Home>>செய்திகள்>>சோழர் செப்பேடு – கலியுக ஆண்டு 4374
செய்திகள்தமிழ்நாடுவரலாறு

சோழர் செப்பேடு – கலியுக ஆண்டு 4374

செப்பேட்டின் வரிகள் எண் வரிசையில்

1. ஸ்வஸ்திஸ்ரீ சாலிவாகன சகாப்பதம் 1208 கலியுகாப்தம் 4374 இதின் மேல் செல்ல
2. ா நிண்ட ஜய ௵ வ்ருஷபமாகிய வைய்யாசி மீ 18 ௳ பூர்வ்வ பக்ஷத்து ஆதிவாரமும் த்ரு
3. தியையும் ரேவதி நக்ஷத்ரமும் பெத்த புண்ணியதினத்திலே ராஜராஜேந்த்ர சே
4. பஷராஜர்கள் சர்வஸ்ரீ சகரவர்த்திகள் திருப்பணி கொண்டருளிய ஸ்வ
5. ஸ்திஸ்ரீ திருக்கோடீச்வரர்க் கொழக்கோவில் ஆதிசண்டேசுர
6. தேவர் திருவாயி மலந்தருளிய செயிதபடிக்கு ஆதிசேது
7. மடத்து முதலிகளும் மாகேசுரரும் தானத்தாரும் ராசகர
8. மும் அஞ்சு கொத்து பரிகலசெனங்களும் நிறைவற நிரைந்து கு
9. றைவறக் கூடி ஆதிசேது கோடீசுர சுவாமி சன்ன
10. தியில் தீற்த்த மண்டபத்தில்க் கூடி இருந்து
11. திருவாசிக்கிறாமம சையிவரில் அளிகதிருக்காள
12. ஹஸ்திஉார் உடைய சைவராயார் சைவேந்
13. திர சைவசிகாமணி ஆகிய ஸூத்ரர் அதிகா
14. ரி கெவுதம கோத்திரர் ஆகிய வயிரவ தம்
15. பியார்பிள்ளை பொன்னம்பியாருக்கு
16. உதகதான பூர்வ்வமாகாப் பண்ணிக்குடுத்
17. தத் திருவாசிக் கிறாமத்துக்கு திருமுகப்ப
18. ட்டையம் தாங்களித்து தாங்கள் இதுவ
19. றையும் காணிபெற்றுடைய உம்ப வளனா
20. ங் குண்ணூர் னாட்டு சுவாமியூர் திருக்கோ
21. டீசுரன் கொழக் கோவிலுடைய னாயனார்
22. கோவிலில் எங்களிதான பூசைக்காணிய்யு
23. ம் தேவதான தேவகறமமும் தங்களுக்குக் கட்டளை
24. யிட்டபடியினாலே திருக்காமிநம்பி முன்னாண்
25. டபடிக்கிளய கெசடந்த மூனுவட்ட பூசைகாணிய
26. யிதமக்குத் தான பூறுவமாக குடுத்தபடியினாலே கொத்து
27. க்கு நடந்து வரும்படி ஆலையத்துக்கு மேற்க்கு னாற்கொல்
28. லைக்கு உள்ப்பட்ட நிலமும் தீவு திட்டுக்களும் கொ
29. ழக்கோவிலுக்கு காறாபுவனத்தில் ஆலையத்துக்கு தெற்
30. கு சேதுசாலைக்கு மேற்க்கு காத்தானோடை வயக்கா
31. லுக்கு வடக்கு மேற்க்கு அஞ்சதாட்சி பெண்பிள்ளை
32. திடலுக்கு கெழக்கு வடக்கு அய்யனார் கோவில் சன்ன
33. திக்கு தெற்க்குனாங்கொல்லைக்கு உள்ப்பட நிலமும்
34. தோப்புத்துரவும் இதின் மேற்கு சினுதலைக்காட்டுத்தீவும்
35. முதலாகி அளத்திக்குளபல தீவும் இதின் கிழக்கு சீராம
36. [ன்]தீவும் இதின் வடக்கு கொழகர் கட்டளை நிலமும் தே
37. [ா]ப்புத்துரவும் இந்தக்கிறாமகளில் உள்ப்பட நஞ்
8. சை பிஞ்சை நிலமும் தோப்பு தொரவும் அரமணை ரொ
39. க்க மோகின் னூறு பொன்னும் உச்சவ மோகி
40. னி அன்பது பொன்னும் ஆக னுத்தன்பது பொன்
41. மோகினியும் நிலமோகினியும் தாமே அனுப்
42. வித்துக் கொண்டு முன்னால் னாங்கள் ஆண்டு நடத்
43. தி வந்த படிக்கி கோகவில்த்துறை சேதுராய முத
44. லியார் கணக்கு படிக்கி மோகினிதிட்டம் நட
45. ப்பித்துக் கொண்டுக் கொத்துக்குண்டாகிய பரிகல
46. செனங்களையும் முன்னாள்படிக்கு நடப்பித்து கொ
47. ண்டு இந்த தர்மத்தை பரிபாலனம் பண்ணிக்கொண்டு சந்தி
48. றாதித்திய வரையும் ஆண்டு அனுபவித்துக் கொண்டு சுகத்தி
49. லே இருக்க கடவாறாகவும் நம்பியாருக்கும் மனைமான்யம் ராசகரமும்
50. நாங்களும் பண்ணிக்குடுத்தபடிக்கி காறாபுவனமாகிய கொ
51. ழகர் கோவிலில் திருக்காமிநம்பி முன் மனைமாளிகையும் அ
52. ரசந்திக் கொளமும் ஆலையத்துக்கு தெற்கு அஞ்சுவேலிநிலம் சறுவ .
53. மானியமும் சறுவமானியத்துக்கு எல்லை ஆவன சன்னதி சாலைக்கு தெ
54. ற்க்கு கோனாறோடைக்கு மேற்கு காத்தானோடை வயக்காலுக்கு வடக்கு சேது
55. சாலைக்கு கிழக்கு னாங்கெல்லைக்கு உள்ப்பட்ட நிலம் நஞ்சயி பிஞ்சயி நி
56. லமும் மேல்னோக்கிய மரமும் கீழ்னோக்கி குளமும் அனுபவித்துக்கொண்
57. டு கோவில் புசைக்கு கும்பறெத்தினம் சொற்ண புழ்ப்பம் முதலான
58. சாறு சுவந்திரமும் சம[ய]லரிசி உண்டானது எட்டுலொருபங்கும் சமயல்
59. அன்னமுதலான சகலத்துக்கும் மூனுலொருபங்கும் பத்திக்கொண்டு ஸ்வஸ்தி
60. ஸ்ரீகெந்தமாபறுவதம் ராமபாதம் மோகினி ஆன நில மானியம்
61. கிழக்கு சீராமன் தீவு னாங்கொல்லைக்கு உள்ப்பட நிலம் வேலி 3. இந்த … மூனு
62. வேலிநிலமமும் அனுபவித்துக்கொண்டு வருஷம் 1க்கு பொன் 36 வீதம் ராம பாதத்தை
63. பூசை பண்ணிக்கொண்டு அதில் உண்டாகிய லாபங்களும் ராமபாத
64. முதலாகிய பலதெளிக் கோவில்க்களும் அதுகள் உண்டாகிய லாபங்.
65. களும் அனுபவித்துகொண்டு புத்திரபவுத்திர பாரம்பரியமாக சந்திராதித்த
66. வரையும் செல்லச் சறுவமானியமாக அனுபவித்துக் கொண்டு இந்த
67. க் காணியித்தானாகி வித்தும் ஒத்திவச்சும் ஆண்டு அனுபவித்து கொ
68. ள்ளக் கடவாராகவும் பூசைக்கு லேகைப்படிக்கு உண்டானது சித்….
69. ல்பத்ததி கொண்டு பூசை பண்ணி கொண்டு சுகத்திலே இருக்க கடவா
70. ராகவும் இந்தத் திருமுகப்பட்டையத்துக்கு எழுத்துக்குத்தம் வாக்கியபி.
71. ழை வரிமறாட்டம் வெட்டு செதுக்கு சொல்லப்பட்ட எக்குத்தமு
72. ம்….(குத்தமென்று] சொல்லக்கடவரல்ல இந்தத் திருமுகம்
73. பட்டையம் எழுதிக்குடுத்தோம் பொன்னம்பியாருக்கு இந்தப்பட்ட
74. யத்துக்கு ஹஸ்தலிகிதம் இந்தப்படிக்கி வயிரவதம்பி வேணாவுளை
75. டயார் எழுத்து இந்தப்படிக்கி பல்லவராய பாடியார் எழுத்து இந்
76. தப்படிக்கி திருக்காமிநம்பி எழுத்து. இந்தப்படிக்கி சிதம்பரனாததே
77. (வ)..சித்தர் எழுத்து. இந்தப்படிக்கு கோவில் அதிகாரம் சேதுராம மு
78. தலியார் எழுத்து இந்தப்படிக்கு கங்கணம் ஆறுமுகத்தா முதலிய
79. ார் எழுத்து இந்தப்படிக்கு கோவில் கொத்து சங்கரப்பிள்ளை
80. எழுத்து இந்தப்படிக்கு அறிவோம் வேதவனம் பூசை
81. பூசை சூரியமுற்த்தி நம்பியார் எழுத்து. இந்தப்பட்
82. டயம் எழுதின நம்மைக்கு மேல்ப்படி குழக்கே
83. ாவில் சதாசிவர் கயில முதலி எழுத்து. இந்த திருமு
84. க பட்டயம் எழுதி முகிந்தது முத்தும் கோடி
85. வினாயகன் துணை உ

செப்பேட்டின் சுருக்கம்

திருக்கோடீச்வரர் கோயிலைச் சேர்ந்த மாகேசுவரரும் தானத்தாரும் தீர்த்த மண்டபத்தில் கூடிக் காளத்தியைச் சேர்ந்த வயிரவதம்பியாரின் பிள்ளையான பொன்னம்பியாருக்கு உதகதானபூர்வமாகத் திருவாசிக்கிராமம் வழங்கப்பட்டது. இதன் எல்லைகள் விளக்கப்பட்டிருக்கின்றன. இதனைச் சருவமானியமாக்கி இதனை விற்றும் ஒற்றிவைத்தும் அனுபவிக்கவும் பூசைக்குமாகக் கொடுக்கப்பட்டது.

செப்பேட்டின் விளக்கம்

செப்பேட்டின் துவக்கம் சாலிவாகன ஆண்டு 1208-ஐயும் கலியுக ஆண்டு 4374-ஐயும் குறிப்பிட்டு ஜய வருடம் விருஷமாகிய வைகாசி மாதம் பதினெட்டாம் நாள் பூர்வபட்சம் ஞாயிற்றுக்கிழமையும் திருதியை திதியும் ரேவதி நட்சத்திரமும் பெற்ற புண்ணிய தினத்தைக் குறிப்பிடுகிறது.

இராசராசேந்திர சோழராஜர் திருக்கோடீசுவரர் கோயிலுக்குத் திருப்பணி செய்திருந்தனர். அந்தக் கொழக்கோயிலிலுள்ள சண்டிகேசர் திருவாய் மலர்ந்தருளியபடி ஆதிசேது மடத்து முதலிகளும் மாகேசுவரரும் தானத்தாரும் இராசகரமும் அஞ்ச கொத்து பரிகல சனங்களும் திருக்கோயிலின் தீர்த்த மண்டபத்தில் கூடினர். திருக்காளத்தி ஊரைச் சேர்ந்த சைவராயர் சைவேந்திரர் சைவசிகாமணியான சூத்திரர் அதிகாரியும் கௌதம கோத்திரத்தைச் சேர்ந்தவருமான வயிரவதம்பியாரின் பிள்ளை பொன்னம்பியாருக்கு உதகதானபூர்வமாகத் திருவாசிக்கிராமத்திற்குப் பட்டயம் செய்து கொடுத்தனர். உம்ப வளநாட்டுக் குண்ணூர் நாட்டு சுவாமியூர் திருக்கோடிச்வரன் கொழக்கோவிலுடைய நாயனார் கோயிலின் பூசைக்காணியும் தேவதான தேவகரமும் முன்பு திருக்காமிநம்பி அனுபவித்தபடி அனுபவிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டது. இதன் எல்லைகளாவன.
ஆலயத்துக்கு மேற்கு, நாற்கொல்லைக்கு நிலமும் தீவு திட்டுக்களும் கொழக்கோவிலுக்குக் காராபுவனத்தில் ஆலையத்துக்குத் தெற்கு சேதுசாலைக்கு மேற்கு, காத்தானோடை வாய்க்காலுக்கு வடக்கு, மேற்கு அஞ்சதாட்சி பெண்பிள்ளை திடலுக்குக் கிழக்கு, வடக்கு, அய்யனார் கோவில் சன்னதிக்குத் தெற்கு நாங்கொல்லைக்கு உள்பட நிலமும் தோப்புத்துரவும் இதின் மேற்கு சினுத்தலைக்காட்டுத்தீவும், முதலாகி அளத்திக் குளதீவும் இதன் கிழக்கு சீராமன்) தீவும் இதின் வடக்கு கொழகர் கட்டளை நிலமும் தோப்புத்துரவும் இந்தக்கிறாமங்களில் உள்ப்பட நஞ்சை புஞ்சை நிலமும் தோப்புத் துரவும் அரமணை ரொக்க மோகினி நூறு பொன்னும் உற்சவ மோகினி ஐம்பது பொன்னும் ஆக நூற்றைம்பது பொன் மோகினியும் நிலமோகினியும் தாமே அனுபவித்துக் கொள்ளுமாறு தானம் செய்தனர்.

மேலும் முன்னர் அவர்கள் நடத்தி வந்தது போலக் கோவில்த்துறை சேதுராய முதலியாரின் கணக்குப்படி மோகினியம் நடப்பித்துக் கொற்றும், பரிகல மக்களும் நடத்துவிக்க சந்திராதித்திய வரையும் அனுபவிக்கக் கடவாராக நம்பியாருக்கும் மனைமான்ய அரசியலாரும் அனுமதி கொடுத்தனர். அதன் படி காராபுவனமாகிய கொழகர் கோயிலில் திருக்காமிநம்பி மனை மாளிகையும் சந்திக்குளமும் ஆலயத்தின் தெற்கிலுள்ள ஐந்து வேலி நிலமும் சருவமானியமாக்கித் தந்தனர். அதன் எல்லைகளாவன சன்னதி சாலைக்குத் தெற்கு, கோனாரோடைக்கு மேற்கு, காத்தானோடை வாய்க்காலுக்கு வடக்கு சேதுசாலைக்கு கிழக்கு.

இந்த நான்கெல்லைக்கு உட்பட்ட நிலம் நஞ்சை, புஞ்சை உட்பட்ட நிலம் மேல்நோக்கிய மரம் மற்றும் கீழ்நோக்கிய குளம் ஆகியவற்றை அனுபவித்துக் கொண்டு கோயிலில் கும்ப ரவியன்று பூசைக்குத் தேவையான சொர்ண புஷ்பம், சோறு, சுவந்திரம் முதலான எல்லா வகைச் செலவுகளிலும் எட்டிலொரு பங்கும் அன்னம் முதலானவற்றில் மூன்றில் ஒரு பங்கும் தரவேண்டியதாக நிர்ணயிக்கப்பட்டது. மேலும் கெந்தமாபர்வதத்தில் ராமபாதத்தைச் சேர்ந்த நிலம் மூன்று வேலி. இதனைக் கொண்டு பலவிதமான கோயில்களையும் சர்வமானியமாகப் புத்திரபௌத்திர பாரம்பரியமாக அனுபவித்துக் கொண்டு பூசைக்கு ஏற்பாடு செய்யவேண்டும் என்று பட்டயம் எழுதித்தரப்பட்டது. இவ்வாறு எழுதிய பட்டயத்தில் எழுத்துப்பிழை பொருட்பிழை பொறுக்கப்படவேண்டும் என்றும் வேண்டப்பட்டுள்ளது. இதனைப் பொன்னம்பியாருக்கு எழுதிக் கொடுத்தனர். இதில் கையெழுத்திட்டவர்கள்

1. வயிரவதம்பி வேணாவுடையார் 2. பல்லவராய பாடியார் எழுத்து 3. திருக்காமிநம்பி எழுத்து. 4. சிதம்பரநாத தேவ..சித்தர் எழுத்து. 5. கோவில் அதிகாரம் சேதுராம முதலியார் எழுத்து 6. கங்கணம் ஆறுமுகத்தா முதலியார் எழுத்து 7. கோவில் கொத்து சங்கரபிள்ளை எழத்து 8. வேதவனம் பூசை, பூசை சூரியமுர்த்தி நம்பியார் எழுத்து ப இறுதியாக இந்தப் பட்டயம் எழுதிய நன்மைக்கு மேல்படி -. 1. குழக்கோவில் சதாசிவர் கயில முதலி
இவ்வாறு கையெழுத்திற்குப் பிறகு பட்டயம் எழுதி முடிந்தது. வினாயகன் துணை என்று எழுதப்பட்டுள்ளது.
செப்பேட்டின் பொது தகவல்

திருக்காளத்தியைச் சேர்ந்த சைவராயர் சைவசிகாமணி கௌதம கோத்திரத்தைச் சேர்ந்த வயிரவதம்பியாரின் பிள்ளை பொன்னம்பியாருக்குச் சிற்றூர் ஒன்றைத் தானமாக வழங்கினார். இதன் எல்லைகள் விளக்கப்பட்டிருக்கின்றன. இதற்கான ஆவணமாக இந்தச் செப்பேடு வழங்கப்பட்டிருக்கிறது. இந்தச் செப்பேடு வேதாரண்யத்தில் கண்டெடுக்கப்பட்டது. இதில் ஆதிசேதுவும் திருக்கோடீசுவரரின் கோயிலும் குறிப்பிடப்பட்டிருப்பதால் அந்தப் பகுதியில் கிடைத்திருக்கவேண்டும் என்று கருதுவதற்கிடமிருக்கிறது. இந்தச் செப்பேடு இந்தியத் தொல்பொருள் துறையின் 1905-ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கையில் 11-ஆம் எண்ணாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தச் செப்பேட்டில் ஒரே ஒரு இதழ் மட்டும் உள்ளது. இதழ் இருபுறமும் எழுதப்பட்டுள்ளது. செப்பேட்டின் நீளம் 10.75 அங்குலம். அகலம் மேலும் கீழும் 8 அங்குலம் இடையில் 7.87 அங்குலம். எழுத்துக்கள் தமிழில் எழுதப்பட்டுள்ளன. ச்வ போன்ற எழுத்துக்களை எழுதக் கிரந்த லிபி பயன்படுத்தப்பட்டுள்ளது. ஐகாரக் குறி பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் செப்பேட்டின் துவக்கத்தில் சக ஆண்டு 1208-உம் கலியுக ஆண்டு 4374-உம் குறிப்பிடப்பட்டுள்ளன. சகஆண்டு கி.பி 1286-87-க்குச் சமமாகிறது. மேலும் இந்தச் செப்பேடு சய வருடத்தைக் குறிப்பிடுகிறது. இராசேந்திரன் என்பது மூன்றாம் இராசேந்திரனைக் குறிப்பிடுவதோ என்று கருத இயன்றாலும் எழுத்தமைதி சற்றும் ஒத்து வரவில்லை.

செப்பேட்டின் வரிகள் பத்தியாக

ஸ்வஸ்திஸ்ரீ சாலிவாகன சகாப்பதம் 1208 கலியுகாப்தம் 4374 இதின் மேல் செல்லலா நிண்ட ஜய ௵ வ்ருஷபமாகிய வைய்யாசி மீ 18 ௳ பூர்வ்வ பக்ஷத்து ஆதிவாரமும் த்ருதியையும் ரேவதி நக்ஷத்ரமும் பெத்த புண்ணியதினத்திலே ராஜராஜேந்த்ர சோஷராஜர்கள் சர்வஸ்ரீ சகரவர்த்திகள் திருப்பணி கொண்டருளிய ஸ்வஸ்திஸ்ரீ திருக்கோடீச்வரர்க் கொழக்கோவில் ஆதிசண்டேசுர தேவர் திருவாயி மலந்தருளிய செயிதபடிக்கு ஆதிசேது மடத்து முதலிகளும் மாகேசுரரும் தானத்தாரும் ராசகரமும் அஞ்சு கொத்து பரிகலசெனங்களும் நிறைவற நிரைந்து குறைவறக்கூடி ஆதிசேது கோடீசுர சுவாமி சன்னதியில் தீற்த்த மண்டபத்தில்க் கூடி இருந்து திருவாசிக்கிறாமம சையிவரில் அளிகதிருக்காள ஹஸ்திஉார் உடைய சைவராயார் சைவேந்திர சைவசிகாமணி ஆகிய ஸூத்ரர் அதிகாரி கெவுதம கோத்திரர் ஆகிய வயிரவ தம்பியார்பிள்ளை பொன்னம்பியாருக்கு உதகதான பூர்வ்வமாகாப் பண்ணிக்குடுத்தத் திருவாசிக் கிறாமத்துக்கு திருமுகப்பட்டையம் தாங்களித்து தாங்கள் இதுவறையும் காணிபெற்றுடைய உம்ப வளனாங் குண்ணூர் னாட்டு சுவாமியூர் திருக்கோ டீசுரன் கொழக் கோவிலுடைய னாயனார் கோவிலில் எங்களிதான பூசைக்காணிய்யும் தேவதான தேவகறமமும் தங்களுக்குக் கட்டளை யிட்டபடியினாலே திருக்காமிநம்பி முன்னாண் டபடிக்கிளய கெசடந்த மூனுவட்ட பூசைகாணிய யிதமக்குத் தான பூறுவமாக குடுத்தபடியினாலே கொத்துக்கு நடந்து வரும்படி ஆலையத்துக்கு மேற்க்கு னாற்கொல்லைக்கு உள்ப்பட்ட நிலமும் தீவு திட்டுக்களும் கொழக்கோவிலுக்கு காறாபுவனத்தில் ஆலையத்துக்கு தெற்கு சேதுசாலைக்கு மேற்க்கு காத்தானோடை வயக்காலுக்கு வடக்கு மேற்க்கு அஞ்சதாட்சி பெண்பிள்ளை திடலுக்கு கெழக்கு வடக்கு அய்யனார் கோவில் சன்ன திக்கு தெற்க்குனாங்கொல்லைக்கு உள்ப்பட நிலமும் தோப்புத்துரவும் இதின் மேற்கு சினுதலைக்காட்டுத்தீவும் முதலாகி அளத்திக்குளபல தீவும் இதின் கிழக்கு சீராம [ன்]தீவும் இதின் வடக்கு கொழகர் கட்டளை நிலமும் தோப்புத்துரவும் இந்தக்கிறாமகளில் உள்ப்பட நஞ்சை பிஞ்சை நிலமும் தோப்பு தொரவும் அரமணை ரொக்க மோகின் னூறு பொன்னும் உச்சவ மோகினி அன்பது பொன்னும் ஆகனுத்தன்பது பொன் மோகினியும் நிலமோகினியும் தாமே அனுப்வித்துக் கொண்டு முன்னால் னாங்கள் ஆண்டு நடத்தி வந்த படிக்கி கோகவில்த்துறை சேதுராய முதலியார் கணக்கு படிக்கி மோகினிதிட்டம் நடப்பித்துக் கொண்டுக் கொத்துக்குண்டாகிய பரிகல செனங்களையும் முன்னாள்படிக்கு நடப்பித்து கொண்டு இந்த தர்மத்தை பரிபாலனம் பண்ணிக்கொண்டு சந்தி றாதித்திய வரையும் ஆண்டு அனுபவித்துக் கொண்டு சுகத்திலே இருக்க கடவாறாகவும் நம்பியாருக்கும் மனைமான்யம் ராசகரமும் நாங்களும் பண்ணிக்குடுத்தபடிக்கி காறாபுவனமாகிய கொழகர் கோவிலில் திருக்காமிநம்பி முன் மனைமாளிகையும் அரசந்திக் கொளமும் ஆலையத்துக்கு தெற்கு அஞ்சுவேலிநிலம் சறுவ மானியமும் சறுவமானியத்துக்கு எல்லை ஆவன சன்னதி சாலைக்கு தெற்க்கு கோனாறோடைக்கு மேற்கு காத்தானோடை வயக்காலுக்கு வடக்கு சேது சாலைக்கு கிழக்கு னாங்கெல்லைக்கு உள்ப்பட்ட நிலம் நஞ்சயி பிஞ்சயி நிலமும் மேல்னோக்கிய மரமும் கீழ்னோக்கி குளமும் அனுபவித்துக்கொண்டு கோவில் புசைக்கு கும்பறெத்தினம் சொற்ண புழ்ப்பம் முதலான சாறு சுவந்திரமும் சம[ய]லரிசி உண்டானது எட்டுலொருபங்கும் சமயல் அன்னமுதலான சகலத்துக்கும் மூனுலொருபங்கும் பத்திக்கொண்டு ஸ்வஸ்தி ஸ்ரீகெந்தமாபறுவதம் ராமபாதம் மோகினி ஆன நில மானியம் கிழக்கு சீராமன் தீவு னாங்கொல்லைக்கு உள்ப்பட நிலம் வேலி 3. இந்த … மூனு வேலிநிலமமும் அனுபவித்துக்கொண்டு வருஷம் 1க்கு பொன் 36 வீதம் ராம பாதத்தை பூசை பண்ணிக்கொண்டு அதில் உண்டாகிய லாபங்களும் ராமபாத முதலாகிய பலதெளிக் கோவில்க்களும் அதுகள் உண்டாகிய லாபங். களும் அனுபவித்துகொண்டு புத்திரபவுத்திர பாரம்பரியமாக சந்திராதித்த வரையும் செல்லச் சறுவமானியமாக அனுபவித்துக் கொண்டு இந்தக் காணியித்தானாகி வித்தும் ஒத்திவச்சும் ஆண்டு அனுபவித்து கொள்ளக் கடவாராகவும் பூசைக்கு லேகைப்படிக்கு உண்டானது சித்…. ல்பத்ததி கொண்டு பூசை பண்ணி கொண்டு சுகத்திலே இருக்க கடவாராகவும் இந்தத் திருமுகப்பட்டையத்துக்கு எழுத்துக்குத்தம் வாக்கியபிழை வரிமறாட்டம் வெட்டு செதுக்கு சொல்லப்பட்ட எக்குத்தமும்…. (குத்தமென்று) சொல்லக்கடவரல்ல இந்தத் திருமுகம் பட்டையம் எழுதிக்குடுத்தோம் பொன்னம்பியாருக்கு இந்தப்பட்ட யத்துக்கு ஹஸ்தலிகிதம் இந்தப்படிக்கி வயிரவதம்பி வேணாவுளைடயார் எழுத்து இந்தப்படிக்கி பல்லவராய பாடியார் எழுத்து இந்தப்படிக்கி திருக்காமிநம்பி எழுத்து. இந்தப்படிக்கி சிதம்பரனாததே (வ)..சித்தர் எழுத்து. இந்தப்படிக்கு கோவில் அதிகாரம் சேதுராம முதலியார் எழுத்து இந்தப்படிக்கு கங்கணம் ஆறுமுகத்தா முதலியார் எழுத்து இந்தப்படிக்கு கோவில் கொத்து சங்கரப்பிள்ளை எழுத்து இந்தப்படிக்கு அறிவோம் வேதவனம் பூசை பூசை சூரியமுற்த்தி நம்பியார் எழுத்து. இந்தப்பட்டயம் எழுதின நம்மைக்கு மேல்ப்படி குழக்கோவில் சதாசிவர் கயில முதலி எழுத்து. இந்த திருமுக பட்டயம் எழுதி முகிந்தது முத்தும் கோடி வினாயகன் துணை உ


இங்கர்சால் நார்வே
வள்ளுவர் வள்ளலார் வட்டம்


செய்தி சேகரிப்பு:
இராசசேகரன்,
மன்னார்குடி.

Leave a Reply