Home>>இந்தியா>>சோழப்பேரரசு எழுச்சியுற்ற திருப்புறம்பியத்தில் புலிக்கொடி ஏற்றப்பட்டது.
இந்தியாசெய்திகள்தமிழ்நாடுவரலாறு

சோழப்பேரரசு எழுச்சியுற்ற திருப்புறம்பியத்தில் புலிக்கொடி ஏற்றப்பட்டது.

ஆடி புனர்பூசமும் கூடிய சனிக்கிழமை (07/08/2021) நன்னாளில், உடையார் ஶ்ரீ ராஜராஜதேவரின் 1036 ஆவது முடிசூட்டு விழாவினை சிறப்பிக்கும் வகையில், சோழப்பேரரசு எழுச்சியுற்ற திருப்புறம்பியத்தில் புலிக்கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது.

இது சோழசேனையின் மூன்றாவது கடமை நிகழ்வின் படி, இயற்கையை போற்றிடும் நாளாக 250 குடும்பங்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

சோழர் புலிக்கொடியினை பேராசிரியர் முனைவர். கோ.தெய்வநாயகம் ஐயா அவர்கள் ஏற்றி வைத்தார்கள்.உடன் சதாசிவப்பண்டாரத்தார் அறக்கட்டளை நிர்வாகிகள் திரு.தி.ந.செந்தில் உள்ளிட்ட உறுப்பினர்கள் பங்கேற்றார்கள்.

சோழ வரலாற்றின் பெருமைகளை, நாம் மறந்த அடையாளங்களை நினைவுபடுத்தி அதனை அடுத்த தலைமுறைக்கு, இதன் வழியே கடத்துவதற்காக, இது போன்ற நிகழ்வுகளை சோழசேனை வழியே ஒருங்கிணைப்பதாக திரு.அருமொழி அவர்கள் குறிப்பிட்டார்.


செய்தி உதவி:
சோழசேனை

Leave a Reply