அரியலூர் மாவட்டம் செயங்கொண்டம் வட்டம்
கங்கைகொண்ட சோழபுரம் மாளிகைமேடு பகுதியில் மீண்டும் அகழ்வாராய்ச்சி பணி தொடக்கம்.
இப்பணியில் சோழ வீரத்தமிழன் ராசேந்திரன்
கட்டிய அரண்மனை சுவர்கள் கண்டுபிடிப்பு.
செங்கற்களால் கட்டப்பட்டுள்ள இச்சுவரில்
இரும்பினாலான அணிகளும் சீன பொருட்களும் பயன்படுத்தப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.
தற்போது வரை ஒரு அடி மட்டுமே அகழ்வாய்வு
பணி செய்யப்பட்டுள்ளது மேலும் இப்பணியை தொடர்ந்தால் அன்றைய தமிழர்களின் வாழ்கை தரம் தொடங்கி அறிவியல் பயன்பாடுகள் என்று பல ஆதாரங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.
மேலும் இதனை தொடர்ந்து வேறு ஏதேனும் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதா என்பதையும்
இவ்வாய்வின் மூலம் தெரிந்தது கொள்ள முடியும்.
இன்றும் இராசராசன் கட்டிய பெருவுடையார் கோவிலும் அவரது மகன் இராசேந்திரன்
கட்டிய தாராசுரம் கோவில் மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் கோயில்கள் தமிழர்களால் கொண்டாடப்படுகின்ற நிலையில்…
இந்த அரண்மனை சுவடுகள் கண்டெடுப்பு
அப்பகுதி மக்கள் மட்டுமல்லாது உலக தமிழர்களையே கொண்டாட்டத்தில் திளைக்க செய்துள்ளது.
இப்பணி இதோடு நிற்காமல் முழுமையாக நேர்மையாக அகழ்வாராய்ச்சி செய்ய வேண்டும்
என்றும் அதை மக்கள் மத்தியில் ஆவணமாக்க வேண்டும் என்றும் உலக தமிழர்கள் சமூக வலைதளங்கள் வழியாக குரல் கொடுக்க தொடங்கி உள்ளனர்.
—
செய்தி உதவி:
இராசசேகரன்,
மன்னார்குடி.