Home>>கல்வி>>திருத்துறைப்பூண்டியில் விரைவில் மாபெரும் மின்னணு நூலகம்
திருத்துறைப்பூண்டியில் விரைவில் மாபெரும் மின்னணு நூலகம்
கல்விசெய்திகள்தமிழ்நாடு

திருத்துறைப்பூண்டியில் விரைவில் மாபெரும் மின்னணு நூலகம்

திருத்துறைப்பூண்டியில் விரைவில் மாபெரும் மின்னணு நூலகம் உறுதியாக வரும் என்று திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் திரு. க.மாரிமுத்து அவர்கள் கூறியுள்ளார்.

திருத்துறைப்பூண்டி அரசு கிளை நூலகத்தில் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் க.மாரிமுத்து ஆய்வு செய்தார். போட்டித் தேர்வு மாணவர்களுக்கு அரங்கம் அமைத்து தருவது எனவும் நடைபாதையில் கல் பதித்த தருவது எனவும் உறுதியளித்தார் விரைவில் திருத்துறைப்பூண்டி நகரில் மின்னணு நூலகம் ஒன்றை அமைப்பதற்கு அரசிடம் கோரிக்கை வைக்க உள்ளதாக தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் நகர்மன்றத் தலைவர் R.S.பாண்டியன், ஒன்றிய பெருந்தலைவர் பாஸ்கர், மாவட்ட நூலக அலுவலர் ஆண்டாள், நூலக வளர்ச்சி குழு தலைவர் முனைவர் எடையூர். மணிமாறன், வாசகர் வட்டத் தலைவர் வழக்கறிஞர் நாகராஜன், செயலாளர் ராஜ் நாராயணன், நூலக வளர்ச்சி குழு நிர்வாகிகள் சக்திவேல், இளசு மணி, வேம்பையன், கமல், சார்லஸ், சுந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஒளிபடக்கலைஞர்கள் சங்கத்தின் சார்பாக தலைவர் கணேசமூர்த்தி மற்றும் செயலாளர் சசி ஆகியோர் நூலகருக்கு நாற்காலியை நன்கொடையாக வழங்கினர். வாசகர் வட்ட நிர்வாகி ஜெய பிரபாகரன் ஒவ்வொரு மாதமும் இணையதள கட்டணத்தை நன்கொடையாக வழங்குவதாக உறுதி அளித்தார்.

ஒன்றிய பெருந்தலைவர் பாஸ்கர் அவர்கள் 5000 ரூபாய் மதிப்புள்ள கட்டுமான பொருட்களை நன்கொடையாக வழங்கினார். ஆசிரியர் மருதூர். தெ. சரவணன் மின்விசிறி ஒன்றை நூலகத்துக்கு நன்கொடையாக வழங்கினார்.

இந்த ஏற்பாட்டை நூலகர் மா.ஆசைத்தம்பி மற்றும் சுஜாதா ஆகிய இருவரும் செய்திருந்தனர்.


செய்தி உதவி:
நூலகர் மா.ஆசைத்தம்பி,
திருத்துறைப்பூண்டி.

Leave a Reply