Home>>கலை>>பாரம்பரிய சிலம்ப கலை விழா திருச்சிராப்பள்ளி ஏ.ஆர். காவலர் பயிற்சி மைதானத்தில் நடைபெற்றது.
கலைகல்விசெய்திகள்தமிழ்நாடுவிளையாட்டு

பாரம்பரிய சிலம்ப கலை விழா திருச்சிராப்பள்ளி ஏ.ஆர். காவலர் பயிற்சி மைதானத்தில் நடைபெற்றது.

திருச்சிராப்பள்ளி நேரு யுவ கேந்திரா, விவேகானந்தா சிலம்பம் இளையோர் நல சங்கம் மற்றும் சிலம்பம் திருச்சிராப்பள்ளி மாவட்ட சங்கம் இணைந்து பாரம்பரிய சிலம்ப கலை விழா திருச்சிராப்பள்ளி ஏ.ஆர். காவலர் பயிற்சி மைதானத்தில் 03/10/2021 அன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை திருச்சிராப்பள்ளி மன்டல பாஸ்போர்ட் அதிகாரி R.ஆனந்த் அவர்கள் துவங்கி வைக்க திருச்சிராப்பள்ளி மன்டல ஐ.ஜி. V.பாலகிருஷ்ணன் அவர்கள் தலைமை வகிக்க திருச்சிராப்பள்ளி மாவட்ட நேரு யுவ கேந்திரா அதிகாரி S.சுருதி முன்னிலையில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சிலம்ப விளையாட்டு குறித்து விழிப்புணர்வு மற்றும் தற்காப்பு குறித்த விழிப்புணர்வுடன் பாரம்பரிய கலை விழா கடந்த 41 ஆண்டுகளாக எந்த கட்டணமும் பெறாமல் தன்னிடம் சிலம்பம் கற்க வரும் அனைவருக்கும் இலவசமாக சிலம்பம் கற்று தரும் கலைசுடர்மணி முனைவர் M.ஜெயக்குமார் பயிற்சியில் 100க்கும் மேறபட்டோர் பங்கு பெற விழா நடைபெற்றது.

இந்த கலை விழாவில் மாணாக்கர்கள் தாங்கள் கற்ற பல்வேறு தரப்பட்ட சிலம்ப விளையாட்டினை விளையாடி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்கள்.

இந்த கலை விழாவில் ஏராளமான சிலம்ப மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், காவல்துறையினர் ஆகியோர் கலந்து கொண்டு சிலம்ப மாணவர்கள் அனைவரையும் பாராட்டினார்கள்.

மற்றும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய மண்டல ஐ.ஜி. திரு.பாலகிருஷ்ணன் அவர்கள் சிலம்பம், சுருள் வீச்சு, மான்கொம்பு போன்ற வீர விளையாட்டுகளை விளையாடி அங்கிருந்த மாணாக்கர்கள், சிறப்பு விருந்தினர்கள், மற்றும் பார்வையாளர்கள் அனைவரையும் அசத்தியது கூடுதல் சிறப்பை பெற்றது.

விழாவில் பங்கு பெற்ற அனைத்து மாணவ, மாணவிகளையும் பாராட்டி சான்றிதழ் ஐ.ஜி. பாலகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்கள்.


செய்தி உதவி:
திரு. மோகன்,
திருச்சி.

Leave a Reply