன்பாடு அதிகரித்து இன்று தண்ணீர் உப்புநீராகி வீட்டிற்கு ஒருவர் சிறுநீரக பாதிப்பில் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதை கடந்து மீண்டும் 2019 காலத்தில் மீண்டும் காவிரி போராட்டம் உச்சம் பெற்றபோதும் தமிழர் உடமைகள் எரிக்கப்பட்டன. வயதானவர் என்றும் பாராமல் தமிழக ஓட்டுநர் தாக்கப்பட்டார். தமிழருக்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் எழுதியதால் ஆராய்ச்சி மாணவர் ஒருவர் தாக்கப்பட்டார் இருந்தாலும் தமிழ்நாட்டில் போராட்டங்கள் வலுப்பெற்றதால் ஒப்புக்கு காவிரி ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது இருந்தாலும் கன்னடர்களிடம் இருந்து முறையாக இன்றுவரை தமிழர்களால் தண்ணீர் பெறமுடியல்லை. அங்கே அதிக மழை பெழிந்தால் கிடைக்கும் உபரி நீரே தமிழ்நாட்டிற்கு வருகிறது.
இதையும் முழுவதுமாக தடுக்கும் நோக்கில் மேக்கேதாட்டுவில் அணைக்கப்பட்ட கர்நாடக அரசு முயல்கிறது. இதை தமிழினமும் எதிர்கொள்ள தயாராகிறது.
இந்நிலையில் ஏதாவது ஒருவகையில் தமிழர்களுக்கு எதிரான கலவரத்தை உருவாக்க தமிழ் எழுத்துக்களை அழித்து ரவுடி வாட்டாள் நாகராசு போன்றவர்கள் முயற்சி செய்கின்றனர். இதில் வாட்டாள் நாகராசு கைது செய்யப்பட்டுள்ளார். வாட்டாள் நாகராசின் இச்செயலை எதிர்த்து தமிழர்கள் கோலார் தங்க வயல் முனிசிபல் அலுவலகம் முன்பு திரண்டு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று மாலைக்குள் மீண்டும் தமிழ் எழுத்துக்கள் அதே இடத்தில் எழுதப்படும் என்றும் அப்படி தமிழ் எழுத்துக்களை எழுத முடியாவிட்டால் அங்கிருக்கும் அலுவலர் பதவியில் விலகுவதாகவும் வாக்குறுதி கொடுத்து போராட்ட வேகத்தை சற்றுத்தனித்தனர்.
பிறகு சில மணி நேரங்களில் வாக்குறுதி கொடுத்ததை போல மீண்டும் அங்கே தமிழ் எழுத்துக்கள்
எழுதுவதற்கான பணிகள் தொடங்கின. உலக தமிழர்களின் அனைவரும் மகிழ்ந்ததோடு, போராட்டத்தில் ஈடுபட்ட மானமுள்ள தமிழர்களுக்கு உலக தமிழர்கள் அனைவரும் இணைந்து சமூக வலைதளங்கள் மூலமாக ஆதரவையும் பாராட்டையும் தெரிவித்து வருகின்றனர்.
—
செய்தி உதவி:
இராசசேகரன், மன்னார்குடி.