நம் இந்திய ஒன்றியத்தின் நிர்வாகம் பல அடுக்குகளாக பிரிக்கப்பட்டு உள்ளது. அவைகள்,
1. மத்திய அரசு நிர்வாகம் (பாராளுமன்றம்)
2. மாநில அரசு நிர்வாகம் (சட்ட மன்றம்)
3. உள்ளாட்சி நிர்வாகம்
நம் ஒன்றியத்தில் வசிக்கும் ஒவ்வொருவரின் தேவையும் பொதுவாக இந்த மூன்று நிர்வாகத்திற்குள் அடங்கி விடும்.
1. மத்திய அரசின் நிர்வாகம்.
தொடர்வண்டித் துறை, அஞ்சல் துறை, வருமான வரித்துறை, தேசிய நெடுஞ்சாலைகள், எரிபொருள், பணம், தொலைப்பேசி துறை, பேரிடர் மீட்பு நிவாரணம், ராணுவம், கடற்படை, விமானப்படை, மாநிலங்களுக்கு இடையே உள்ள நீர்ப்பங்கீடு உள்ளிட்ட பிரச்னைகள், மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர் கல்வி நுழைவு த்தேர்வுகள் மற்றும் நாடு முழுதும் பொதுவாக அமைக்கப்படும் மருத்துவமனைகள் போன்றவை மத்திய அரசின் கீழ் வரும். (இன்னும் பல உண்டு). இது தவிர மாநில நிர்வாகம் மற்றும் அதன் உள்ளட்சி நிர்வாகத்திற்கும் ஒரு குறிப்பிட்ட அளவு நிதி ஒத்துக்குவார்க்கள். அதற்காக ஒவ்வொரு மாநில அரசும் வருடா வருடம் ஒரு பெரிய தொகையை மத்திய அரசிற்கு வரியாக வழங்கும். தமிழ்நாடு 130000 கோடி வரை மத்திய அரசிற்கு வரி செலுத்துகிறது.
2. மாநில அரசு நிர்வாகம்
மாநிலத்தின் பெரும்பான்மையான துறைகள் இதில் அடங்கி விடும்.
போக்குவரத்து, கல்வி, மருத்துவம், நீர் மேலாண்மை, குப்பை மேலாண்மை, கழிவு நீர் மேலாண்மை, மின்சாரம், கனிம வளம், மது விற்பனை, நுகர்பொருள் வாணிபம், மாநில நெடுஞ்சாலைகள் என அனைத்தும் இதில் அடங்கி விடும்.
3. உள்ளாட்சி நிர்வாகம்.
நமக்கான அன்றாட அடிப்படை வசதிகளை நிறைவு செய்வது தான் உள்ளாட்சி நிர்வாகம்.இது மிக சிறப்பாக அமைந்து விட்டாலே நாட்டில் பாதி பிரச்சனை ஒழிந்து விடும்.
நம் வீட்டில் குடிநீர் இல்லாமல் இருத்தல், நம் தெருவின் சாலை, நம் ஊர் குளம் தூர் வாறுதல் உள்ளிட்ட நீர் மேலாண்மை, நம் பகுதி குப்பைகள் மற்றும் திட, திரவக்கழிவு அகற்றுதல், நம் தெருவில் மின் விளக்குகள் நிலை உள்ளிட்ட மிக அத்தியாவசிய தேவைகள் அனைத்தும் உள்ளாட்சி நிர்வாகத்தில் தான் இருக்கும்.
தமிழ்நாடு இந்திய ஒன்றியத்திற்கு வருடா வருடம் 130000 கோடி ரூ வரை வரி செலுத்துகிறது. ஆனால் இந்த வரி என்பது நம் மாநில நலனுக்கான வரி மட்டும் அல்ல.
அது இந்திய ஒன்றியத்தின் நலனுக்குகானது. அதாவது நம்மைப் போன்று ஒவ்வொரு மாநிலத்திடமும் வரிகளைப்பெற்று ஒட்டு மொத்த இந்தியாவின் நலனை காப்பார்கள்.
மேலோட்டமாக பார்க்கும் போது இது சரியானதாக தெரியும். ஆனால் இந்திய ஒன்றியம் ஒவ்வொரு மாநிலத்தின் அடிப்படை தேவைக்காக அந்த வரிப்பணத்தை முழுதும் செல்வு செய்ய மாட்டார்கள்.
பின் எதற்கு செய்வார்கள்??
மாநிலத்தின் பாதுகாப்பிற்காக (முப்படை) பல லட்சக்கணக்கான கோடிகளை ஒவ்வொரு பட்ஜெட் லும் எடுத்து கொள்வார்கள். பின் கல்வி, மருத்துவம், போக்குவரத்து, விளையாட்டு, பேரிடர் நிவாரணம் என ஒதுக்குவார்கள்.
ஆனால் நம் அடிப்படை தேவைகள் என்பது பெரும்பாலும் உள்ளாட்சி நிர்வாகத்தில் தான் உள்ளது.அதற்கு மத்திய அரசிடமிருந்து ஒரு குறிப்பிட்ட அளவில் தொகை கிடைக்கிறது.
இருந்தாலும், நாம் இன்னும் நம் அடிப்படை வசதிகளில் பெரிதும் பின் தங்கி உள்ளோம். குறிப்பாக நீர் பிரச்சனை, குப்பை மேலாண்மை, கழிவு மேலாண்மை, வடிகால் வசதிகள், சுகாதாரம், தரமான சாலைகள் என அனைத்திலும் பின் தங்கி உள்ளோம்.இதன் அடிப்படை காரணம் என்ன??
ஒதுக்கப்படும் நிதி சரியான முறையில் அனைத்து உள்ளாட்சிகளையும் சென்று அடைகிறதா? அப்படி சேர்ந்த நிதி முறையாக பயன்படுத்தப்படுகிறதா??
தவறு எங்கு நடந்தாலும் பாதிக்கப்படுவது மக்கள் தான்.
ஒவ்வொரு மத்திய, மாநில அரசின் நிதியிலும் பல்லாயிரம் கோடிகள் அடிப்படை வசதிகள் மற்றும் உள் கட்டமைப்பு களுக்காக ஒதுக்கப்படுகின்றன. அப்படி இருந்தும் பெரிதாக எந்த பலனும் இல்லை.
ஊழல் என்பது தேசியமயமாக ஆகி விட்ட இந்த சூழலில் பரந்து விரிந்த நிர்வாகம் நேர்மையாக இருக்க வாய்ப்பில்லை.
எனவே நிர்வாகத்தை சிறு சிறு பகுதிகளாக பிரித்து கொள்ள வேண்டும்.ஆங்கிலத்தில் சொல்வார்கள் mass production, production by maases.
Mass production என்பது ஒரே இடத்தில் ஒரு பொருளை தயார் செய்து பல லட்சம் மக்களுக்கு கொண்டு சேர்ப்பது. இப்படி செய்யும் போது அந்த ஒரே இடத்தில் உள்ள வளங்கள் சுரண்டப்படும். மேலும் அனைவருக்கும் கொண்டு சேர்ப்பதில் சிக்கல் இருக்கும். உதாரணம் பெப்சி, கோகோ கோலா போன்ற குளிர் பானங்கள்.
ஆனால் production by masses என்பது அந்த அந்த பகுதி மக்களுக்கு தேவையானவற்றை அந்த அந்த பகுதியிலேயே தயார் செய்து கொண்டு அங்கேயே விநியோகம் செய்வது இப்படி செய்வதன் மூலம் வளங்கள் ஒரே இடத்தில் சுரண்டப்படாமல் சமமாக எடுக்கப்படும். மேலும் விநியோகம் செய்வதும் எளிது.வேலைவாய்ப்பு கள் அதிகம் பேருக்கு சென்று அடையும்.
இதே போல, உள்ளாட்சி களுக்கு என்று தனி அதிகாரம் வேண்டும்.ஒவ்வொரு உள்ளட்சி க்கும் ஒரு குறிப்பிட்ட நிதியை வருடா வருடம் வழங்கினோம் என்றால் அவர்கள் தேவைகளை அவர்கள் செய்து கொள்ள முடியும்.இதை விளக்கமாக பார்ப்போம்.
தமிழ்நாட்டில் உள்ள உள்ளாட்சிகள் எண்ணிக்கை.
1. மாநகராட்சி = 12
2. நகராட்சி = 148
3. பேரூராட்சி = 561
4. ஊராட்சிகள் = 12618
5. ஊராட்சி ஒன்றியம் = 385
மக்கள் நெருக்கம் அளவிற்க்கு ஏற்றார் போல் உள்ளாட்சி களை வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
இதில் குறிப்பாக ஊராட்சி ஒன்றியம், ஊராட்சி, பேரூராட்சி போன்றவை களின் எண்ணிக்கை ஏறக்குறைய 13500 வருகிறது. இவற்றில் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திற்கும் வருடம் 3 கோடியை ஒதுக்கி அவர்கள் அடிப்படை தேவைகள் அதாவது, சாலை, குடிநீர் வசதி, நீர்ப் பங்கீடு, குளம் போன்றவை தூர் வாறுதல், வாய்க்கால், வடிகால் தூர் வாறுதல், அரசுப்பள்ளி மேம்பாடு, தெரு மின் விளக்கு, நூலகம் மேலும் அவர்களுக்கு தேவையானவற்றை செய்துகொள்ளும் படி செய்யலாம்.
இதன்படி பார்த்தால் ஒவ்வொரு வருடமும் ஊராட்சி ஒன்றியத்திற்கு ஆகும் செலவு=1155 கோடி ரூ
அடுத்து ஒவ்வொரு ஊராட்சிக்கும் வருடம் 5 கோடி ஒதுக்க வேண்டும்.
அப்படி பார்க்கையில் வருடம் ஊரட்சிக்கு ஆகும் மொத்த செலவு = ரூ.63000 கோடி
இதே போல் பேரூராட்சிக்கு 7 கோடி வரை ஒதுக்கினால் = ரூ.3927 கோடி
பின் நகராட்சிகளுக்கு 10 கோடி எனில் = ரூ.1480 கோடி
மாநகராட்சிகளுக்கு என்று தனி திட்டங்கள், தனி செயல்பாடுகள் வேணும். எனவே நாம் இதில் சேர்க்க வேண்டியது இல்லை.
எனவே மொத்த உள்ளாட்சிகளுக்கான வருடாந்திர செலவு = ரூ.70000 கோடி
இது நாம் மத்திய அரசிற்கு கட்டும் வரியில் 60% மட்டுமே.
ஆக ஒன்றிய அரசும், மாநில அரசும் இணைந்து இந்த நிதியை கொடுக்க இயலும்.
அப்படி செய்தாலே அடிப்படை வசதிகளில் 80% நிறைவேற்றலாம்.
மேலும் நிதி எவ்ளோ ஒதுக்கப்பட்டு இருக்கிறது என்பது ஒவ்வொருவருக்கும் தெரியும். எனவே நிதியானது ஒரு சிறிய பகுதிக்கு என்னும் போது நிதி யாரிடம் உள்ளது, எவ்ளோ உள்ளது என்பதை பொதுமக்கள் கண்காணிக்க செய்ய முடியும். ஒருவித வெளிப்படை தன்மை இருக்கும்.
மேலும் கிராம சபை கூட்டங்களில் அந்த நிதியை எவ்வாறு பயன்படுத்தலாம் என்ற ஆலோசனைகள் இருக்கும். பொதுமக்கள் நேரடியாக என்ன என்ன தேவைகள் நிறைவேற்றப்படவில்லை என தெரிந்து கொள்ள முடியும்.
இந்த நிதி என்பது அடிப்படை வசதிகளை செய்து கொள்ளவே. மற்றும் சிறிய அளவில் உள்ள புதிய தேவைகளை நிறைவு செய்ய மட்டுமே.
பெரிய நிதியில் நிறுவப்படும் புதிய தேவைகளுக்கு தனி நிதியை தான் பெற வேண்டும்.
இந்த முறையில் செய்யும் போது, ஒருவேளை ஒரு நகராட்சி யில் உள்ள மொத்த குப்பைகளை அகற்ற 5 கோடி வரை செலவு ஆகிறது என்றால் இரண்டு வருடம் காத்திருந்து செய்து கொள்ள முடியும். அதே போல் மாதா மாதம் வேலைக்கு ஆள் அமர்த்தியும் நாம் பராமரிக்க முடியும்.அதற்கான ஊதியத்தையும் வழங்க முடியும்.
எனவே இதை சாத்திய படுத்துவதில் பெரிய பிரச்சனை ஒன்றும் இல்லை. ஆனாலும் இவற்றை இந்த அமைப்பு செய்ய விடாது.
சாத்தியப்படுத்துவதில் சில சிக்கல்கள் உள்ளன.
1. மாநில சுயாட்சி இல்லாமல் இதை நம்மால் சாத்தியப் படுத்த இயலாது. அளவுக்கு மீறி மத்திய அரசிற்கு வரிப்பணம் நாம் கொடுக்கிறோம். ஆனால் அவை நமக்கு எந்த வகையில் திருப்பி கிடைக்கிறது என்று பார்த்தால், பெரிதாக இல்லை.
மத்திய அரசிற்கு கட்டும் வரிப்பணத்தில் 60%தொகையே போதுமானது. இங்குதான் மாநில சுயாட்சி என்பது முக்கியம் ஆகிறது. நாட்டின் பாதுகாப்பு, எரிபொருள், மற்றும் ரூபாய் நோட்டிற்கு மட்டும் இந்திய ஒன்றியத்தை நம்பி இருந்தால் போதுமானது. அதற்கு என்ன தொகையை கொடுக்க வேண்டுமோ அதை மட்டும் கொடுக்கலாம். இப்படி செய்வதன் மூலம் பல்லாயிரம் கோடி மாநில வரிப்பணம் நம் வளர்ச்சி மேம்பாட்டிகற்கு பயன்படும்.
2. அடுத்து அரசியல்வாதிகளின் சுய லாபம்.இந்த உள்ளாட்சி நிதகளுக்காக கொக்கு போன்று காத்திற்குக்கும் எண்ணற்ற அரசியல் பிழைத்தோர் இருக்கும் வரை இது சாத்தியம் இல்லை. அமைச்சர் முதல், நகராட்சி உறுப்பினர் வரை 5 ஆண்டுகளில் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு சொத்துகள் குவிக்கிறார்கள். ருசி கண்ட பூனைகளாக உள்ள அவர்கள் நாட்டின் நிலையை பற்றி எப்படி சிந்திப்பார்கள்.
இருந்தாலும் இப்படி எல்லாம் செய்யலாம் என்பது ஒரு ஆலோசனை. அதை சாத்தியப்படுத்தலும் வரும் காலங்களில் நடக்கலாம்.
இன்றைய எழுச்சி மிகு நேர்மையான தலைமுறை களில் கையில் உள்ளது நம் எதிர்காலம்.
—
கட்டுரை:
மன்னை செந்தில் பக்கிரிசாமி.
பட உதவி: Firmbee.com on Unsplash