Home>>அறிவியல்>>GSLV-F-10 ஏவூர்தி திடீர் தொழில்நுட்பக் கோளாறு
அறிவியல்ஆராய்ச்சிசெய்திகள்

GSLV-F-10 ஏவூர்தி திடீர் தொழில்நுட்பக் கோளாறு

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) புவிக்கண்காணிப்புக்காக EOS-3 என்ற செயற்கைகோளை வடிவமைத்து இருந்தது.

EOS-3  செயற்கைக்கோள் 2,268 கிலோ எடை கொண்டது. இதன் ஆயுட்காலம் 10ஆண்டுகள். இதிலுள்ள 5 விதமான 3டி கேமராக்கள் மற்றும் தொலைநோக்கி மூலம் புவிப்பரப்பை துல்லியமாக படம் எடுக்க முடியும். தட்பவெப்பநிலை மற்றும் வானிலை நிலவரங்களை நிகழ்நேர தன்மையில் தொடர்ந்து கண்காணிக்கும்.

இந்த செயற்கைக்கோளை GSLV-F 10 ராக்கெட்டில் பொருத்தி இன்று அதிகாலை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. முதல் இரண்டு நிலைகளிலும் சரியாக செயல்பட்ட இந்த ராக்கெட், மூன்றாம் நிலையான கிரையோஜெனிக் இன்ஜின் தொடங்குவதில் தோல்வியுற்றது. இதனை இஸ்ரோ தனது சமூக வலைத்தளங்களில் தெரிவித்துள்ளது.

 

செய்தி சேகரிப்பு:
இரா.செந்தில்குமரன்,
மன்னார்குடி

Leave a Reply