Home>>செய்திகள்>>பிரபல பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் அப்பல்லோவில் அனுமதி
செய்திகள்

பிரபல பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் அப்பல்லோவில் அனுமதி

பிரபல பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கருக்கு திடீரென ஏற்பட்டுள்ள உடல்நலக்குறைவு காரணமாக, அவர் சென்னையிலுள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் பிரபலமான பட்டிமன்ற பேச்சாளர்களில் ஒருவர் பாரதி பாஸ்கர்.
நகைச்சுவை கலந்த பேச்சு மற்றும் யார் மனதையும் புண்படுத்தாமல் பேசுபவர்.
சாலமன் பாப்பையா நடத்தும் பட்டிமன்றங்களில் இவரைத் தவறாமல் காணலாம்.

52 வயதான பாரதி பாஸ்கருக்கு மூளைக்குச் செல்லும் நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதற்காகச் சிறப்பு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

விரைவில் நலம்பெற இறைவனிடம் பிரார்த்தனை செய்வோம்.

செய்தி சேகரிப்பு:
செந்தில்குமரன்,
மன்னார்குடி

Leave a Reply