Home>>செய்திகள்>>புரட்சித்தாய் வாலாம்பாள் அவர்களின் 12ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு
செய்திகள்தமிழ்நாடுவரலாறு

புரட்சித்தாய் வாலாம்பாள் அவர்களின் 12ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம் சௌந்திரசோழபுரம் செங்கள நினைவிடத்தில் தமிழ்த்தேசியப் போராளிப் புலவர் கு. கலியபெருமாள் அவர்களின் துணைவியார் புரட்சித் தாய் வாலாம்பாள் அவர்களின் 12ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு (06.10.2021) இன்று மாலை 05.30 மணி அளவில் நடைபெற்றது.

நிகழ்வில், தமிழ் உரிமைக் கூட்டமைப்பின் நிறுவனர் ஐயா கி.த.பச்சையப்பன் அவர்களின் உருவப்படத்தினை தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் மா. மணிமாறன் அவர்களும், தமிழ்நாடு விடுதலைப்படைத் தலைவர், தமிழ்த்தேசியப் போராளி தோழர் தமிழரசன் அவர்களின் தாயார் பதூசு அம்மாள் அவர்களின் உருவப்படத்தினை மகளிர் ஆயத்தின் அமைப்புக்குழு உறுப்பினர் தோழர் மு. வித்யா அவர்களும், தமிழ்த்தேசியப் போராளி தோழர் தமிழ் முழக்கம் சாகுல் அமீது அவர்களின் உருவப்படத்தினை தமிழ்நாடு விடுதலைப் படைத் தளபதி தோழர் லெனின் அவர்களின் மாமா தோழர் கதிரவன் அவர்களும் திறந்து வைத்தனர்.

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. முருகன், புலவரின் இளைய மகன் தோழர் க. சோழநம்பியார் ஆகியோர் நினைவேந்தல் உரையாற்றினர். தமிழ்த்தேசியப் பேரியக்க பெண்ணாடம் கிளைப் பொறுப்பாளர் தோழர் கு. மாசிலாமணி நன்றியுரையாற்றினார்.

நிகழ்வில் தமிழ்த்தேசியப் பேரியக்க பெண்ணாடம் கிளைச் செயலாளர் தோழர் பி. வேல்முருகன், சப்தகூடல் கிளைச் செயலாளர் தோழர் தே. இளநிலா, காரையூர் கிளைச் செயலாளர் தோழர் சக்திவேல், பேரியக்கத் தோழர்கள் மு. பொன்மணிகண்டன், சி. பிரபாகரன், விசய ஆனந்த், மகளிர் ஆயம் தோழர் மு. தமிழ்மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


செய்தி உதவி:
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

Leave a Reply